Skip to main content

தமிழக அரசு அறிவித்தபடி ‘அரியர்’ மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதற்கு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் தேர்வுகள் தொடர்ந்து தள்ளிப்போனது.

இதையடுத்து அரசு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததோடு, அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவுரைகளையும் வெளியிட்டது.

இதுதவிர அரியர் வைத்திருந்த மாணவர்களில் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நடத்தி முடித்து தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு விட்டது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வில் 99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே அரசு அறிவித்தபடி தேர்வு கட்டணம் செலுத்தி அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது பற்றி சென்னை பல்கலைக்கழகம் யோசித்து வந்தது. இதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், குறைந்தபட்ச தேர்ச்சி வழங்குவதில் விருப்பமில்லாத மாணவர்கள் அடுத்த முறை நடைபெறும் தேர்வை எழுதி தேர்ச்சி மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

வழக்கு நிலுவை

அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD