எல்.ஜி. ஸ்மார்ட்போன் - எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் டபிள்யூ. சீரிஸில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) கொண்ட மாடலாக இவை வந்துள்ளன. இதனால் நைட் மோட், போர்ட்ரைட், பொகே, வைட் ஆங்கிள் ஆகிய மோட் வசதிகள் உள்ளன. ஹெச்.டி. புல் விஷன் டிஸ்பிளே (தொடுதிரை) வசதி கொண்டது. நீண்ட நேரம் செயலாற்ற இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

இதில் டபிள்யூ 10 மற்றும் டபிள்யூ 30 மாடல் உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளன. டபிள்யூ 30 புரோ மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எல்.ஜி. டபிள்யூ மாடல் விலை ரூ.9 ஆயிரமாகும். டபிள்யூ 30 மாடல் விலை ரூ.10 ஆயிரமாகும். எல்.ஜி. டபிள்யூ 30 மாடலில் 6.26 அங்குல திரை உள்ளது. டபிள்யூ 10 மாடல் 6.19 அங்குல திரையைக் கொண்டது. இவை இரண்டுமே மீடியா டெக்ஹீலியோ பி22 பிராசஸரைக் கொண்டது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது.

டபிள்யூ 30 மாடலில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. இரண்டாவது 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. மூன்றாவது கேமரா 2 மெகா பிக்ஸெல்லைக்கொண்டது. ஆகமொத்தம் 27 மெகா பிக்ஸெல் கேமராக்கள் பின்பகுதியில் உள்ளன. முன்பகுதியில் செல்பி பிரியர்களுக்காக 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

டபிள்யூ 10 மாடலில் இரட்டை கேமரா உள்ளது. இதில் முதலாவது 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும் கொண்டது. முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படுபவையாகும்.

பிரீமியம் மாடலான எல்.ஜி. 30 புரோ மாடல் 6.21 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. இதன் பின்பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும், மூன்றாவது 8 மெகாபிக்ஸெல்லும் கொண்டவை. முன்பகுதியில் 16 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது.

Comments