லெனோவா இஸட்6 புரோ

லெனோவாநிறுவனம் புதிதாக 5- ஜியில் செயல்படும் ஸ்மார்ட்போனையும் இஸட்6 புரோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்5 மோடம் வசதி உள்ளது. இதன் தொடுதிரை அமோலெட் (6.39 அங்குலம்) நுட்பம் கொண்டது. இதன் பிராசஸர் 855 எஸ்.ஓ.சி. கொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

இதன் பின்பகுதியில் நான்கு கேமராக்கள் உள்ளன. இவை முறையே 48 மெகா பிக்ஸெல், 16 மெகா பிக்ஸெல், 8 மெகா பிக்ஸெல் மற்றும் 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. மொத்தம் 74 மெகா பிக்ஸெல் இருப்பதால் கேமராவுக்கு நிகரான துல்லியமான படங்கள் இதில் பதிவாகும். முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ள இதில் இரட்டை சிம் வசதி உள்ளது. வை-பை 802.11, புளூடூத் 5.00, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 4 ஜி சப்போர்ட் வசதி ஆகியன இதில் உள்ளன. ஆக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கம்பாஸ், மாக்னெடோமீட்டர், கைராஸ்கோப், பிராக்ஸிமிடி சென்சார், விரல் ரேகை பதிவு சென்சார் ஆகியன உள்ளன. பேஸ் அன்லாக் வசதியும் இதில் உள்ளது.

Comments