You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கை மற்றும் தேவையை உறுதி செய்ய புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது கஸ்தூரி ரங்கன் பேச்சு

Sunday, November 1, 2020

ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கை மற்றும் தேவையை உறுதி செய்ய புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது கஸ்தூரி ரங்கன் பேச்சு

ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும், தேவையையும் உறுதி செய்வதற்கே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக, தேசிய கல்வி கொள்கை குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த காஞ்சீபுரத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் 8-வது பட்டமளிப்பு விழா ஆன்லைன் வழியாக நேற்று நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக பங்கேற்று 306 மாணவர்களுக்கு பட்டங்களை தேசிய கல்வி கொள்கை குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

21-ம் நூற்றாண்டில் கல்விமுறையின் மிகச்சிறந்த மாற்றமாக தேசிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கை முறை, தேவைகளை உறுதி செய்து, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கவே தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வியை ஒருங்கிணைந்து எளிதில் அணுக தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கும். தேசிய கல்வி கொள்கையின் படி கற்றுக்கொள்வதன் மூலம், கல்வியில் உள்ள அனைத்து படிநிலைகளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பொறியியல் மற்றும் வடிவமைப்பு துறையில் புதுமையான படிப்புகளை கற்றுத்தருவதன் மூலம் பல்வேறு தொழில் வல்லுநர்களை உருவாக்கி, மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் பெரும்பங்கு ஆற்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments: