ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 5

ஸ்மார்ட்போனுடன் சீரிஸ் 5 பிரிவில் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்டினா டிஸ்பிளேயைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.40,900. இதில் மேம்பட்ட அம்சமாக இருக்குமிடத்தைக் காட்டும் (லொகேஷன்) வசதி உள்ளது.

இதற்கென தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கு செல்கிறோம், எந்த திசையில், எந்த கோணத்தில் செல்கிறோம் என்பதையும் துல்லியமாகக் காட்டிவிடும். டைட்டானியம் மேல் பகுதியைக் கொண்டது. அத்துடன் தங்க நிறத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்பகுதி கொண்ட கடிகாரமும் வந்துள்ளது.

Comments