You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: December 2020

Tuesday, December 22, 2020

தீப முகங்களும்.. பலன்களும்..


* இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.

* மூன்று முகம் - காரிய வெற்றி, பராக்கிரமம், தைரியம் கிட்டும்.

* நான்கு முகம் - நிலம், வீடுகள், வாகனங்கள், கால் நடை விருத்தி, வியாபார அபி–வி–ருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்.

* ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வ சித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.

* வாரம் ஒரு நாள் வெள்ளி அன்றாவது பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.

* தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்–ணாக இருந்–தால், வளை–யல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றி வகட்டில் குங்குமம் கண்–டிப்பாக அணிந்திருக்க வேண்டும்
* தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம் , பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

* தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகம், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.

Monday, December 14, 2020

மீனம் மார்கழி மாத ராசிபலன்கள்


மீனம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவர் நீச்சம் பெற்றாலும்அவரது பார்வை பலன் நன்மைகளை வழங்கும். அதன் அடிப்படையில் 3,5,7 ஆகிய இடங்களை குரு பார்ப்பதால் சகோதரர்களால் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். ‘ராகுவைப் போல கொடுப்பவனுமில்லை’ என்பது பழமொழி. எனவே வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பல நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு வரவழைத்துக் கொடுப்பார். குறிப்பாக இதுவரை செய்த முயற்சிகளில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வழியில் ஒரு நல்ல தகவல் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணிபுரியுமிடத்திலிருந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரச் சனியின் சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு வருகின்றார். அது உங்களுக்கு லாப ஸ்தானமாகும். எனவே தொழில் முன்னேற்றமும், அதன் மூலம் எதிர்பார்த்த லாப மும் கிடைக்கும். எதிரிகள் விலகுவர். விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். உயரதிகாரிகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வாங்கிய கடனைக் கொடுப்பத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மனக்குழப்பம் அகலும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

மகர புதனின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானாவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். 4-க்கு அதிபதி 11-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். புத்தி சாதுர்யத்தால் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். தடுமாற்றங்கள் அகலும். தனவரவு பெருகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாமன், மைத்துனர் வழியில் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும்.

தனுசு சுக்ரனின் சஞ்சாரம்

ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தனுசிற்கு வரும் இந்த நேரம் சகோதரர்களால் விரயம் ஏற்படலாம். பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். நல்லது எது, கெட்டது எது? என்று ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. தொழில் வளர்ச்சியில் அக்கறை அதிகம் காட்டுவதன் மூலமே ஆதாயம் கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர்: 18,19,25,26,30,31 ஜனவரி: 9,10,11 மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புண்ணிய காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் பாசமும் நேசமும் அதிகரிக்கும். பிள்கைளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவீர்கள். உறவினர்களின்் ஒத்துழைப்போடு சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு வாகனம் மற்றும் வீடுகள் வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவலும் வரலாம். நடராஜர் வழிபாடு நன்மையைத் தரும்.

கும்பம் மார்கழி மாத ராசிபலன்கள்


கும்பம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவான் சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களோடும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதாரப் பிரச்சினை அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தன லாபாதிபதியான குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரயங்களும் அதிகரிக்கும்.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். மேலும் குருவின் பார்வை ராகு மீது பதிகின்றது. எனவே இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் சூழலும், சுபவிரயங்களும் உண்டு. உறவுகளிலிருந்த பிணக்குகள் அகலும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைக்கும். திடீரென அறிமுகமான ஒருவரால் பெரியளவில் பயனடைவீர்கள்.

மகரச் சனியின் சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடம் எனப்படும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகின்றார். இது ஏழரைச் சனியின் தொடக்கமாகும். முதல் இரண்டரை ஆண்டு விரயச்சனியின் ஆதிக்கம் வருகின்றது. இதில் உங்களுக்கு முதல் சுற்றாக அல்லது இரண்டாவது சுற்றா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரண்டாவது சுற்றாக இருந்தால் பொங்கு சனி பலமாக இருந்தால் நற்பலன்கள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் கொஞ்சம் விழப்புணர்ச்சி தேவை. நண்பர்களில் நம்பிக்கைக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

மகர புதனின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த புதன் டிசம்பர் 30-ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏற்கனவே அங்கு உங்கள் ராசிக்கு 12-க்கு அதிபதியான சனி பகவான் இருக்கின்றார். அவரோடு 6-க்கு அதிபதி புதன் சேரும்பொழுது ‘விபரீத ராஜயோகம்’ செயல்படும். எனவே திட்டமிடாத காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திறமைமிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும்.

தனுசு சுக்ரனின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கின்றார். எனவே இக்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களால் விரயம் உண்டு. பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். செய்யும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டே இருக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்வது நல்லது. வாகனப் பழுதுகளும் அதனால் விரயங்களும் உண்டு.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி, அனுமன் ஆகியோரை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: டிசம்பர் 16, 17, 22, 23, 28, 29 ஜனவரி 7, 8, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரய குருவாக இருப்பதால் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். கணவன்-மனைவிக்குள் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச்செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும்.

மகரம் மார்கழி மாத ராசிபலன்கள்


மகரம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஏழரைச் சனியில் விரயச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. ராசியிலேயே குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். குரு பார்வையால் மனக்குழப்பம் அகலம். தனவரவு திருப்தி தரும். இம்மாதம் சனிப்பெயர்ச்சி நிகழவிருப்பதால் யோக பலன்கள் உங்களுக்கு வரப்போகின்றது. ஜென்மச் சனியாக சனி பகவான் வரும்பொழுது கடந்த காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை ஈடுசெய்வார். உங்கள் புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வ நிலையும் உயரும்.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் வீற்றிருக்கின்றார்கள். பஞ்சம ராகுவால் பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம். கல்யாணம், மேற்படிப்பு, உத்தியோக வாய்ப்பு போன்றவற்றிற்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ராகு-கேதுக்களின் ஆதிக்கத்திற்குள் உங்கள் ராசியும் அடைபட்டிருக்கின்றது. எனவே பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். சர்ப்பக் கிரகத்திற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம், நல்ல நேரம்தான். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஆரம்பமாகின்றது. உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வருவதும், மருத்துச் செலவுகளை மேற்கொள்வதும் தவிர்க்க முடியாததாகும். இருப்பினும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். மேலதிகாரிகளின் எண்ணங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் மனதில் இடம்பெறுவீர்கள். தொழில் நடத்துபவர்கள் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி காண்பர். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானாதிபதி விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, உத்தியோகம் சம்பந்தமாகவோ நீங் கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடுவதோடு, கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காகவும் செலவிட நேரிடும். பெண்வழிப் பிரச்சினைகள், குறிப்பாக சகோதரிகளின் வாயிலாக ஏற்பட்ட சச்சரவுகள் சுமுகமாக முடியும். ‘தொழில் வளம் சிறப்பாக அமைய, தொழில் நடைபெறும் இடத்தை மாற்றலாமா?’ என்று யோசிப்பீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 20, 21, 25, 26, ஜனவரி: 5, 6, 9, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஜென்ம குருவால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். ஒரு தொகை செலவழிந்த பின் னரே, அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அனுகூலங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

தனுசு மார்கழி மாத ராசிபலன்கள்


தனுசு

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் 2-ம் இடத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியிலேயே புதன், சூரியன் ஆகிய கிரகங்களும் இணைந்திருக்கின்றன. எனவே இம்மாதத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமிது.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் இருக்கின்றார்கள். உங்கள் ராசியும், ராசிநாதன் குருவும், ராகு-கேதுக்களின் ஆதிக்கத்திற்குள் அடைபட்டிருக்கின்றன. என்னதான் குருப்பெயர்ச்சியானாலும், இந்த சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் உங்களுக்கு மன நிம்மதியைக் குறைக்கலாம். எதிர்பாராத விதத்தில் சிக்கல்களும், சிரமங் களும் வந்து சேரலாம். எனவே வரும் பிரச்சினைகள் நல்லவிதமாக முடிவடைய நீங்கள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசியில் ஜென்மச் சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி குடும்பச் சனியாக, அதாவது பாதச் சனியாக மகர ராசிக்கு செல்கின்றார். அங்கு சுமார் இரண்டரை ஆண்டு காலம் வீற்றிருந்து குடும்ப முன்்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகி வருவதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் இனிமாறும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப்போகின்றார். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு கைகூடும். வங்கிகளில் அல்லது வள்ளல்களிடம் தொழிலை விரிவுசெய்ய வேண்டுமென்று உதவி கேட்டிருந்தால் அதுவும் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்புகள் உயரும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி உங்கள் ராசிக்கு வரப்போகின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ர பகவான் பகை கிரகமாக இருந்தாலும், ஆதிபத்ய அடிப்படையில் பார்க்கும் பொழுது நற்பலன்களையே வழங்க வேண்டும். தொழிலில் லாபம் சிறப்பாக கிடைக்கும். அதனைக் கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். வாங்கிய கடனையும் கொடுத்து நிம்மதி காண்பீர்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 18, 19, 21, 22, ஜனவரி: 3, 4, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்களும் உண்டு. பிள்ளைகளின் கல்யாண காரியங்கள் முடிவடைவதற்கான அறிகுறிகள் தென்படும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சாதகமான நிலை உருவாகும். கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உத்தியோக மாற்றங்கள் உருவாகலாம். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

விருச்சிகம் மார்கழி மாத ராசிபலன்கள்


விருச்சிகம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சுக்ரனும், கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். 7-ல் ராகுவும், 6-ல் சொந்த வீட்டில் ராசிநாதன் செவ்வாயும் சஞ்சரிக்கின்றார்கள். தன ஸ்தானத்தில் குரு-சனி பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால் பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக் கடுக்காக வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கூடும்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் ரிஷப ராசியில் ராகுவும், ஜென்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். இருப்பினும் ஞானகாரகன் கேது ஜென்மத்தில் இருப்பதால் அறிவாற்றல் பளிச்சிடும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். குரு பார்வை சப்தம ஸ்தானத்திலுள்ள ராகு மீது பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு பொருளாதார விருத்தியை அதிகரித்துக்கொள்ள முன்வருவீர்கள்.

மகரச் சனி சஞ்சாரம்

உங்கள் ராசிப்படி ஏழரைச் சனியின் ஆதிக்கம் இதுவரை நடைபெற்று வந்தது. டிசம்பர் 26-ந் தேதி சனி விலகுகிறது. எனவே இனி நல்ல நேரம் தொடங்குகின்றது. நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல தகவல் இப்பொழுது கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். இடமாற்றம், ஊர்மாற்றம் உத்தியோக மாற்றங்கள் கூட ஒரு சிலருக்கு வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. திருமண வாய்ப்பு கைகூடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வும், செய்தொழிலில் கூடுதல் லாபமும் கிடைக்கும்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி மகர ராசிக்கு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு லாபாதிபதியான புதன் செல்லும் இந்த நேரம் எதிர்பாராத வரவுகள் உண்டு. வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கூடும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்கு செல்கின்றார். விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் விரயத்திற்கு ஏற்ற தனம் வந்து கொண்டே இருக்கும். எந்தக் காரியத்தையும், கையில் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. காரியத்தை தொடங்கிவிட்டால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகளும் நடைபெறும்.

இம்மாதம் விநாயகப்பெருமான் வழிபாடும், அனுமன் வழிபாடும் வெற்றியை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யம் நாட்கள்:- டிசம்பர்: 15, 17, 22, 31, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஏழரைச் சனி விலகுவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் நன்மை உண்டு. தாய் மற்றும் உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வராஹி வழிபாடு வளர்ச்சி தரும்.

துலாம் மார்கழி மாத ராசிபலன்கள்


துலாம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரித்து அஷ்டம ஸ்தானத்தைப் பார்க்கின்றார். சுக்ரனோடு கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்து சர்ப்ப தோஷ அமைப்பில் இருக்கின்றார்கள். அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான குருவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார்கள். எனவே உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத நிலையைக் காண்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

2-ல் கேது இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். அஷ்டமத்தில் ராகு இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் வந்துகொண்டே இருக்கும். சேமிப்புகள் கரையும். அதற்காக கவலைப்படாமல் அதை ஈடுகட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் முதலீடு செய்யும் முன்பு யோசித்துச் செய்வது நல்லது. பிறரிடம் கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது சொற்களில் கவனம் தேவை.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி நான்காமிடத்திற்கு செல்கின்றார். எனவே இனி அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் தொடங்குகின்றது. ஆகையால் மிகமிக கவனம் தேவை. தொழிலில் எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க இயலாது. அரசாங்கக் கெடுபிடிகளும் இருக்கலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். குருவுடன் சனி இணைந்திருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், மனநிம்மதி குறையத்தான் செய்யும். சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவதோடு, சிறப்பு தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி மகர ராசிக்கு செல்கின்றார். 4-ம் இடத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அதனால் வேலையில் இருந்து விலகலாமா என்று சிந்திக்க நேரிடும். பொது வாக இக்காலத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ஜனவரி 5-ந் தேதி 3-ம் இடமான தனுசு ராசிக்குச் செல்கின்றார். ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தொட்டது துலங்கும். தொகை வரவு திருப்தி தரும். வெற்றிச் செய்திகள் இல்லம் தேடி வரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும். கடன் சுமையில் இருந்து விடுபட வாய்ப்புகள் கைகூடி வரும். கடிதப் போக்குவரத்தால் நன்மைகள் உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கையை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 18, 19, 29, 30 ஜனவரி: 3, 4, 9, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அளவோடு நட்பு வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதே நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும்.

கன்னி மார்கழி மாத ராசிபலன்கள்


கன்னி

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பார்க்கின்றார். குரு நீச்சம் பெற்று பார்த்தாலும், அதன் பார்வைக்குப் பலன் அதிகம். எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மேலும் குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் இதுவரை இருந்த தடைகள் அகலும்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

இம்மாதம் சர்ப்பக் கிரகங்களான ராகு 9-ம் இடத்திலும், கேது மூன்றாமிடத்திலும் சஞ்சரிக்கின்றார்கள். 9-ல் ராகு சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். ஆனால் சகோதரிகள் வழியில் மட்டும் பிரச்சினைகள் உருவாகத்தான் செய்யும்.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி பெயர்ச்சியாகிறார். அவர் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மகர ராசிக்கு வருகிறார். பஞ்சம ஸ்தானாதிபதியான சனி, பஞ்சம ஸ்தானத்திலேயே குருவோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது தொட்டது துலங்கும். உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும் உங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வருவர். இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள், வீடு மாற்றங்கள் உருவாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன், டிசம்பர் மாதம் 30-ந் தேதி மகர ராசிக்கு செல்கின்றார். பஞ்சமத்தில் சஞ்சரிக்கும் புதன், அங்கு குரு மற்றும் சனியோடு இணைவதால் இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். குடும்பத்தில் இளைய சகோதரத்துடன் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். காரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறி, சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தர்ம காரியங்களிலும் மனம் ஈடுபடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்குச் செல்கின்றார். 9-க்கு அதிபதி 4-ம் இடத்திற்குச் செல்லும்பொழுது, எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு கைகூடலாம். செவ்வாய் பலமறிந்து ‘வீடாக வாங்கலாமா அல்லது மனைகட்டிக் குடியேறலாமா?’ என்று யோசிப்பது நல்லது. கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும்.

இம்மாதம் புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8, மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில்லறைக் கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள். கணவன்- மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளின் மூலம் பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். தாய் மற்றும் சகோதரர்கள் சண்டையில் இருந்து சமரசம் அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் மூலம் சலுகைகள் கிடைக்கும். கணபதி வழிபாடு கவலையைப் போக்கும்.

சிம்மம் மார்கழி மாத ராசிபலன்கள்


சிம்மம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சனியோடு கூடியிருக்கின்றார். இப்பொழுது குரு பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். ‘6-ல் குரு ஊரில் பகை’ என்பார்கள். எனவே மறைமுக எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் உங்கள் முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

இம்மாதம் சுக ஸ்தானத்தில் உள்ள கேது, சகாய ஸ்தானாதிபதி சுக்ரனோடு கூடியிருக்கின்றார். 10-ம் இடத்தில் ராகு பலம் பெற்றிருக்கின்றார். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். ஒருசிலர் வாங்கிய இடத்தை விற்று, அதன் மூலம் வரும் தொகையை மூலதனமாக்கி தொழில் வளர்ச்சி காண்பர். பழைய தொழிலை அப்படியே விட்டுவிட்டு அல்லது யாரிடமாவது ஒப்படைத்து விட்டு, புதிய தொழிலை நாடிச்செல்லும் வாய்ப்பும் உண்டு. சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம்.

மகரச் சனி சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் டிசம்பர் 26-ந் தேதி தனது சொந்த வீடான மகர ராசிக்கு வருகின்றார். 6-க்கு அதிபதி 6-ல் வரும்பொழுது பெரியளவில் பாதிப்புகள் இருக்காது. ஜீவன ஸ்தானம் பலப்படுவதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில்கள் தடையின்றி சீராக நடைபெறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்துக் கொடுக்கும் விதத்தில், சனியின் சஞ்சாரம் உள்ளது.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி மகர ராசிக்கு வருகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மேலும் அங்குள்ள சனி மற்றும் குருவோடு புதன் சேருவதால், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒரு மங்கல நிகழ்வு நடைபெறலாம். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் உதிரி வருமானங்கள் கிடைக்கலாம். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். அரசு வழியிலும் எதிர்பார்த்த நன்மைகள் உண்டு.

இம்மாதம் ராகு- கேதுக்களுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமும் தடைகள் அகன்று தக்க பலன் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 25, 26, 29, 30, ஜனவரி: 5, 6, 7, 9, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்களது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வடக்கு நோக்கிய பெண் தெய்வ வழிபாடு வலிமை சேர்க்கும்.

கடகம் மார்கழி மாத ராசிபலன்கள்


கடகம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கின்றார். அவரது அருட்பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதி காண்பீர்கள். செயலில் வெற்றி கிடைக்கும். செல்வ வளம் திருப்தி தரும். சுபகாரியங்களுக்காக செலவிட்டு மகிழ்ச்சி காண்பீர்கள்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

இம்மாதம் சர்ப்பக் கிரகங்களான ராகு 11-ம் இடத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றார்கள். கேதுவோடு இணைந்த சுக்ரன், தனது சொந்த வீடான லாப ஸ்தானத்தைப் பார்க்கின்றார். எனவே நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சிகளில் திருப்தி ஏற்படும். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வர முடியாதவர்களுக்கோ, அல்லது சொந்த ஊரில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கோ நல்ல தகவல் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த விரிசல்கள் அகலும்.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி சப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந் தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். காரணம் மகரத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்குள்ள குரு பகவானோடு இணைந்திருக்கப் போகின்றார். ‘குரு பார்த்தாலும் தோஷ நிவர்த்தி, குரு சேர்ந்தாலும் தோஷ நிவர்த்தி’ என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் சஞ்சலங் கள் தீர வழிபிறக்கும்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், டிசம்பர் 30-ந் தேதி சப்தம ஸ்தானத்திற்கு வருகின்றார். சகோதர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் திருமணங்கள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். அதன் மூலம் சுபவிரயங்களும், ஏற்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் சாதகமாக அமையும். இடமாற்றங்களையும், வீடு மாற்றங்களையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது தானாக அமையும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கின்றார். சுக லாபாதிபதி 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், முன்னேற்றமும் கிடைக்கும். சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதுவும் கைகூடுவதற்கான வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கல்வி முன்னேற்றம் கருதியும், நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும்.

இம்மாதம் பவுர்ணமி தோறும் விரதமிருந்து மால்மருகனை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 22, 23, 28, 29, ஜனவரி: 3, 4

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் நினைத்தது நிறைவேறும் மாதமாகும். நீண்ட நாளையக் கனவுகள் நனவாகும். கணவன்- மனைவியின் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தக்க சமயத்தில் மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு உண்டு. ஊதிய உயர்வுடன் கூடிய புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதுவும் கைகூடும். சிவன் வழிபாடு சிறப்பினை வழங்கும்.

மிதுனம் மார்கழி மாத ராசிபலன்கள்


மிதுனம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை தன் வீடான உங்கள் ராசியிலேயே பதிவது யோகம்தான். மேலும் சனி - குரு பரிவர்த்தனையும், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சொந்த வீடான மேஷத்தில் சஞ்சரிக்கும் அமைப்பும் இருப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

சர்ப்பக் கிரகங்களான ராகு 12-ம் இடத்திலும், கேது 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். உங்கள் ராசிநாதன் புதன், பரிவர்த்தனை யோகம் பெற்ற சனியோடு இணைந்து சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கத்திற்குள் இருக்கின்றார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும் இருக்கின்றார். எனவே பயணங்கள் அதிகரிக்கும். பணப்பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ‘தொழிலில் பங்குதாரர்களை புதிதாகச் சேர்க்கலாமா?’ என்ற எண்ணம் மேலோங்கும்.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி 8-ம் இடத்திற்கு செல்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. இனி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. மற்ற ராசிகளைக் காட்டிலும் உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி அவ்வளவு கெடுபலன்களைக் கொடுக்காது. காரணம் அஷ்டமாதிபதியாக சனி விளங்குகின்றார். எனவே தன் சொந்த வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொழுது கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகலாம். இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள், வீடு மாற்றங்கள் ஒருசிலருக்கு வரலாம்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், 4-ம் இடத்திற்கும் அதிபதியாவார். அவர் டிசம்பர் 30-ந் தேதி மகர ராசிக்கு வருகின்றார். அஷ்டமத்திற்கு வரும் புதன் நன்மைகளையே உங்களுக்கு வழங்குவார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். மகரத்தில் உள்ள குருவோடு புதன் இணைவதால் சுபகாரியங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்கு செல்கின்றார். அப்பொழுது அவர் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகின்றது. புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவரின் பார்வை உங்கள் ராசியில் பதியும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். குறிப்பாக பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகள் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும்.

இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 20, 21, 25, 26, ஜனவரி: 1, 2, 5, 6, மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு வருவதால் சில திட்டங்கள் திசைமாறிச் செல்லலாம். உறவினர் பகை உருவாகலாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கும். தாய் மற்றும் சகோதரர்களை அனுசரித்துச் சென்றால் ஆதாயம். தொழிலில் மாற்றங்கள் உருவாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். சனீஸ்வரர் வழிபாடு சஞ்சலத்தை அகற்றும்.

ரிஷபம் மார்கழி மாத ராசிபலன்கள்


ரிஷபம்

சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கின்றார். உங்கள் ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருக்கின்றார்கள். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

இம்மாதம் சர்ப்பக் கிரகங்களான ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி இருக்கின்றது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை ஒருசிலருக்கு ஏற்படலாம். ஒரு நாள் வரவு வந்தால் மறுநாள் முழுமையாக செலவாகவே இருக்கும். ஒரு நாள் மகிழ்ச்சியான தகவல்களாகவே வந்தால் மறுநாள் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தகவல்களாக வரலாம். குறிப்பாக பணப்புழக்கம் அதிகமாக இருந்தால், மனக்கவலை அதைக்காட்டிலும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் குருபார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

மகரச் சனியின் சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி 9-ம் இடத்திற்குச் செல்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகுகின்றார். எனவே தடைகள் அகலும். தனவரவு உண்டு. மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். பாக்கிய ஸ்தானம் பலம்பெறும் இந்த நேரத்தில், பெற்றோர் வழி உறவில் இருந்த விரிசல் அகலும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு அதுவும் கைகூடலாம். பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பெயர்ச்சிதான்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன பஞ்சமாதிபதி 9-ம் இடத்தில் வந்து சேரும்பொழுது, எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான நற்பலன் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இதுவரை கடுமையாக முயற்சி செய்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது எளிதில் நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் 6-ம் இடத்திற்கு அதிபதியாவார். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்கு வரும்பொழுது அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கின்றார். மறைந்த சுக்ரன் நிறைந்த தனலாபத்தை உங்களுக்கு கொடுக்கலாம். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப நல்ல திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம்கூட உண்டு.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 18, 19, 22, 23, 30, 31, ஜனவரி: 3, 4,மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அஷ்டமத்துச் சனி விலகுவதால், அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. ராகு வழிபாடு யோகம் தரும்.

மேஷம் மார்கழி மாத ராசிபலன்கள்

மேஷம்
சார்வரி வருடம் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே பலம் பெற்றிருக்கின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ராகு-கேதுக்களின் ஆதிக்கம்

இம்மாதம் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கத்திற்குள் உங்கள் ராசி அடைபட்டிருக்கின்றது. 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் என்ற நிலையில் பாம்பு கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இருப்பினும் குருவினுடைய பார்வை, ராகு மீது பதிவதால் கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தியளிக்கும். கூடுதலாக விரயங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அஷ்டமத்தில் உள்ள கேது, சுக்ரனோடு இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் இயற்கையாகவே அமையும்.

மகரச் சனி சஞ்சாரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், டிசம்பர் 26-ந் தேதி 10-ம் இடமான மகர ராசிக்குச் செல்கின்றார். அது உங்களுக்கு தொழில் ஸ்தானமாகும். மரக ராசிக்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். தொழில் நடத்துபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், ‘சம்பளம் போதவில்லையே.. விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா?’ என்று சிந்திக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கும் நல்ல பதில் கிடைக்கும்.

மகர புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 30-ந் தேதி மகர ராசிக்கு வருகின்றார். தொழில் ஸ்தானத்தில் அவர் வரும் நேரம் அங்கு குருவும், சனியும் இணைந்திருக்கின்றார்கள். எனவே புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்றவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுப்பர். சகோதர ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான தகவல் வந்து சேரும். எதிரிகள் விலகிச் செல்வர். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஜனவரி 5-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கின்றார். அவர் அங்குள்ள பஞ்சமாதிபதி சூரியனோடு இணையும் பொழுது, பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். குறிப்பாக பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து மகிழ்ச்சியை வழங்கும். பெற்றோர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். சகோதர ஒற்றுமை பலப்படும். குரு-சனி சேர்க்கையால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவும், பிள்ளைகளின் முன்னேற்றமும் மகிழ்ச்சியைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை வழிபடுங்கள்.

Saturday, December 12, 2020

உலகை வியக்கவைத்த ‘சாதனை ஆசிரியர்’


இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே, ஒரே இரவில் உலக பிரபலமாகிவிட்டார். இவரது ஆசிரியர் பணியும், ஆசிரியர் பணிக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரமுமே, இதற்கு காரணம். ‘பெண் கல்வி முன்னேற்றம்’ என்ற ஒற்றை இலக்கோடு, புயல் வேகத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் ரஞ்சித் சிங் திசாலேவிடம் சில கேள்விகளை முன்வைக்க, அவர் பதிலளித்துள்ளார்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

சாதாரண குடும்பத்தில் பிறந்து, என்ஜினீயரிங் படிப்பை விரும்பிய ‘மிடில் கிளாஸ்’ மாணவன் நான். பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், பொறியியல் படிப்பை முழுமையாக பெற முடியவில்லை. அதனால் என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அப்பாவின் ஆசைக்காக ஆசிரியர் பயிற்சி பெற்றேன். பிறகு தேர்வெழுதி, அரசு பள்ளி ஆசிரியராக உயர்ந்தேன். இப்போது உலகமே விரும்பும் ஆசிரியராக மாறியிருக்கிறேன்.

* எத்தகைய அங்கீகாரம் இது?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமை இடமாகக் கொண்டு ‘வர்க்கி குரூப்’ நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறு வனத்தின் ‘வர்க்கி பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு சுமார் 140-க் கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இறுதியாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இத்தாலி, பிரேசில், வியட்நாம், இங்கிலாந்து, தென் கொரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றனர். அவர்களில் தலைசிறந்த ஆசிரியராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.

* சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட காரணம் என்ன?

மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டம், பரத்வாடே பகுதியில்தான் நான் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். மகாராஷ்டிராவில் பொதுவாக இந்தி பேசும் குடும்பங்களே அதிகம். ஆனால் பரத்வாடே பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் அதிகமாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தி பேசுவது புரிந்தாலும், அதை எழுத-படிக்க தெரியாது. இதனால் கன்னட குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையும் வெகு குறைவாக இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றேன். கன்னட குழந்தைகளை கவர, கன்னடம் மொழி கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் கற்றுக்கொடுத்தேன். கன்னட குழந்தைகளும் மெதுவாக பள்ளி பக்கம் வர தொடங்கினர். என்னிடம் பள்ளிப்பாடம் படித்தனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

* வேறு ஏதும் முயற்சிகளை முன்னெடுத்தீர்களா?

பரத்வாடே பகுதியில் கன்னடம் பேசும் குழந்தைகளை போன்று, பழங்குடியின குழந்தைகளும் அதிகமாக இருந்தனர். அவர்களுக்கும் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. குறிப்பாக பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத் தனர். அவர்களின் எண்ணத்தை மாற்ற, பழங்குடியின கிராமங்களுக்கு பயணமானேன். பழங்குடியின மக்களை சந்தித்து பேசினேன். சிலமுறை அவர்களின் பகுதியிலேயே தற்காலிக பள்ளி அமைத்து, பாடம் சொல்லி கொடுத்தேன். அவர்களையும் பள்ளிக்குள் அழைத்ததோடு, கல்வியை புதுமையான முறையில் கற்றுக்கொடுத்தேன்.

வீடியோ முறையில் பாடம் கற்பிப்பது, பாடல் வடிவில் கல்வி புகட்டுவது, அனிமேஷன் கல்வி, கியூ.ஆர்.தொழில்நுட்ப கல்வி என குழந்தைகள் விரும்பும் வழிகளில் கல்வி கற்பித்தேன். பாடப்புத்தகங்கள் வழியாக மட்டுமின்றி, காட்சிப்படங்கள் மூலமாகவும் கல்வி புகட்டப்பட்டது.

* விருதுடன் கிடைத்த பரிசு தொகையை மற்ற போட்டியாளர்களுக்கு பங்கிட்டு கொடுத்தது எதற்கு?

சிறந்த ஆசிரியர் என்ற விருதுடன் பரிசு தொகையாக ரூ.7.4 கோடி கிடைத்தது. இதில் பாதி தொகையை என்னுடன் போட்டியிட்ட மற்ற 9 போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் கல்வி பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லா ஆசிரியருமே வெற்றியாளர்கள்தான். அவர்கள் அனைவருமே இந்த விருதிற்கும், பரிசு தொகைக்கும் தகுதியானவர்கள்தான். மேலும் ஒவ்வொரு ஆசிரியரும் இந்த பரிசு தொகையை நம்பி, ஆக்கப்பூர்வ முயற்சிகளை முன்னெடுக்க ஆசைப்பட்டிருப்பார்கள். அதை நான் வீணாக்க விரும்பவில்லை. அதனால்தான் மற்ற போட்டியாளர்களுடன் பாதி பரிசு தொகையை பகிர்ந்து கொண்டேன். ஆக மொத்தத்தில், மொத்த பரிசுத்தொகையும் கல்விக்காகவே செலவழிக்கப்பட இருக்கிறது.

* உங்களுடைய அடுத்த இலக்கு?

அரசுப்பள்ளிகள் பற்றிய தவறான புரிதலை மாற்றுவதே என் லட்சியம். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் இயங்க தயாராக உள்ளது. என்னை போன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களும், புதுமையான முறையில் கல்வி கற்பிக்க ஆவலாக இருக்கிறார்கள். இதை பெற்றோர்கள் புரிந்துக்கொண்டு, அரசுப்பள்ளிகளுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துவிட வேண்டும். இதை மையப்படுத்தி, என்னால் முயன்ற புதுமைகளையும், முயற்சிகளையும் முன்னெடுக்க இருக்கிறேன்.

----------------------

கடவுளுக்கு ஒப்பானவராகவும், தாய் - தந்தையருக்கு அடுத்த இடத்திலும் நம் இந்திய சமுதாயம் ஆசிரியா்களை உயா்த்தி வைத்திருக்கிறது. நோ்மையின் சின்னமாகவும், ஒழுக்கத்தின் முன்னோடியாகவும், எளிமையின் அடையாளமாகவும், அறிவின் இருப்பிடமாகவும் ஆசிரியா்கள் போற்றப்பட்டனா். சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தும் வலிமையும், கலாசாரக் கூறுகளை இளம் உள்ளங்களில் பதியம் போடும் பொறுப்பும் ஆசிரியா்களுக்கு உண்டு என்பதை நமது முன்னோா்கள் அங்கீகரித்துப் போற்றினாா்கள். 

காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆசிரியா்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களாக மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, அவா்களுடைய சமூக அந்தஸ்தும், மரியாதையும் பெருமளவு குறைந்திருக்கின்றன. இருந்தாலும், ஆசிரியா்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை இப்போதும்கூடப் பலா் தங்களது செயல்பாட்டால் நிரூபித்து வருகின்றனா். ஆசிரியா் பணி புனிதமானது என்பதை நிலைநாட்டி, உலக அளவில் தன்னை ஒரு முன்னுதாரண ஆசிரியராக அடையாளம் காட்டியிருக்கும் ஒருவா் இந்தியா் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். சா்வதேச அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான இந்த ஆண்டின் விருது மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் மாவட்டம், பரிதேவாடி கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியரான ரஞ்சித் சிங் திசாலே என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து 2014 முதல் வழங்கப்படும் 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.38 கோடி) சா்வதேச விருது, இந்த ஆண்டு ரஞ்சித் சிங் திசாலேவுக்கு வழங்கப்பட்டிருப்பது அனைவரையும் அவரை நோக்கித் திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில், நாகரிகமோ, வளா்ச்சியோ எட்டிக்கூடப் பாா்க்காத கிராமச் சூழலில் 32 வயது ரஞ்சித் சிங் திசாலே, தன்னுடைய அா்ப்பணிப்பாலும், கடமையுணா்வாலும் ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய கல்வி, சமுதாய மாற்றங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரம்தான் இந்த விருது. ஒட்டுமொத்த உலகமும் திசாலே என்கிற இளைஞரின் சாதனையை வியந்து பாா்க்கிறது. 2009-இல் ஆசிரியா் பணியில் சோ்ந்த ரஞ்சித் சிங் திசாலே, 2014-இல் சோலாப்பூரிலுள்ள பரிதேவாடி கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்கு இடமாற்றத்தின் காரணமாக வந்தபோது, அவா் பாா்த்த காட்சிகள் அவரைத் திடுக்கிட வைத்தன. இடிந்து விழும் நிலையில் இருந்தது பள்ளிக் கட்டடம். மிகக் குறைந்த அளவு மாணவா்கள்தான் பள்ளியில் இருந்தனா். 

சமுதாய அளவிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்த அந்த கிராமத்தின் நிலை, திசாலேயின் கவனத்தை ஈா்த்தது. கல்வியில் மட்டுமல்லாமல், சமுதாய அளவிலும் அந்த பின்தங்கிய கிராமத்தை உயா்த்தியாக வேண்டும் என்கிற வைராக்கியம் அவருக்கு எழுந்தது. பள்ளிக்கூடத்திற்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. அதற்கு முக்கியமான காரணம், அந்த கிராமத்தில் அதிகமாக காணப்பட்ட குழந்தைத் திருமணம்தான் என்பதை அவா் புரிந்து கொண்டாா். அவரது முதல் பணி, அந்த கிராமத்தில் குழந்தைத் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி புகட்டியது. இப்போது பரிதேவாடி கிராமத்திலுள்ள எல்லா பெண் குழந்தைகளும் பள்ளிக்கு வருகிறாா்கள். குழந்தைத் திருமண முறை என்பது கடந்துபோன வரலாறாகி விட்டது. 

காலமாற்றத்துக்கு ஏற்றபடி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதைத் தனது அடுத்த சவாலாக எடுத்துக்கொண்டாா் திசாலே. தாய்மொழி அறிவு அவசியம் என்பதை உணா்ந்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் அவா்களின் தாய்மொழியான மராத்தியில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தாா். எண்ம யுகத்துக்கு அவா்களை அழைத்துச் செல்லும் முயற்சியிலும் திசாலே வெற்றி பெற்றாா். ஒலி நாடாக்கள், விடியோக்கள், க்யூ.ஆா்.கோட் முறை ஆகியவற்றின் வழியே கற்றுக்கொடுக்கும் முறையை மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முதலாக சோதனை செய்து வெற்றி பெற்றவா் திசாலேதான். அவரது முயற்சியின் வெற்றியைத் தொடா்ந்து, 2017-இல் மகாராஷ்டிர கல்வி அமைச்சகம், மாநிலம் முழுவதும் அவரது முன்னுதாரணத்தை பின்பற்ற ஊக்கமளித்தது. பள்ளிக் கல்வியை மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியையும் புகட்டினாா் அவா். நட்புறவு, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவை குறித்தும் அந்த மாணவா்களுக்குப் புரிய வைத்தாா். 

அதன் விளைவாக, பரிதேவாடி பள்ளியிலிருந்து திசாலே உருவாக்கிய மாணவா்கள், நகா்ப்புற மாணவா்களால் வியந்து பாா்க்கப்பட்டனா். பரிதேவாடி பள்ளியில் செய்த சாதனைகள் போதாது என்று, இந்தியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஈராக், இரான், அமெரிக்கா, வட கொரியா என்று எங்கெல்லாம் பிரச்னை நிலவுகிறதோ அந்தப் பகுதியிலுள்ள இளைஞா்களை இணையத்தின் மூலம் இணைத்து உலக சகோதரத்துவத்துக்கு ரஞ்சித் சிங் திசாலே வழிகோல முற்பட்டபோது, அந்த கிராமத்துப் பள்ளி ஆசிரியா் சா்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈா்த்தாா். உலகிலுள்ள 140 நாடுகளில் இருந்து 12,000-க்கும் அதிகமான சாதனை ஆசிரியா்களை அடையாளம் கண்டு, அவா்களில் இந்த ஆண்டு விருதுக்கு ரஞ்சித் சிங் திசாலே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தனக்குக் கிடைத்திருக்கும் விருதுத் தொகையில் பாதியை, இறுதிச் சுற்றில் தன்னுடன் போட்டியில் இருந்த ஏனைய ஒன்பது ஆசிரியா்களுக்கும் பகிா்ந்து கொடுப்பதாக அறிவித்திருக்கிறாா் ரஞ்சித் சிங் திசாலே. வருங்காலம் குறித்த நம்பிக்கை திசாலேக்களால் துளிா் விடுகிறது...

Wednesday, December 9, 2020

2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை தொழிலதிபர் முகேஷ் அம்பானி தகவல்


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜியோ நிறுவனத்தை தொடங்கி 4 ஆண்டுகளாகின்றன. மிகக்குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்புத் துறையில் அதிக பங்கு வகிக்கும் நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது பிற நிறுவனங்களை காட்டிலும் முன்னதாக 5ஜி அதிவேக அலைக்கற்றை சேவையை வழங்க உள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘‘குறைந்த விலையில் எல்லோருக்கும் அதிவேக தொலைத்தொடர்பு சேவை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு தேவையான கொள்கை நடவடிக்கைகள் துரித படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்’’ என்று கூறினார்.

மேலும் 5ஜி சேவைக்கான ஹார்டுவேர், சாப்ட்வேர் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இறக்குமதியை குறைத்து சுயசார்பு தன்மையுடன் செயல்படுவதற்கு இது முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்றார்.

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணைய வசதி இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி


அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்துகிராமங்களிலும் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு (சிஓஏஐ) சார்பில் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்' என்ற பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 3 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தொலைத்தொடர்பு சாதனங்கள், உபகரணங்களின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மின்னணு சாதனங்களை நாம் அடிக்கடி மாற்றுகிறோம். மின்னணு சாதனகழிவுகளை கையாள்வது தொடர்பாக ஆலோசிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை குறித்த காலத்தில் அறிமுகம் செய்ய வேண்டும். இதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

தொழில்நுட்ப புரட்சி மூலம்மக்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்த முடியும். குறிப்பாகசுகாதாரம், கல்வி, வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண் துறையில்தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும். தொழில்நுட்பங்கள் மூலம் சிறு வியாபாரிகளின் சந்தை வாய்ப்பை பெருக்க முடியும்.

கரோனா காலத்திலும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள் மக்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றினர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொலைத்தொடர்பு சேவை காரணமாகவே வெவ்வேறு நகரங்களில் வசிக்கும் சொந்த பந்தங்கள் தொடர்பில் உள்ளனர். ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம்நடத்த முடிகிறது. வீட்டில் இருந்தபடியே ஒரு நோயாளி தனது மருத்துவரின் ஆலோசனையைப் பெற முடிகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர் களுடன் வியாபாரி வர்த்தகம் செய்ய முடிகிறது.

உலகளாவிய அளவில் இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழை, எளியோரும் மொபைல் போன் சேவையைப்பெற முடிகிறது. மொபைல் போன்பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொபைல் போன் தொழில்நுட்பத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டஉதவிகளை விரைந்து வழங்கமுடிகிறது. சவாலான கரோனாகாலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக மொபைல்போன் தொழில்நுட்பம் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் 'பைபர்-ஆப்டிக்' மூலம் அதிவேகஇணையதள வசதி ஏற்படுத்தப்படும். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த கிராமங்கள், வடகிழக்கு மாநிலங்கள், லட்சத் தீவிலும் அதிவேக இணையதள வசதி செய்து கொடுக்கப்படும். தரைவழி பிராண்ட்பேண்ட் இணையதள வசதி, பொது இடங்களில் ‘வைபை ஹாட்ஸ்பாட்' வசதி மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை


பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார். இவர்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இன்றைய ராசிபலன் 09.12.2020

உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது 90 வயது மூதாட்டிக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டது


உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. 90 வயது மூதாட்டிக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முடிவுகட்டுவதற்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் சேர்ந்து கூட்டாக ‘எம்ஆர்என்ஏ’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி 95 சதவீத செயல்திறனை கொண்டிருப்பது அதன் இறுதிக்கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு இங்கிலாந்து அரசின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’களை இங்கிலாந்து அரசு கொள்முதல் செய்திருக்கிறது.

அங்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களின் பணியாளர்கள், அதிக ஆபத்தில் உள்ள தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) பணியாளர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கவண்ட்ரியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 6.31 மணிக்கு உலகிலேயே முதல் முறையாக, முதல் நபராக மார்கரெட் கீனன் என்ற 90 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மே பார்சன்ஸ் என்ற நர்சுதான் அவருக்கு இந்த தடுப்பூசியை போட்டார்.

இதை வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணம் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்.) பெருமிதத்துடன் கூறியது.

அடுத்த வாரம் தனது 91-வது பிறந்தநாளை காணவுள்ள மாகி என்று செல்லமாக அழைக்கப்படுகிற மார்கரெட் கீனன் தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது, “கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபராக, நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன். இதுதான் நான் விரும்பும் சிறந்த பிறந்த நாள் பரிசு ஆகும். ஏனென்றால் நான் என் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் புத்தாண்டில் நேரத்தை செலவழிக்க எதிர்நோக்கி காத்திருக்க முடியும்” என்று கூறினார்.

லண்டன் நியூ கேசில் ஆஸ்பத்திரியில் இந்த தடுப்பூசி நேற்று பொதுமக்களுக்கு போடப்பட்டது. அங்கு முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஹரிசுக்லா (வயது 87) என்ற இந்திய வம்சாவளியும் ஒருவர் ஆவார்.

இவர் வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள டைன் அண்ட் வேர் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றி அவர் கூறும்போது, “2 டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன். நாம் இந்த பெருந்தொற்றுநோயின் முடிவை நோக்கி வருகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வாறு செய்வது என் கடமை என்று நான் உணர்கிறேன்” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “தேசிய சுகாதார சேவையை (என்.எச்.எஸ்.) நான் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தேன். அவர்கள் அனைவரும் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன்” என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி இங்கிலாந்தில் தொடங்கி இருப்பதற்கு அந்த நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் கருத்து தெரிவிக்கையில், “நாம் நாட்டின் முதல் நோயாளிகளுக்கு தடுப்பூசியை போடத்தொடங்கி இருக்கிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான இங்கிலாந்தின் போராட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள், சோதனைகளில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் தேசிய சுகாதார சேவையினர் ஆகியோரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுறேன்” என குறிப்பிட்டார்.

இதே போன்று இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹான்காக் கருத்து தெரிவிக்கையில், “கொடூரமான இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய தருணமாக இந்த நாள், தடுப்பூசி நாள் அமைந்துள்ளது. இதை நாம் திரும்பிப்பார்ப்போம். இங்கிலாந்து முழுவதும் நமது சுகாதார சேவையினர் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசி 21 நாட்களில் 2 ‘டோஸ்’ வழங்கப்படுகிறது. இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட 7 நாட்களுக்கு பின்னர் வலுவான நோய் எதிர்ப்புப்பொருள் உண்டாகிறது.

இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 8, 2020

இன்றைய ராசிபலன் 08.12.2020‘ஐமொபைல் பே’ iMobile Pay செயலி ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பயன்படுத்தலாம்


ஐசிஐசிஐ வங்கி தனது மொபைல் வங்கி செயலியான ‘ஐமொபைல்’ செயல்பாட்டில் சில மாற்றங்களை செய்து, எந்தவொரு வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளரும் பணப்பரிமாற்றம், வங்கிச் சேவைகளை பெறும் வசதியை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘ஐமொபைல் பே’ (iMobile Pay)என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி பணப்பரிமாற்றச் செயலிகளில் இருக்கும் வசதிகளின் தனித்துவமான சேர்க்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிவாடிக்கையாளர்களும் ஐமொபைல் பே செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். எந்த கட்டணச் செயலியின் க்யூஆர் கோடு ஆக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்ய அனுமதித்து தானாகவே எந்தவொரு யுபிஐ ஐடி, வங்கிக் கணக்குக்கும் இந்த செயலி மூலம் இலவசமாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். 

மேலும் பெட்ரோல் பங்குகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், மல்டிபிளெக்ஸ்களில் இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் பணம் செலுத்த முடியும். நண்பர்களின் யுபிஐ ஐடியை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லாமல், இத்துறையில் முதன்முதலாக ‘பே டூ கான்டாக்ட்’ அம்சத்தை எளிதாக பயன்படுத்தும் வசதியை இச்செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பயன்பாட்டு கட்டணங்கள், மொபைல் போன்ரீசார்ஜ், சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை பயனர்கள் மேற்கொள்ளவும் இந்த செயலியில் வசதி உண்டு. 

இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் அனூப்பக்சி கூறும்போது, “முன்னோடிகண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் ஐசிஐசிஐ வங்கி முன்னிலையில் உள்ளது. இது இந்திய வங்கிகளின் டிஜிட்டல் பாதையை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார்.

பஸ்கள் 100 சதவீத இருக்கை வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் தமிழக அரசு அனுமதி


கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு மற்றும் தனியார் பஸ்கள் 100 சதவீத இருக்கை வசதிகளை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பஸ்களில் இருக்கும் இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளையே பயன்படுத்தி பஸ்களை இயக்கலாம் என்றும், பஸ்களை இயக்கும்போது கொரோனா தடுப்பு நிலையான வழிக்காட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு கடந்த செப்டம்பர் 7-ந்தேதியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பஸ்களில் 100 சதவீத இருக்கை வசதிகளை பயன்படுத்துவது (நிற்காமல்) அவசியமாக உள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும், ஊழியர்களை அழைத்து செல்லும் தொழிற்சாலைகளின் பஸ்களின் எண்ணிக்கையும், மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றும், அதோடு, தேவைப்படும் இடங்களில் அதிக பஸ்களை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மாநில போக்குவரத்து கழகங்கள், தனியார் பஸ்கள் பணியாளர்களை அழைத்து செல்லும் தொழிற்சாலை பஸ்கள், மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் ஆகியவை 100 சதவீத இருக்கை வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.

பஸ்களில் கொரோனா தடுப்புக்காக நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 5, 2020

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி நடராஜன், சாஹல் அபாரம்


கான்பெர்ராவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றது. நடராஜன், சாஹல் பந்துவீச்சில் மிரட்டினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் அறிமுக வீரராக நேற்று இடம் பிடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். தடுமாறிய தவானுக்கு (1 ரன்) மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆப்-ஸ்டம்பு எகிறியது. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை கோலி தட்டிவிட அதை ஸ்வெப்சனே கேட்ச் செய்தார். சுழலுக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பந்து ஓரளவு பவுன்சும் ஆனது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், மனிஷ் பாண்டே 2 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் 12-வது அரைசதத்தை கடந்த லோகேஷ் ராகுல் (51 ரன், 40 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹென்ரிக்ஸ் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா (16 ரன்) நிலைக்கவில்லை.

அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 114 ரன்களுடன் (16.5 ஓவர்) மோசமான நிலையில் தவித்தது. இந்த சூழலில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினார். தசைப்பிடிப்பு காயத்தையும் சமாளித்து ஆடிய அவர் ஹேசில்வுட்டின் ஒரே ஒவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கினார். இதனால் அணி 150 ரன்களை கடந்தது. ஸ்டார்க்கின் கடைசி ஓவரில் மேலும் இரு பவுண்டரி விரட்டினார். இதற்கிடையே வாஷிங்டன் சுந்தர் 7 ரன்னில் கேட்ச் ஆனார்.

20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா 44 ரன்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 162 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டார்சி ஷார்ட்டும் களம் புகுந்தனர். தீபக் சாஹரின் முதல் ஓவரில் 3 பவுண்டரியுடன் அமர்க்களமாக தொடங்கினர். வேகப்பந்து வீச்சை விளாசிய இவர்கள் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ரன் எடுக்க தடுமாறினர். ஆனாலும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவருக்குள் 53 ரன்கள் திரட்டி வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர்.

பிஞ்சுக்கு 33 ரன்னில் மனிஷ் பாண்டேவும், டார்சி ஷார்ட்டுக்கு 18 ரன்னில் விராட் கோலியும் சுலபமான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டனர். இந்த கூட்டணியை மாற்று ஆட்டக்காரராக இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் உடைத்தார். அவர் வீசிய பந்தை பிஞ்ச் (35 ரன், 26 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கியடித்த போது, பாண்ட்யா அருமையாக கேட்ச் செய்தார்.

இதன் பின்னர் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் சரிந்தது. அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் (12 ரன்) சாஹலின் பந்து வீச்சில் ‘டீப் மிட்விக்கெட்’ திசையில் சாம்சனிடம் பிடிபட்டார். 3-விக்கெட்டுக்கு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல்லின் (2 ரன்) விக்கெட்டை தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கபளீகரம் செய்தார். அவரது பந்து வீச்சில் மேக்ஸ்வெல் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்த மறுத்தாலும் அதன் பிறகு டி.ஆர்.எஸ்.-ன் படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை இந்தியா பெற்றது. மற்றொரு தொடக்க வீரர் டார்சி ஷார்ட்டும் (34 ரன்) நடராஜனின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் பிடி மேலும் இறுகியது. மிடில் வரிசை வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தனர். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை போன்று இந்தியாவின் பீல்டிங்கும் கட்டுக்கோப்புடன் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை இதை விட குறைந்த ஸ்கோரில் மடக்கியிருக்க முடியும். இந்திய தரப்பில் நடராஜன், யுஸ்வேந்திர சாஹல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் முடிவு கிடைத்த கடைசி 8 ஆட்டங்களில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றியை ருசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

லோகேஷ் ராகுல் (சி) அப்போட்

(பி) ஹென்ரிக்ஸ் 51

ஷிகர் தவான் (பி) ஸ்டார்க் 1

விராட் கோலி (சி) அண்ட்

(பி) ஸ்வெப்சன் 9

சாம்சன் (சி) ஸ்வெப்சன்

(பி) ஹென்ரிக்ஸ் 23

மனிஷ் பாண்டே

(சி) ஹேசில்வுட் (பி) ஜம்பா 2

ஹர்திக் பாண்ட்யா (சி) சுமித்

(பி) ஹென்ரிக்ஸ் 16

ஜடேஜா (நாட்-அவுட்) 44

வாஷிங்டன் சுந்தர்

(சி) அப்போட் (பி) ஸ்டார்க் 7

தீபக் சாஹர் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 161

விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-48, 3-86, 4-90, 5-92, 6-114, 7-152.

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 4-0-34-2

ஹேசில்வுட் 4-0-39-0

ஆடம் ஜம்பா 4-0-20-1

சீன் அப்போட் 2-0-23-0

ஸ்வெப்சன் 2-0-21-1

ஹென்ரிக்ஸ் 4-0-22-3

ஆஸ்திரேலியா

டார்சி ஷார்ட் (சி) பாண்ட்யா

(பி) நடராஜன் 34

ஆரோன் பிஞ்ச் (சி) பாண்ட்யா

(பி) சாஹல் 35

ஸ்டீவன் சுமித் (சி) சாம்சன்

(பி) சாஹல் 12

மேக்ஸ்வெல் எல்.பி.டபிள்யூ

(பி) நடராஜன் 2

ஹென்ரிக்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) தீபக் சாஹர் 30

மேத்யூ வேட் (சி) கோலி

(பி) சாஹல் 7

சீன் அப்போட் (நாட்-அவுட்) 12

ஸ்டார்க் (பி) நடராஜன் 1

ஸ்வெப்சன் (நாட்-அவுட்) 12

எக்ஸ்டிரா 5

மொத்தம் (20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 150

விக்கெட் வீழ்ச்சி: 1-56, 2-72, 3-75, 4-113, 5-122, 6-126, 7-127.

பந்து வீச்சு விவரம்

தீபக் சாஹர் 4-0-29-1

வாஷிங்டன் சுந்தர் 4-0-16-0

முகமது ஷமி 4-0-46-0

நடராஜன் 4-0-30-3

யுஸ்வேந்திர சாஹல் 4-0-25-3

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் விவசாயிகள் அழைப்பு


வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் 8-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது.

திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 9-வது நாளாக தொடர்ந்தது.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர்.

ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் (மத்திய மந்திரிகள்) பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரிகள் உறுதியளித்தனர். எனினும் சட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விவசாயிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியதால் இந்த பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.

எனவே இன்று (சனிக்கிழமை) மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சனிக்கிழமை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுப்பது என இன்றைய கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

அன்றைய தினம் அனைத்து சாலைகளின் சுங்கச்சாவடிகளையும் நாங்கள் முற்றுகையிடுவோம் என கூறிய விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் வருகிற நாட்களில் அடைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே டெல்லி எல்லைகளில் குழுமியிருக்கும் விவசாயிகளால் தினந்தோறும் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி வருகிறது. இதனால் போக்குவரத்து அடைக்கப்பட்டுள்ள சாலைகள், மாற்று ஏற்பாடுகள் போன்றவை குறித்து டெல்லி போலீசார் தினமும் தங்கள் டுவிட்டர் தளத்தில் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.

Friday, December 4, 2020

RASI PALAN - இன்றைய ராசிபலன் 05.12.2020

உங்கள் ராசி பலன் 4-12-2020 முதல் 10-12-2020 வரை கணித்தவர்: ‘ஜோதிட சிம்மம்’ சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா


மேஷம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. சகப் பணியாளர் ஒருவரின் இடமாற்றமே உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிடும். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்குமே தவிர, ஊதியத்தில் உயர்வு இருக்காது. குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவி வரும். இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

ரிஷபம்

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை எளிதில் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் முன்னேற்றமான நிலையைக் காண்பார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இந்த வாரம் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.

மிதுனம்

உத்தியோகஸ்தர்கள், அலுவலகம் தொடர்பான எந்தவித நன்மைகளையும் இப்போது எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற முயற்சி செய்வதே முக்கியம். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வளர்ச்சி நிலையை எட்டுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான நிலை நீடிக்கும். நண்பர்களைச் சந்திப்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

கடகம்

செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தி யோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று மகிழ்வார்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் ஓரளவு முன்னேற்றம் காண்பார்கள். பெண்களால் சிலருக்கு தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வாரம் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதில், சக பணியாளர்களாலேயே தடங்கல் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு, தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

கன்னி

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை அடைவீர்கள். ஒரு சிலருக்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறான மாற்றங்களும் வரலாம். தொழில் துறை யினர், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கலாம். சகப் பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வளர்ச்சி நிலையையும் வருமானப் பெருக்கத்தையும் காண்பீர்கள். குடும்பத்தில் எல்லோருடைய ஒற்றுமையான போக்கு பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும். இந்த வாரம் முழுவதும் ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதி வாருங்கள்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினர் அனைவரின் பாராட்டும், ஆடை ஆபரண சேர்க்கையும் பெண்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். இந்த வாரம் சனிக்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.

தனுசு

உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வேகமான வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்கள், குடும்ப நிர்வாகத்தை குறையின்றி நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளை நம்பி ஏமாறாதீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மகரம்

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களைப் பெறக்கூடும். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல், வேலைப்பளுவால் அவதிப்படுவீர்கள். தொழில் துறையினர், தங்கள் துறையில் வளர்ச்சியைக் காண்பார்கள். உடல்நலம் சற்றே தொல்லை தரக்கூடும். சகோதர வழியில் செலவு அதிகரிக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு தீபமேற்றுங்கள்.

கும்பம்

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். இதற்கு உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தாலும், சகப் பணியாளர்களின் எதிர்ப்புகள் இருக்கும். தொழில் செய்பவர்கள், படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவினாலும், சில மன வருத்தங்களும் உண்டாகும். இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.

மீனம்

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று மகிழ்வார்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று, பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு மறையும். இந்த வாரம் திங்கட்கிழமை விநாய கருக்கு அர்ச்சனை செய்து வணங்குங்கள்.