Skip to main content

உங்கள் ராசி பலன் 23-10-2020 முதல் 29-10-2020 வரை

மேஷம்

உங்கள் பணிகளில் கூடுதலான அக்கறை செலுத்துவதன் மூலம், உயர் அதிகாரிகளின் மதிப்பை பெறலாம். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். பெண்களின் பக்குவமான நடவடிக்கை களால் பிரச்சினைகள் சரியாகிவிடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இந்த வாரம் வியாழக் கிழமை குரு பகவானை வணங்குங்கள்.

ரிஷபம்

சிறு சங்கடங்கள் வரலாம். அவற்றால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் அன்றாடப் பணிகளில் கவனமாக ஈடுபட்டு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும். தொழில் துறையினர் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும் பாதிப்புகள் இருக்காது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கையை வணங்கினால், கவலைகள் நீங்கும்.

மிதுனம்

எதிலும் எச்சரிக்கையாய் செயல்பட வேண் டும். உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர் களின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம் பணிகளைக் குறைவின்றி செய்வீர்கள். தொழில் துறையினர் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவார்கள். குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். பயணங்களின் போது சிக்கல்கள் ஏற்பட்டாலும், தெய்வத்தின் துணையால் அகலும். இந்த வாரம் திங்கட்கிழமை சிவனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்

உத்தியோகஸ்தர்கள் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். சில இடையூறுகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் பல நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் பெண்கள் மனம் மகிழ்வார்கள். இந்த வாரம் புதன்கிழமை அன்று பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக விஷயங்களில் திருப்தியான சூழல் இருக்காது. தொழில் துறையினர் பெரிய அளவிலான முன்னேற்றம் அடைவது கடினம். குடும்பத்தில் பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அமைதியை ஏற்படுத்துவார்கள். பணத்தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் பெண்களின் சேமிப்பு கைகொடுக்கும். இந்த வாரம் சனிக்கிழமை அன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

கன்னி

இந்த வாரம் பல நல்ல பலன்களைப் பெற்று மகிழலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவார்கள். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் எல்லோரும் நல்ல முறையில் ஒற்றுமையாக செயல்பட்டு வருவார்கள். திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இந்த வாரம் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபட துயரம் நீங்கும்.

துலாம்

எதிலும் நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். காரியங்களில் நிதானமாகச் செயல்பட்டால் சிக்கல்களை தவிர்த்து விடலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவது கடினம். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்வார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வணங்குங்கள்.

விருச்சிகம்

தொழில் துறையினருக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருவாய் கிடைக்காது. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் எதிர் பாராத சச்சரவுகள் ஏற்படும். அவை, பெண்களின் பொறுமையால் தவிர்க்கப்படும். இந்த வாரம் புதன்கிழமை அன்று பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றினால், சகல நன்மைகளும் உண்டாகும்.

தனுசு

உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் சொல் லும் யோசனைகளைக் கேட்டு செயல்படாதீர்கள். தொழில்,வியாபாரம் நல்ல முறையில் லாபகரமாகவே நடைபெற்று வரும். கணவன்-மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்காவது மருத்துவச் செலவு ஏற்படக்கூடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்கினால், நன்மைகள் உண்டாகும்.

மகரம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள், அலுவலகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்களை அடைவார்கள். தொழில் துறையினர் மெதுவாகத்தான் வளர்ச்சியை அடைவார்கள். தொழிலாளர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வரக்கூடிய பணப் பிரச்சினைகளை பெண்கள் சமயோசிதமாக சமாளிப்பார்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள்.

கும்பம்

வழக்கத்தை விட தொல்லைகள் அதிகமாக இருக்கலாம். தொழில் துறையினருக்கு பல விதமான சங்கடங்கள் நேரலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை ஒழுங்காக செய்வதன் மூலம் அதிகாரிகளின் மதிப்பை பெறலாம். குடும்பநிலையில் சுமுகமான போக்கு இருக்கும். பெண்கள் சமயோசித புத்தியுடன் செயல்படுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கையை வழிபட்டால், கவலைகள் நீங்கும்.

மீனம்

உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது உயர் அதிகாரிகள் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். தொழில் துறையினர் அவர்களது கூட்டாளிகளின் ஒத்துழைப்பை பெறுவார்கள். அதன் காரணமாக தொழிலில் வளர்ச்சி காணலாம். கணவன்-மனைவி இடையே எதிர்பாராத விவாதங்களும், குழப்ப நிலையும் ஏற்படலாம். இந்த வாரம் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால், நலன்கள் பெருகும்.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD