You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! - 21.5.2021 முதல் 27.5.2021 வரை

Friday, May 21, 2021

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! - 21.5.2021 முதல் 27.5.2021 வரை


மேஷம்
உத்தியோகத்தில் சிலருக்குப் பொறுப்புள்ள பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. உயரதி காரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, அதிக ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உங்கள் சாதூர்யத்தால் சமாளித்து விடுவீர்கள். பயணங்கள் ஏற்படும். இந்த வாரம் சனிக்கிழமை, சுதர்சனப் பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழி படுங்கள்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பணிகளில் ஏற்படும் சிறிய தவறுகள் பிரச்சினைகளை உண்டாக்கலாம். தொழிலில் அலைச்சல் அதிகமாகும். ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் கடன்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். பெண்களுக்குள், வீண் பேச்சினால் மனக்கசப்பு உருவாகலாம். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, மாரியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைகள் அதிகமாகும். தள்ளிவைத்த வேலையை உயரதிகாரிகளின் விருப்பப்படி உடனடியாக செய்ய நேரிடும். தொழில் செய்பவர்களில் சிலருக்கு, முக்கியமானவர்களால் அவசர வேலைகள் வந்து சேரும். குடும்ப செலவுகளைக் குறைக்க குடும்பத்தாருடன் திட்டமிடுவீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் சூட்டி வழிபட்டு வாருங்கள்.

கடகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரி களின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். தொழில் செய்பவர்களுக்கு, பணிச் சுமை அதிகரிக்கும். அதன்காரணமாக ஓய்வு நேரம் குறையலாம். குடும்ப செலவுகளுக்கு, நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்களுக்கு ஆரோக்கியம் சீராகும். இந்த வாரம் வியாழக்கிழமை, ஹயக்ரீவப் பெரு மாளுக்கு துளசி மாலை சூட்டுங்கள்.

சிம்மம்

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, எதிர்பாராத பதவி உயர்வு ஏற்படலாம். தொழில் செய்பவர்கள், ஓய்வு காலம் இல்லாமல் பணிகளில் ஈடுபடுவார்கள். குடும்பம் சீராக நடைபெற்று வரும். கடன் தொல்லைகளினால் பாதிப்பு ஏற்படாது. குல தெய்வ வழிபாடுகள் செய்ய குடும்பத்துடன் சென்று வரத் திட்டமிடுவீர்கள். இந்த வாரம் சனிக் கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.

கன்னி

உத்தியோகஸ்தர்கள் விடுமுறையில் உள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்யும் நிலை உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், அவரால் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பழைய கடன்கள் தீரும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

உத்தியோகத்தில், உயரதிகாரியின் ஆதரவுடன் சில சலுகைகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முக்கிய வேலையை முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறு சிறு பிரச்சினைகளும் தலைகாட்டும். பெண் களுக்குள் மனக்கசப்பு உண்டாகும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடலாம்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்கள், முயற்சியின் பேரில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவார்கள். வீண் பேச்சுகளால் தொல்லைகள் உண்டாகலாம். தொழில் செய்பவர்களுக்கு, அதிக வேலைகளும், பொருள் வரவும் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பெண்களுக்குள் வீண் வாதங்களால் மனக்கசப்பு ஏற்படும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிடுங்கள்.

தனுசு

உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர் ஒருவரின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். தொழில் செய்பவருக்கு, பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவைகள் சாமர்த்தியமாக சமாளிக்கப்படும். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டு வாருங்கள்.

மகரம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் பொறுப்பும், செல்வாக்கும் உள்ள பதவிகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு, பணிச்சுமை அதிகரிக்கும். அவசர வேலைகளால் ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு நிலவும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகம் மூலம் பணவரவுகள் ஏற்படலாம். இந்த வாரம் புதன்கிழமை, லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

கும்பம்

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்க்கும் அலுவலகக் கடன் தொகை, கைக்கு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், அதிக வேலையும், அவற்றால் பொருள் வரவும் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டாலும், அவை சுலபமாக சமாளிக்கப்படும். கலைஞர்களுக்கு சில வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாரம் திங்கட்கிழமை, அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

மீனம்

உத்தியோகத்தில் செல்வாக்குள்ள பொறுப்புகள் வந்து சேரும். நிறுத்தி வைத்த வேலையை உயரதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளரின் அவசர வேலையை முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பம் சீராக நடந்தாலும் சிறுசிறு தொல்லைகளும் தலைகாட்டலாம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு வழிபடுங்கள்.

No comments: