Skip to main content

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது.

ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டே வேண்டும்

ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதி ல் அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.

சாத்தியம் இல்லை

இந்தநிலையில் இந்த வழக்கு கடந்த 15-ந்தேதி மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என வாதிட்டார்.

நாளை தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு, அ.தி.மு.க. மற்றும் கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் கடந்த 22-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD