இந்தியாவில் எட்டு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியில் பிறை வடிவில், மூன்று மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவை இமயமலை, ஹிந்துகுஷ், பட்காய் மலைத்தொடர்கள். வடதுருவத்திலிருந்து வீசும் குளிர்க் காற்றை நாட்டுக்குள் விடாமல் தடுக்கும் இயற்கைத் தடுப்பு அரண் இது. மற்றொருபுறம் பருவமழைக் காற்றைத் தடுத்து மழைப்பொழிவை ஏற்படுத்துவதாகவும் இந்த மலைத்தொடர்கள் திகழ்கின்றன. இமய மலைத் தொடர் ஓர் இயற்கை அற்புதம். இது ஆசியாவையும், இந்தியாவையும் பிரிக்கிறது. இந்தியாவின் வடக்கிலிருந்து வடகிழக்குவரை ஓர் எல்லைபோல அமைந்திருக்கிறது. இமயமலைத் தொடரே உலகின் உயரமான மலைத்தொடர். உலகில் உள்ள உயரமான 10 மலைச்சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலைத் தொடரிலும், ஒரு உயர்ந்த சிகரம் அதற்கு அருகேயுள்ள காரகோரம் மலைத்தொடரிலும் உள்ளன. இத்தனைக்கும் இமய மலைத்தொடர் உலகின் மிகவும் வயது குறைந்த மலைத்தொடர். இமய மலைத்தொடரில் உள்ள பல மலைச்சிகரங் கள் ஆண்டு முழுவதும் பனியால் போர்த்தப்பட்டிருக்கும். கங்கை, யமுனை, சட்லஜ், சீனாப், ராவி ஆகிய ஐந்து முக்கிய நதிகளும் பிரமாண்ட பிரம்மபுத்திரா நதியும் இமய மலைத்தொடர் பனி உருகு