You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: April 2020

Sunday, April 26, 2020

மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2012-13-ம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு நீட்டிப்பு 31-12-2019 உடன் முடிந்தது. இதையடுத்து அந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி, 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1-1-2020 முதல் 31-12-2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும்.

மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள், சிறு வியாபாரிகளுக்கு சிறு கடன்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. அதற்காக இப்பகுதியில் உள்ள மாவட்ட வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கருத்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் மாத தவணை செலுத்தும் தொகை 6 மாத காலத்திற்கு பின்பு செலுத்துமாறு செய்யப்படும். நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள 5 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படவில்லை. மீதமுள்ள 10 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படும். இதில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை செப்டம்பரில் தொடங்கலாம் பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த குழுவினர் பரிந்துரை

கொரோனா தாக்கம் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும் என்றும், கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த குழுவினர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளும், நுழைவுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது எப்போது? எப்படி? என்பது குறித்தும், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கலாம்? என்பது குறித்தும், நுழைவுத்தேர்வுகள் எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் ஆராய 7 பேர் கொண்ட 2 குழுக்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது.

இந்த குழுக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கம் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும் என்பதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம் என்றும், கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பொறுத்து நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்றும் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனிலேயே நடத்திக்கொள்ளலாம் என்றும், பிற உயர்கல்வி நிறுவனங்கள் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் இந்த குழுக்கள் பரிந்துரை செய்துள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த 2 குழுக்களின் பரிந்துரைகளை அப்படியே ஏற்பது இயலாத காரியம் என்றாலும், அதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் பிறகு ஊரடங்கு தொடர்பாக அரசின் அடுத்த அறிவிப்பை பொறுத்து புதிய அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, April 24, 2020

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா சியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக் கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்து கொண்டியிருக்கிறது.

இத்தகைய மக்கள் விரோதமற்றும் அரசு ஊழி யர் விரோத போக்கை மத்திய அரசு உடனடி யாக கைவிடவேண்டும். பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அர சுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.