You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! - 14.5.2021 முதல் 20.5.2021 வரை

Friday, May 14, 2021

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! - 14.5.2021 முதல் 20.5.2021 வரை


மேஷம்
வருமானம் பெறுவதில் அலைச்சல்கள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக இருங்கள். தொழிலில், புதிய வாடிக்கையாளர்களால் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச் சினைகளை சமாளித்து விடுவீர்கள். பெண் களுக்கு, உடல்நலனில் அக்கறை தேவை. இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.

ரிஷபம்

திட்டமிட்ட செயல்களில் முயற்சியால் முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். தொழிலில் வேலைகள் பரபரப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். சுபகாரியம் நடை பெறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடலாம்.

மிதுனம்

புதிய முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் நன்மை ஏற்படலாம். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். தொழில் செய்பவர்கள், வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்படும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.

கடகம்

பல நாட்களாக திட்டமிட்ட காரியத்தை செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி களின் விருப்பப்படி முக்கிய காரியம் ஒன்றை செய்வீர்கள். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள். குடும்பத்தார் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை இருக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு வணங்குங்கள்.

சிம்மம்

தளர்ச்சி அடைந்த காரியங்களில் தக்க உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வும், அலுவலகத்திற்குள்ளேயே இடமாற்றமும் ஏற்படலாம். தொழில் செய்பவர்களுக்கு, பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பம் சீராக நடந்தாலும் , சிறு சிறு பிரச்சினைகளும் தலைதூக்கும். கடன்களால் மனக்கவலை உருவாகும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.

கன்னி

தடைபட்ட காரியங்களை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சில காரியங்கள் நன்றாக நடைபெறும். தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பம் நன்றாக நடைபெறும். சிறு பிரச்சினைகளும் இருக்கும். கடன் தொல்லை இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

துலாம்

தளர்வடையும் செயல்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு பலனளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில், பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். தவறுகளை சரிசெய்வீர்கள். குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளுடன் நடைபெறும். கடன் தொல்லை இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. இந்த வாரம் புதன்கிழமை, புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

விருச்சிகம்

சில காரியங்களில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி ஒரு முக்கிய வேலையை அவசரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிலருக்கு ஆரோக்கிய குறை ஏற்படலாம். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். இந்த வாரம் திங்கட்கிழமை, அம்பாள் சன்னிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

தனுசு

அதிக வேலைப்பளுவால் அவதிப்பட நேரலாம். உத்தியோகஸ்தர்கள் செய்யும் சிறு தவறும் உயரதிகாரிகளுக்கு பெரிதாகத் தெரியும். தொழில் செய்பவர்கள், வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும் ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் பிரச்சினை இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது. சிறிய கடன்களை பெண்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

மகரம்

புதிய முதலீடுகள் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரி களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சலுகைகளை அனுபவிப்பீர்கள். தொழிலில் பணிச்சுமை காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டுங்கள்.

கும்பம்

உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வில் செல்லக்கூடும். சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்தினாலும் வருமானம் தள்ளிப்போகும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்கும். சுபகாரியம் நடைபெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ரனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் அதிக கவனமாக இருந்தாலும், சிறு சிறு தவறுகள் ஏற்படத்தான் செய்யும். தொழிலில் வேலைகள் இருந்தாலும், வருமானம் கிடைப்பது தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படலாம். பழைய கடன் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.

No comments: