You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: கும்பம் வைகாசி மாத ராசிபலன்கள்

Monday, May 10, 2021

கும்பம் வைகாசி மாத ராசிபலன்கள்

கும்ப ராசி நேயர்களே!

பிலவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனிபகவான் விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். ஏழைரச் சனி தொடங்கிவிட்டது என்பதால் எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். உறவினர்கள் பகை உருவாகும்.

சனியின் வக்ர இயக்கம்

உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனிபகவான். அவர் மாதத் தொடக்கத்தில் இருந்தே வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். அது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். இல்லத்தில் திடீர் திடீரென மின்சாதனக் கருவிகள் மற்றும் வாகனங்கள் பழுதாகி செலவை ஏற்படுத்தும். பொதுவாக ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எதைச் செய்தாலும் கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டும்.

செவ்வாய்-சனி பார்வைக் காலம்

உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு விரய ஸ்தானத்திலுள்ள சனியைப் பார்க்கின்றார். எனவே சகோதர வர்க்கத்தினரால் விரயங்கள் ஏற்படும். ‘கட்டிடம் கட்டி வாடகைக்கு விடமுடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பிள்ளைகள் வழியிலும், சிறுசிறு விரயங்கள் உண்டு.

புத-சுக்ர யோகம்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். இந்த இரண்டு கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் ஒன்று கூடிச் சஞ்சரிக்கின்றன. புத சுக்ர யோகமும், புத ஆதித்ய யோகமும் செயல்படும் இந்த நேரத்தில் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சிக்குரியதாக அமையும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

மிதுன-சுக்ரன் சஞ்சாரம்

மே 29-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து சுக்ர மங்கள யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக உடன்பிறப்புகளுக்கு திருமண யோகம் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.

கடக-செவ்வாய் சஞ்சாரம்

ஜூன் 3-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுவதால் சகோதர வர்க்கத்தினருடன் பிரச்சினைகள் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் திடீரென விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காது. வேலைப்பளு கூடும். திடீரென நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 15, 21, 24, 25, 28, 29, ஜூன்: 4, 5, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்

பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. இடமாற்றங்கள், எதிர்பாராத விதத்தில் வரலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் உடன்பிறப்புகள் உதவிகள் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சியும் சிலருக்கு கைகூடும்.

No comments: