ரெட்மி நோட் 8 புரோ

ஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுகளில் ரெட்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ரெட்மி நோட் 8 புரோ மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. பிராசஸரை கொண்டது. இதில் லிக்விட் கூல் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்க உதவுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் விளையாடினாலும் ஸ்மார்ட்போன் சூடாகாது. செயல் திறனும் குறையாது.

இதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு பிக்ஸெல் கொண்ட கேமராவை கொண்ட மாடலாக இது விளங்குகிறது. கேமரா சென்சார் நுட்பமானது சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது ஐஸோஸெல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

இதில் 6.4 கோடி பிக்ஸெல் உள்ளது. இந்த கேமரா மூலம் 3.26 மீட்டர் உயரமுள்ள புகைப்படம் எடுக்க முடியும். இதில் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் (மினரல் கிரோ, பேர்ல் ஒயிட், பாரஸ்ட் கிரீன்) வந்துள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதில் ஸ்பிளாஷ் புரூப் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் திடீரென ஏற்படும் மழை, வியர்வை போன்றவற்றால் பாதிப்படையாது. இதில் விரைவாக சார்ஜ் ஏற வசதியாக 18 வாட் டைப் சி இடவசதி உள்ளது.

ரெட்மி நோட் 8 மாடலைப் பொருத்தமட்டில் இதில் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி. உள்ளது. விரைவாக சார்ஜ் ஆக வசதியாக இதனுடன் 18 வாட் சார்ஜிங் வசதி அளிக்கப்படுகிறது. அத்துடன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக் ஆகியன தரப்படுகின்றன. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் வசதி உள்ளது.

Comments