You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: உங்கள் ராசி பலன் - 28.5.2021 முதல் 3.6.2021 வரை

Friday, May 28, 2021

உங்கள் ராசி பலன் - 28.5.2021 முதல் 3.6.2021 வரை

மேஷம்
உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். தொழில் செய்பவர்கள், அவசரமாகச் செய்ய வேண்டிய காரியங்களால் அதிக அலைக்கழிப்புகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சொத்துப் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உறவுகளின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மாரியம்மனுக்கு தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்

எதிர்பார்த்த நண்பர்களிடம் இருந்து உதவி கிடைப்பது கடினம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அவசரப்பட்டு செய்த வேலை ஒன்றினால் பிரச்சினையை சந்திக்க நேரிடும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் பணியை விரைந்து முடிக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் கடன் தொல்லை இருக்கும். அனைவருடனும் சுமுகமாகப் பழகுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை நெய் தீபமிட்டு வணங்குங்கள்.

மிதுனம்

நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும், எடுக்கும் முயற்சிகளில் தாமதங்களைத் தவிர்க்க இயலாது. அலுவலகப் பணியின் நிமித்தம் வெளியூர் செல்லும் நிலை வரலாம். தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்களால் தொழில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தினரிடம் சுமுகமாக நடந்து கொண்டால், பிரச்சினைகளை தவிர்க்கலாம். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

கடகம்

கடினமான காரியங்களை தகுந்த நபர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படக்கூடும். தொழில் செய்பவர்களுக்கு, பணிச்சுமையால் ஓய்வுநேரம் குறையும். குடும்ப பிரச்சினைகளைக் கூடிப் பேசி சரி செய்வீர்கள். பெண் களுக்கு ஆரோக்கிய குறை ஏற்படும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுங்கள்.

சிம்மம்

பல செயல்கள் உங்கள் விருப்பம் போல நடைபெறுவதால், மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த அலுவலகக் கடன் கிடைக்கும். தொழில் செய்பவர்கள், பணியை விரைவாக செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளை, பெண்களே சமாளித்துவிடுவார்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரம் சொல் லுங்கள்.

கன்னி

உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகமாகும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். தொழில் செய்பவர்கள், பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழில்நுட்பம் அறிந்த உதவியாளர்களை பணி யமர்த்துவீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். உறவினர் வருகையால் செலவு கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமிதேவிக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.

துலாம்

தனவரவு தள்ளிப் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். சக ஊழியரின் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். தொழில் செய்பவர்கள், பணியில் பரபரப்பாக ஈடுபட்டாலும் எதிர்பார்த்த வருவாய் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

விருச்சிகம்

நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரி களின் விருப்பப்படி முக்கிய வேலையை உடனடியாக செய்ய நேரிடும். தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். தொல்லைகளை சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

தனுசு

முயற்சிகளில் முன்னேற்றமான பலன் காண்பது கடினம். உத்தியோகத்தில் சிலருக்கு, பணிபுரியும் அலுலகத்திலேயே பதவி உயர்வு கிடைக்கப்பெறும். தொழில் செய்பவர்கள், புதிய யுக்தி களைக் கையாண்டு வேலைகளை சுலபமாக முடிப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த வாரம் வியாழக்கிழமை, ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மகரம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள், பணிகளில் தவறு ஏற்பட்டு உயரதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாவீர்கள். தொழில் செய்பவர் களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கவனக்குறைவால் பணிகளில் சிறுசிறு தவறுகளும் நிகழலாம். குடும்பத்தில் சிறு சிறு கடன் தொல்லை ஏற்படும். அவற்றை பெண்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் திங்கட்கிழமை, மகாலட்சுமிக்கு நெய் தீபமிட்டு வணங்கி வாருங்கள்.

கும்பம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள், செய்யும் வேலைகளில் சிரமங்கள் இருந்தாலும், உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஈடு படுபவர்களுக்கு தொல்லைகள் இருந்தாலும், ஆதாயம் குறையாது. குடும்பச் செலவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ‘ஶ்ரீராம ஜெயம்’ எழுதி வாருங்கள்.

மீனம்

உத்தியோகஸ்தர்களில் சிலர் தற்போதைய வேலையை விட்டு விட்டு, அதிக ஆதாயமுள்ள வேலைக்குச் செல்ல முயற்சிப்பார்கள். தொழில் செய்பவர்கள், செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை மீண்டும் சரி செய்து கொடுக்க நேரலாம். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பெண்கள் உயர்வு பெறுவார்கள். இந்த வாரம் புதன்கிழமை, சுதர்சனருக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

No comments: