You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: மேஷம் வைகாசி மாத ராசிபலன்கள்

Monday, May 10, 2021

மேஷம் வைகாசி மாத ராசிபலன்கள்

மேஷ ராசி நேயர்களே!

பிலவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகின்றார். மாதத் தொடக்கத்தில் குருமங்கள யோகம், புத சுக்ர யோகம் போன்ற யோகங்களும் ஏற்படுவதால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

சனியின் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் மாதத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். எனவே நடைபெறும் தொழிலில் சிறுசிறு மாற்றங்களைச் செய்ய நேரிடலாம். பங்குதாரர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

செவ்வாய்-சனி பார்வைக் காலம்

உங்கள் ராசிநாதன் மற்றும் 8-ம் இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் மாதத் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். பொதுவாக சனி, செவ்வாயின் பார்வை அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். ஆனால் இப்பொழுது அதிசார கதியில் கும்பத்தில் குரு வீற்றிருந்து செவ்வாயைப் பார்க்கின்றார். எனவே செவ்வாயின் கடுமை குறையும். அவரது பார்வை புனிதமைடந்து சனியின் மீது பதிவதால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். செவ்வாய் தைரியகாரகன் என்பதால் துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமணம் கைகூடும்.

புத-சுக்ர யோகம்

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இந்த இரண்டு கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் ஒன்று கூடிச் சஞ்சரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியனும், அவர்களோடு இணைந்து சஞ்சரிப்பது மிகமிகச் சிறப்பாகும். எனவே ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். அரசுப் பணியில் சேர முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.

மிதுன-சுக்ரன் சஞ்சாரம்

மே 29-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து சுக்ர மங்கள யோகத்தை உருவாக்குகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டிலிருந்தும் அழைப்புகள் வரலாம்.

கடக-செவ்வாய் சஞ்சாரம்

ஜூன் 3-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வாகன மாற்றங்கள், இடமாற்றங்கள் ஒரு சிலருக்கு வரலாம். உடன்பிறப்புகளின் நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். வீண் விரயம் உண்டு.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 15, 17, 18, 19, 28, 29, ஜூன்: 2, 3, 9, 10, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானமும் வரும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் தகுந்த நேரத்தில் உதவி செய்வர். செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

No comments: