கூல்பேட் கூல் 3 பிளஸ்

இந்திய இளைஞர்கள் ஸ்மார்ட்போனில் எதிர்பார்ப்பது அதன் வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றைத்தான். இவை இரண்டையும் பூர்த்தி செய்யும் வகையில் கூல்பேட் நிறுவனம் கூல் 3 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் 2.0 கிகாஹெர்ட்ஸ் பிராசஸரை உடையது. 3 ஜி.பி. ரேம் வசதியோடு 5.7 அங்குல டியூடிராப் தொடு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு கண்கவர் வண்ணங்களில் அதாவது ஓஷன் புளூ, செர்ரி பிளாக் ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவக வசதியோடும் மற்றொன்று 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதியோடும் வந்துள்ளது.

இவற்றின் விலை முறையே ரூ.6,000 மற்றும் ரூ.6,500 ஆகும். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திஉள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூல்பேட் நிறுவனம் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூல்பேட் கூல், கூல்பேட் மெகா, கூல்பேட் நோட் சீரிஸ் ஆகியன இந்நிறுவனத் தயாரிப்புகளாகும்.

தற்போது அறிமுகமாகிஉள்ள கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மேம்பட்ட தயாரிப்புகளை அளிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் முயற்சி வெளிப்பட்டுள்ளது. 8.2 மி.மீ தடிமன் கொண்டதாக எடை குறைவானதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விரல் ரேகை சென்சார் மற்ற மாடல்களில் உள்ளதைவிட 12 சதவீதம் விரைவாக செயல்படக் கூடியது. இதில் 5.0 புளூடூத் இணைப்பு, வை-பை, ஜி.பி.எஸ்., கிராவிடி சென்சார், லைட் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய வசதியாக இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வசதியோடு வந்துள்ளது. செல்பி பிரியர்களுக்காக 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்பக்கம் உள்ளது. குறைந்த விலையில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நிச்சயம் நம்பலாம்.

Comments