7-வது தலைமுறை ஐ-பேட்


இம்முறை 10.2 அங்குல டேப்லெட்டையும் (ஐ-பேட்) இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.29,900. இந்நிறுவனத்தின் 7-வது தலைமுறை ஐ-பேட் ஆகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இது சற்று அகலமானது. இதில் ஸ்மார்ட் கீபோர்டு வசதி, ஆப்பிள் பென்சில் உதவி, முன்னேறிய கேமராக்கள் மற்றும் உணர் கருவிகள் ஆகியன உள்ளன. இதில் முகப்புப் பக்கத்தில் பல்வேறு செயலிகள் இருக்கும். ஆப்பிள் பென்சில் உதவியோடு விரைவாக செய்திகளை பதிவு செய்து அனுப்பமுடியும். இது 32 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்பகுதியில் 1.2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் இரட்டை மைக்ரோபோன் உள்ளது.

இதனால் ஒன்று ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியும். மற்றொன்று ஸ்பீக்கராக செயல்படும். இதன் எடை அரை கிலோவுக்கும் (483 கி.கி) குறைவானது. இது முழுவதுமாக சார்ஜ் ஆக 10 மணி நேரம் தேவைப்படும். இது சில்வர், ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். 32 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவக வசதி மாடல் விலை ரூ.29,900, 32 ஜி.பி. வை-பை இணைப்பு கொண்ட மாடல் விலை ரூ. 37,900, 128 ஜி.பி. மற்றும் வை-பை இணைப்பு மாடல் ரூ.40,900.

Comments