ஐ-போன் 11 , 11 புரோ மற்றும் 11 புரோ மேக்

செப்டம்பர் 10-ந் தேதி ஆப்பிள் ரசிகர்களுக்கு உற்சாகமான நாளாக அமைந்துவிடும். ஆம் ஆண்டுதோறும் இந்த நாளில்தான் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம். வழக்கம்போல இந்த ஆண்டும் கூபர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளைக் காணவும், அதன் செயல்பாடுகளை நேரில் கண்டு ரசிக்கவும் திரண்ட மக்கள் ஏராளம். அதைப் போலவே நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமளிக்காத வகையில் ஆப்பிள் ஐ-போன் 11 மாடலை அறிமுகப்படுத்தியது. அத்துடன் ஐ-போன் 11 புரோ மற்றும் ஐ-போன் 11 புரோ மேக் ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ-போன் 11 மாடலில் 3 கேமராக்கள் உள்ளது சிறப்பம்சமாகும். இதில் ஏ13 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முந்தைய ஐ-போன்களைக் காட்டிலும் இதன் செயல்பாடு 20 சதவீதம் அதிகமாக இருக்கும். 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன. இவை குறைவான வெளிச்சத்திலும் துல்லியமாக படம் எடுக்க உதவும். அத்துடன் 4 மீட்டர் ஆழமான நீரில் 30 நிமிடம் வரை கிடந்தாலும் பாதிப்படையாது. நீர் புகாத தன்மை கொண்டது. ஐ-போன் 11 புரோ மற்றும் ஐ-போன் 11 புரோ மேக் ஆகிய மாடல்களில் பின்புறமும் கண்ணாடியால் ஆனது.

ஐ-போன் 11 முப்பரிமான (3டி) தொடு உணர் செயல்பாட்டைக் கொண்டது. முந்தைய மாடலில் உள்ள பேட்டரியைக் காட்டிலும் இதன் செயல்பாடு கூடுதலாக 4 மணி நேரம் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் விரைவாக சார்ஜ் ஆக 18 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டரும் அளிக்கப்படுகிறது. இரட்டை சிம் வசதி (நானோ சிம் மற்றும் இ-சிம்) கொண்டது.

ஐ-போன் 11 புரோ, ஐ-போன் 11 புரோ மேக்ஸ் மாடல் 64 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் மற்றும் 512 ஜி.பி. நினைவகம் கொண்டதாக உள்ளன. இவை மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் தங்க நிறத்தில் வந்துள்ளது. இதன் விலை ரூ.99,900 மற்றும் ரூ.1,09,000. இது 6 அழகிய கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது.

இது 6.1 அங்குல திரையைக் கொண்டது. இதில் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே உள்ளது. இதனால் இதில் படக் காட்சிகள் துல்லியமாக பதிவாகும். இதில் ஐ.ஓ.எஸ். 123 இயங்குதளம் உள்ளது. ஐ-போன் 11 மாடல் விலை ரூ.64,900 ஆகும். இது பர்பிள், பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Comments