எம்.ஐ9. டர்போ

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் சீனாவின் ஜியோமி நிறுவனம் எம்.ஐ. சார்ஜ் டர்போவை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் 27 வாட் பாஸ்ட் சார்ஜை எம்.ஐ 9. மாடலுக்கு அளிக்கிறது. ஆனால் அதைவிட மேம்பட்டதாக 100 வாட் திறன் கொண்ட சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இது விளங்குகிறது.

இப்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5-ஜி சேவை அளிக்கத் தயாராகிவருகின்றன. அதற்கேற்ப மேம்பட்ட தொழில்நுட்பத்திலான சார்ஜரையும் வழங்க முடிவு செய்து ஜியோமி நிறுவனம் இந்த டர்போ வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன். இதில் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

Comments