Skip to main content

Posts

Showing posts from October, 2020

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2, 3-ந்தேதிகளில் மஞ்சள் ‘அலர்ட்’

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைகிறது. வருகிற 2, 3-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கான மஞ்சள் ‘அலர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நீங்கி, கடந்த 28-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், தென்மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் பெய்யும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர் உள்பட வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 29-ந்தேதி பிற்பகல் வரை மழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்

அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு சலுகை மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

2017-18-ம் ஆண்டில் இருந்து மருத்துவ கல்விக்காக தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. அதிலிருந்தே மருத்துவ கல்வியில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது. நீதிபதி தலைமையில் ஆணையம் இந்த குறைபாட்டை நீக்க தமிழக அரசு முன்வந்தது. அதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 21-ந் தேதியன்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புவரை பயின்று ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். பரிந்துரைகள் அதன் அடிப்படையில் நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகளை அரசு பெற்றது. மருத்துவக் கல்வி இடத்தை பெறுவதில், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடையே, அவர்களின் தொழில், கல்வி, சாதி, பொருளாதாரம் மற்றும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி பெறுதல

உங்கள் ராசி பலன் 30-10-2020 முதல் 05-11-2020 வரை

மேஷம் பல வகையான அனுகூலங்கள் கிடைக்கும் வாரம் இது. தொழில் செய்பவர்கள், அதில் ஏற்படும் தடையை அகற்றி வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், எதிர்பார்த்திருந்த சில நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை, பெண்களே நல்ல முறையில் தீர்த்து வைப்பார்கள். இந்த வாரம் முழுவதும் சண்முக கவசம் பாடி, முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ரிஷபம் நன்மையும், தொல்லையும் கலந்த பலன்களையே எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் செய்பவர்கள், தொழில் வளர்ச்சியையும், வருமானப் பெருக்கத்தையும் காண முடியும். குடும்ப நிர்வாகத்தைப் பொறுத்தவரை, பெண்களின் பங்கு சிறப்பாக இருக்கும். இந்த வாரம் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். மிதுனம் பெரும்பாலும் நற்பலன்களாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். தொழில் செய்பவர்கள், முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். குடும்பத்தில், பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். உடல்நலனில் அக

தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் கவர்னரின் ஒப்புதலுக் காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மூத்த அமைச்சர் கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கவர்னருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. சிறப்புச் சட்டம் இந்தநிலையில் திடீரென்று தமிழக அரசு, அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த மார்ச் 21-ந் தேத

கட்டுப்பாடுகள் தளர்வு தொடரும்: நவம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை நவம்பர் 30-ந் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு தளர்வுகள் தொடரும். ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு கண்ணுக்கு தெரியாத எதிரியாக உருவெடுத்து, உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கடைசியாக அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டித்து கடந்த செப்டம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்ட தளர்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன. தியேட்டர்கள் செயல்படலாம் * மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு உட்பட்ட வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. * வீரர்கள், வீராங்கனைகளின் பயிற்சிக்காக மட்டுமே நீச்சல் குளங்களை பயன்படுத்தலாம். * கண்காட்சி அரங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது தினமும் 3 ஆயிரம் டோக்கன் வினியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனம் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதையொட்டி தினமும் 3 ஆயிரம் ‘டைம் ஸ்லாட் டோக்கன்’ வினியோகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கோரிக்கை கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்தன. ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ததும் ஜூன் மாதம் 8-ந் தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்துக்கு திருப்பதியில் ‘டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கப்பட்டது. கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் திடீரென இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனை முற்றுகையிட்டு பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 3 ஆயிரம் டிக்கெட் வினியோகம் இந்த நிலையில் நேற்று முதல் இலவச தரிசனத்துக்கான ‘டைம் ஸ்லாட் டோக்கன்’களை வழங்கி, 3 ஆயிரம் பக்தர்க

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது. ஐகோர்ட்டு உத்தரவு மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். நடப்பு ஆண்டே வேண்டும் ஆனால் இந்த இ

தனி நபர் வருமானவரி தாக்கல் செய்ய டிச. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தனி நபர் மாதாந்திர சம்பளதாரர்கள் வருமானவரி படிவம் (ரிட்டர்ன்) தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு மற்றும் அதைத்தொடர்ந்த நடவடிக்கைகள்காரண மாக தற்போது படிவம் தாக்கல் செய்வதற் கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி சட்டப் பிரிவு 1961-ன்படி 2020 ஜூலை 31-க்குள் வருமானவரி தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் ஊரடங்கு காரணமாக இது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது டிசம் பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தணிக்கை செய்யப்பட வேண்டிய வருமானவரி கணக்குகளைக் கொண் டுள்ள தனி நபர்கள் மற்றும் அவர்களது பங்குதாரர்கள் ஆகியோருக்கான கால அவகாசம் அக்டோபர் 31-ம் தேதியாக இருந்தது. தற்போது இது 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் சர்வதேச நிதி பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை தொடர் பான விவரங்களை தாக்கல் செய்வோர் இதற்குரிய

ஆன்லைன் மூலம் இலவச தியான பயிற்சி

சென்னையில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் திருவல்லிக்கேணி கிளை சார்பில் ‘புதியதோர் தொடக்கம்’ என்ற பெயரில் நாளை (திங்கட்கிழமை) முதல் நவம்பர் 1-ந் தேதி வரையிலான 7 நாட்கள் ராஜயோக தியான பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் இலவசமாக நடத்தப்படுகிறது. ராஜயோக ஆசிரியை ரஞ்சனி இந்த வகுப்புகளை நடத்துகிறார். காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரையிலும் என இரண்டு பிரிவுகளாக இந்த தியான பயிற்சி ‘ஜூம் செயலி’ மூலமாக நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 7550201177 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. அதற்கு முன்னோட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் தென் தமிழக மாவ

ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் தமிழக அரசு உத்தரவு

ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு அலுவலகத்திலும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ஒவ்வொரு அலுவலகமும் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்டு 31-ந் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்களும் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு மாற்றியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 100 சதவீத பணியாளர்களுடன் 5 வேலை நாட்கள் தற்போதுள்ள நேர அளவின்படி அரசு அலுவலகங்கள் இயங்கும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 1-ந் தேதியில் இருந்து செயல்

மத்திய அரசு வட்டி சலுகை

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில், வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற பல்வேறு வகையிலான கடன்களுக்கான மாதத்தவணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், தொழில் கடன் என பல பிரிவுகளில் கடன் வாங்கியவர்கள் பலன் அடைகிற நிலை உருவானது. ஆனால் இந்த சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு தவணையை செலுத்தாத 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன. இது நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தபோது, மத்திய அரசை கடுமையாக சாடியது. அதைத் தொடர்ந்து, ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது. கடந்த 14-ந்தேதி இந்த வழக்கு விச

உங்கள் ராசி பலன் 23-10-2020 முதல் 29-10-2020 வரை

மேஷம் உங்கள் பணிகளில் கூடுதலான அக்கறை செலுத்துவதன் மூலம், உயர் அதிகாரிகளின் மதிப்பை பெறலாம். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். பெண்களின் பக்குவமான நடவடிக்கை களால் பிரச்சினைகள் சரியாகிவிடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இந்த வாரம் வியாழக் கிழமை குரு பகவானை வணங்குங்கள். ரிஷபம் சிறு சங்கடங்கள் வரலாம். அவற்றால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் அன்றாடப் பணிகளில் கவனமாக ஈடுபட்டு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும். தொழில் துறையினர் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும் பாதிப்புகள் இருக்காது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கையை வணங்கினால், கவலைகள் நீங்கும். மிதுனம் எதிலும் எச்சரிக்கையாய் செயல்பட வேண் டும். உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர் களின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம் பணிகளைக் குறைவின்றி செய்வீர்கள். தொழில் துறையினர் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவார்கள். குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். பயணங்களின் போது சிக்கல்கள் ஏற்பட்டாலும், தெய்வத்தின் துணையால் அகலும்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட பூமி பூஜை

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கல்பட்டு மாவட்டம் வேண்பாக்கத்தில் கட்டப்பட உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்த படம். சென்னை, அக்.24- தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டினார் “விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 ஆயிரத்து 482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வள

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 28-ந்தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந்தேதி தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்து இருக்கிறது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகம், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்கு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு விரைவில் முடிவு செய்வதாக கவர்னர் உறுதி எடப்பாடி பழனிசாமி தகவல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வதாக கவர்னர் உறுதி அளித் துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, அக்.24- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் அரசு பள்ளி மாணவர் களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர் களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச்சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்து பார்ப்பது சமநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து, கடந்த 21-3-2020 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அரசு பள்ளிகளில் பயிலும்

நவம்பர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கை: முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் வகுப்பை டிசம்பர் 1-ந்தேதி தொடங்கலாம் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு

நவம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளுக்கு வகுப்புகள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளில் இன்னும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன. இதுதொடர்பாக சமீபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவிப்பை வெளியிட்டது. அதில், அக்டோபர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் என்ஜினீயரிங் வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அட்டவணையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மாற்றத்தை கொண்டு வந்து அறிவித்துள்ளது. டிசம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கலாம் இதுகுறித்து அகில இந்திய தொழி

மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு: இறுதி மதிப்பெண் பட்டியலில் ஷெர்லின் விமல் முதல் இடம் 20 இடங்களுக்கு 47 பேரிடம் நேர்காணல் நடந்தது

மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஷெர்லின் விமல் முதல் இடத்தை பெற்றுள்ளார். மொத்தம் 20 இடங்களுக்கு 47 பேரிடம் நேர்காணல் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு(2019) மார்ச் மாதம் 2-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் டி.என்.பி.எஸ்.சி. அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு துறைகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் தேதியை நிர்ணயிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களையும் நடத்தி முடிக்க வேண் டியது உள்ளது. நாடு முழுவதும

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதால், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. நேற்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் பிற்பகல் வெயில் வறுத்தெடுத்தது. வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வளிமண்டல சுழற்சி வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமா

நன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு சிறையில் இருந்து சசிகலா பரபரப்பு கடிதம்

நன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு எடுப்பார்கள் என சிறையில் இருந்து சசிகலா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வக்கீலுக்கு கடிதம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரங்களை அறிந்துகொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கொரோனா பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கொரோனா தொற்று பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக மீண்டு சகஜநிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன். அபராத தொகையை செலுத்தவும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து நேர்காணல்களை கர்நாடக சிறைத்துறை தற்காலி

ஒரு சொல்.. பொருள் பல..

உலகம்: பூமி, தரணி, வையகம், பார், புவனம், ஞாலம், அவனி. நிலவு: சந்திரன், மதி, அம்புலி, திங்கள், பிறை துன்பம்: வேதனை, கவலை, துயரம், இடர், இன்னல், அல்லல். அன்பு: பாசம், நேசம், கருணை, இரக்கம், காதல், ஈரம். அழகு: எழில், கவின், சுந்தரம், வடிவு புத்தகம்: நூல், ஏடு, இழை, பனுவல். ரத்தம்: குருதி, உதிரம், சோரி, கறை நெருப்பு: தீ, அழல், தழல், அனல், கனல். ஒளி: சுடர், வெளிச்சம், பிரகாசம், சோதி, கதிர், தீபம். மகிழ்ச்சி: உவகை, களிப்பு, இன்பம், ஆனந்தம், குனகலம். மன்னன்: வேந்தன், கோ, கோன், அரசன். காடு: வனம், அடவி, கானகம், ஆரணியம், அரணி. சூரியன்: ஞாயிறு, பகலவன், பரிதி, கதிரவன், ஆதவன்.

அறிந்துகொள்வோம்..

வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்று கண்டு பிடித்தவர், ‘ஐசக் நியூட்டன்’. நீரில் மிதக்கும் உலோகம், ‘லித்தியம்’. அபாகஸை கண்டுபிடித்த நாடு, ‘சீனா’. உலகிலேயே முதலில் தேசியக்கொடி உருவாக்கிய நாடு, ‘டென்மார்க்’. மனித உடலில் உள்ள மூட்டுக்களின் எண்ணிக்கை, ‘250-க்கு மேல்’. உலகில் அதிகமாக நெல் விளைவிக்கும் நாடு, ‘சீனா’. உலகில் முதன் முதலாக தேசிய கீதத்தை உருவாக்கிய நாடு, ‘இங்கிலாந்து’. இரண்டு கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு, ‘துருக்கி’. இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு, ‘சைபிரஸ்’. இலக்கியத்தில் 12 முறை நோபல் பரிசு பெற்ற நாடு, ‘பிரான்ஸ்’. மொரீசியஸ் நாட்டு மக்களில் 65 சதவீதம் பேர், இந்திய வம்சாவளியினர். உலகில் மொத்தம் 535 எரிமலைகள் உள்ளன. இவற்றுள் 80 எரிமலைகள் கடலுக்குள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டினர், மஞ்சள் நிறத்தை துரோகத்திற்கு அறிகுறியாக கருதுகின்றனர்.

மனிதநேயம் வளரவேண்டும்

பாதிக்கப்படுகின்ற மனிதனுக்கு உதவுவதே மனிதநேயம். இந்த பண்பு எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதே மனிதநேயம் தான். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் பலரும் முதன்மை பெற்றவர்களாக இல்லை. இது பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. மனித பண்புகள் குறைகிறபோது சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. எனவே ஒருவரை ஒருவர் நேசிக்கிற மனிதநேயம் வளரவேண்டும். அதுவே வேற்றுமை மறையவும், ஒற்றுமை மலரவும் உதவும். ஒருவன் வாழ்வதற்கும், தன்னை மேம்படுத்தி கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். ஆனால் மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு நல்ல பண்புகளும், மனிதநேயமும் அவசியம். அதுதான் ஒருவருக்கு நீடித்த புகழை அளிக்கும். நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறபோது அது நற்பண்புகளாக மலர்கிறது. அந்த நற்பண்பின் செயல்கள் தான் உயர்ந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது. ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு பிரதிபலன் பாராமல் ஒவ்வொருவரும் உதவவேண்டும். அந்த நிலைக்கு உயர்வதற்கு வாழ்தலின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொள்ளவேண்டும். எந்தநிலையில் இருந்தும் வாழ்க்கையின் திசை மாறக்கூடும். யாரு

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்க வாய்ப்பு நிபுணர் குழு தலைவர் தகவல்

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவராக இருப்பவர் வி.கே.பால். இவர் நிதி ஆயோக்கின் உறுப்பினரும் ஆவார். இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் தொற்றுநோய் வலுவாக உள்ளது. கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும், 3 அல்லது 4 யூனியன் பிரதேங்களிலும் தொற்று பரவல் இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்கிற போக்கு உள்ளது. தற்போது இந்தியா தொற்றுக்கு எதிராக சிறப்பாக உள்ளது. ஆனாலும், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. ஏனென்றால், 90 சதவீத மக்கள் இன்னும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பில் உள்ளனர். இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்கிறீர்கள். ஐரோப்பாவில் பல நாடுகளில்

ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டது பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அரபிக்கடலில் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியது. அரபிக்கடல் இந்திய-ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரித்த சூப்பர்சானிக் குரூஸ் ரக ஏவுகணைதான் ‘பிரமோஸ்’. இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து ஏவ முடியும். இந்த நிலையில், போர்க்கப்பலில் இருந்து ஏவி நேற்று சோதனை நடத்தப்பட்டது. அரபிக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது. அது, இலக்கை துல்லியமாக தாக்கியது. ராஜ்நாத்சிங் பாராட்டு சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரமோஸ் ஏரோஸ்பேஸ், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார். இதுபோல், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ்ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம், இந்திய ஆயுத படைகளின் தி

15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்காக வானிலை காணப்படுகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், அதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திரு

இன்று நாள் எப்படி...? தினப்பலன் 19.02.2020

19.10.2020 சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 3-ம் நாள். திங்கட்கிழமை. திருதியை திதி இரவு (7.03) வரை. பிறகு சதுர்த்தி திதி. விசாகம் நட்சத்திரம் பகல் (11.01) வரை. பிறகு அனுஷம் நட்சத்திரம். மரணயோகம் பகல் 11.01-க்கு மேல். சித்தயோகம். கீழ்நோக்குநாள். மேஷம் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றி மறையும். பயணங்களால் ஆதாயமில்லாத அலைச்சல் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம் புதிய பாதை புலப்படும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். அயல்நாட்டிலுள்ள நண்பர்கள் மூலம் அனுகூலத் தகவல் வரலாம். மிதுனம் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. கடகம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தொழிலில் இணைத்துக் கொள்வீர்கள். கடமை உணர்வோடு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிம்மம் பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். கரைந்தசேமிப்புகளை ஈடுகட

தமிழக அரசு அறிவித்தபடி ‘அரியர்’ மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதற்கு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் தேர்வுகள் தொடர்ந்து தள்ளிப்போனது. இதையடுத்து அரசு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததோடு, அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவுரைகளையும் வெளியிட்டது. இதுதவிர அரியர் வைத்திருந்த மாணவர்களில் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நடத்தி முடித்து தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு விட்டது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வில் 99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே அரசு அறிவித்தபடி தேர்வு கட்டணம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஜனாதிபதி டிரம்ப் ஆவேசமாக கூறினார். டிரம்ப் தீவிர பிரசாரம் உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அங்கு கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ள ஜனாதிபதி டிரம்ப், மாகாண வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அனைவருக்கும் இலவச சிகிச்சை அந்தவகையில் நேற்று முன்தினம் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு, தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது கொரோனாவுக்கான சிகிச்சை முறை குறித்து பேசிய அவர், “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் (ஆன்டிபாடி)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் மேலும் 26 பேர் கைது சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, குரூப்-2 பட்டியலில் உள்ள அரசு பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேசுவரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40-க்கும மேற்பட்டோர் முன்னிலை பெற்றனர். குறிப்பிட்ட 2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தது. மேலும் இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தது. இதுதொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. முறைகேடுகளில் தொடர்புடைய தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவியாளர் ஓம்காந்தன் உள்ளிட்ட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு மட்டுமல்லாது, 2017-ம் ஆண்

புதிதாக ஊரடங்கு தேவை இல்லை நிபுணர் குழு அறிக்கை

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, அக்.19- இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் படிப்படியாக சரிந்துள்ளது. நேற்று கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே வந்து இருக்கிறது. 10 உறுப்பினர் நிபுணர் குழு இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலை பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் தலைவர் ஐதராபாத் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் எம்.வித்யாசாகர் ஆவார். 10 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு ஆராய்ந்து, ‘இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோயின் முன்னேற்றம், முன்கணிப்பு மற்றும் ஊரடங்கு பொதுமுடக்கத்தின் தாக்கங்கள்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. செப்டம்பரில் கொரோனா உச்சம்... அதில் கூறப்பட்டுள

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவானது

தமிழகத்தில், 98 நாட்களுக்கு பின்னர் பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவானது. மேலும் இதுவரை 86 ஆயிரம் முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,319 ஆண்கள், 1,595 பெண்கள் என மொத்தம் 3,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 90 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,036 பேரும், கோவையில் 319 பேரும், திருவள்ளூரில் 195 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேரும், தென்காசியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த

தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம்: நீட்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் பேட்டி

தாய்மொழி பாடத்திட்டத்தின் மூலம் புரிந்து படித்தால் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளலாம் என்று நீட்தேர்வில், அரசுப் பள்ளிகள் பிரிவில் தேனி மாணவர் ஜீவித்குமார் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர் உள்ளூரில் 8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். பின்பு சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 வரை படிப்பைத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட் தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். பள்ளியிலேயே பயிற்சியும் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார். இருப்பினும் இரண்டாம் முறையாக தற்போது இத்தேர்வை எழுதி 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி பிரிவில் இவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 1823வது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை நாராயணசாமி சென்னை