You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: December 2019

Thursday, December 19, 2019

எவ்வளவு சேமித்தாலும் வங்கி திவாலானால் ₹1 லட்சம் தான் கிடைக்கும்

வங்கி திவாலானால், அந்த வங் கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் எவ் வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் வாடிக் கையாளருக்கு ஒரு லட் சம் ரூபாய் வரைதான் திரும்பக் கிடைக்கும் என வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதி கழகம் (டிஐசிஜிசி) தெரிவித்துள்ளது.

இது தகவல் அறி யும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு டிஐசிஜிசி இந்த பதிலை அளித்துள்ளது. டிஐசிஜிசி சட்டம் 1961-ன் பிரிவு 16 (1)ன்ப டி , ஒரு வங்கி திவாலானால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகையில் ஒவ் வொருவருக்கும், அவர் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும், மூலதனம் மற்றும் வட்டியும் சேர்த்து அதிகபட்சமாக 1 லட்சம் மட்டும் தான் வழங்கப்படும்.

அதாவது, எவ்வளவு தொகை சேமித்திருந்தாலும், ஒரு லட் சத்துக்கு மட்டும் தான் காப்பீடு உள்ளது. அனைத்து வகை வர்த்தக வங்கிகள், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக் கும் டிஐசிஜிசி காப்பீடு பொருந்தும். இதுபோல், கூட்டுறவு வங்கிகளும், டிஐசிஜிசி சட்டம் பிரிவு ( 2)ன் கீழ் வைப்புத்தொகை காப்பீடு திட்டத்துக்குள் வந்துவிடும் என டிஐசிஜிசி கூறியுள்ளது.

தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் - அண்ணாநகர் கோட்டம் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் - அண்ணாநகர் கோட்டம் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Wednesday, December 18, 2019

ரசிகர்களை கவர்ந்த ரஜினியின் ‘தர்பார்’ டிரெய்லர்...இணையதளத்தில் சாதனை .

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிகம்பேர் பார்த்த டிரெய்லர் என்ற சாதனையும் நிகழ்த்தி உள்ளது.

தலைவா என்ற பின்னணி குரலுடன் தொடங்கும் டிரெய்லரில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் ரஜினி மிடுக்கோடு அறிமுகமாகிறார்.

தொடர்ந்து ரவுடிகளை நொறுக்கும் காட்சிகள் வருகின்றன. போலீஸ் ஆபிசரா சார் அவன் கொலைகாரன் என்ற குரல் ஒலிக்கிறது. நயன்தாராவை காதலிக்கிறார். ‘கேம் ஆட்றாங்களா நம்ம கிட்டயேவா’ போலீஸ்கிட்ட லெப்ட்ல வச்சுக்கோ ரைட்ல வச்சுக்கோ ஸ்டெய்ட்டா வைச்சுக்க வேணாம்னு சொல்லு என்று பஞ்ச் பேசுகிறார்.

இடையிடையே துப்பாக்கி சூடு, கார்கள் தீப்பிடிக்கும் காட்சிகள் வருகின்றன. டிரெய்லர் இறுதியில் என்ன பாக்குற ஒரிஜினல் ஆகவே நான் வில்லம்மா. இது எப்படி இருக்கு என்று பஞ்ச் பேசுகிறார். ஐ அம் எ பேட் காப் என்ற வசனமும் உள்ளது. அரசியல் வசனம் இல்லை. டிரெய்லரை பார்க்கும்போது முழு அதிரடி படமாக தெரிகிறது. ரஜினியின் வழக்கமான நக்கல் காமெடியும் உள்ளது. சண்டை காட்சிகளில் ரஜினி ஸ்டைல் தெறிக்கிறது. சுனில் ஷெட்டியை குரூர வில்லனாக காட்டி உள்ளனர். காதல் காட்சிகளில் நயன்தாரா அழகாக தெரிகிறார். மொத்தத்தில் தர்பார் படம் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tuesday, December 17, 2019

காபியை எப்போது குடிக்கலாம்?

காலையில் காபியில் கண் விழித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிந்தது போல இருக்கும். காபி குடிப்பது நல்லதா, கெட்டதா என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், காபி பிரியர்கள் இல்லாத வீடுகளே கிடையாது. சோம்பலைப் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலியைப் போக்கவும் என விதவிதமான காரணங்களுக்காக காபி குடிப்பவர்கள் உண்டு.

இன்றோ காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழலை எல்லாம் தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் விதவிதமாகத் தோன்றும் காபி ஷாப்புகளை அதற்கு உதாரணமாகச் சொல்லமாம். சூடான காபி, குளிரான காபி, வறக்காபி என காபியில் வெரைட்டிகளும் வந்துவிட்டன.

இந்த காபி புராணம் இப்போது எதற்கு என்றுதானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கிறது. காபி குடிக்க உகந்த நேரம் எது? நினைத்தபோதெல்லாம் காபி குடிப்பவர்களுக்கு இது ஜர்க் ஆக்கும் கேள்வி. காபி குடிக்கவும் உகந்த நேரம் இருக்கிறது என்பதே ஆராய்ச்சியாளர்களின் பதில். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்டீபன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் காபி தொடர்பாக மெகா ஆய்வை நடத்தி அதிரடித்தார்.

அந்த ஆய்வின் முடிவில் காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வாளர் அதிரடித்தார். அன்றாட நடவடிக்கைகளுக்காக உடம்பில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றில் ஒன்று கார்ட்டிசால். இந்த ஹார்மோன்தான் நமது சுறுசுறுப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணம். இந்த ஹார்மோன் காலை 8 முதல் 9 மணி வரைதான் சுரக்குமாம். அந்த நேரத்தில் நம்முடைய நாளை சுறுசுறுப்பாகத் தொடங்க காபி குடிப்பது வீணாகிவிடும். அந்தச் சுரப்பை இன்னும் அதிகப்படுத்திவிடும் என்று அதற்குக் காரணமும் சொல்லியியிருந்தார்.

கார்ட்டிசால் சுரப்பு மிகக் குறைவாக இருக்கும் நேரமான காலை 9.30-11.30 மணிக்குள்ளும், மாலை 1.30 - 5.00 மணிக்குள் காபி குடித்தால் பிரச்சினை இல்லை என்றும் மில்லர் கூறியிருந்தார். இந்த ஆய்வை ஏற்பதா, இல்லையா என்ற குழப்பம் ஆய்வாளர்களிடையே இருந்தது. இந்நிலையில் காபி ஆய்வை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் மில்லர். இதனையடுத்து காபி பிரியர்கள் பலரும் காபி குடிக்கும் நேரத்தை மாற்றத் தொடங்கிவிட்டார்கள்.

அப்போ நீங்கள்?

2019-ல் இணையமும் தொழில்நுட்பப் போக்குகளும்

இணைய உலகைப் பொறுத்தவரை 2019 சவாலுடனே தொடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆண்டின் தொடக்கத்தில் வைரலாகப் பரவிய #10இயர்சாலஞ்ச் எனும் பத்தாண்டுச் சவால்தான் அது. இந்தச் சவாலோ, அதன் பின்னே இருந்த சுவாரசியமான கருத்தாக்கமோ முக்கியமில்லை. இந்தச் சவால் தொடர்பாக எழுந்த சர்ச்சையும் சந்தேகமும்தான் கவனத்துக்குரியது.

பத்தாண்டுகளுக்குமுன் எடுத்த தங்கள் பழைய ஒளிப்படத்துடன், தற்போதைய ஒளிப்படத்தையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவித்த இந்தச் சவால், உண்மையில் முகமறிதல் ஆய்வுக்குப் பயனாளிகளின் படங்களைச் சேகரிப்பதற்கான ஃபேஸ்புக் நிறுவனத்தின் சதியே எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஃபேஸ்புக் இதைத் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த வைரல் நிகழ்வு அப்படியே அடங்கிப்போனாலும், முகமறிதல் (Facial recognition) தொடர்பான சர்ச்சை இணையத்தைத் தொடர்ந்து உலுக்கிக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஆய்வில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், முகமறிதல் நுட்பத்திலும் கவனம் செலுத்திவருவதையும், இதற்காக முகங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதையும் உணர்த்தும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. முகமறிதல் நுட்பத்தின் சாத்தியம் ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் பயனாளிகளின் தனியுரிமைக்கு (Privacy) ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளன.

பாதுகாப்பு மீறல்கள்

முகமறிதல் நுட்பம் குறித்த கவலை மட்டுமல்லாமல், இணையப் பாதுகாப்புக்குச் சோதனையான ஆண்டாகவும் 2019 அமைந்தது. பல்வேறு நிறுவனங்களில் ஹேக்கர்களின் கைவரிசையால் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் தொடர்பான செய்திகள் வெளியாயின. பயனாளிகளின் கடவுச் சொற்கள், கடன் அட்டை விவரங்கள் உள்ளிட்டவற்றை ஹேக்கர்கள் களவாடினார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின. 2019-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 410 கோடித் தகவல்கள் களவாடப்பட்டதாக ‘ஃபோர்ப்ஸ்' இதழ் தெரிவிக்கிறது. மாதந்தோறும் 70 கோடித் தகவல்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானதாகவும் ‘ஃபோர்ப்ஸ்' தெரிவிக்கிறது.

இதனிடையே, முன்னணிக் குறுஞ்செய்திச் சேவையான வாட்ஸ் அப், ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளான செய்தியும் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ் அப்பில் இருந்த தொழில்நுட்ப ஓட்டையைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் கைவரிசை காட்டியதாகச் செய்தி வெளியானது. இந்தக் குறை சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்தது.

என்றாலும் சில மாதங்கள் கழித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல்செய்த வழக்கு மூலம், இந்தத் தாக்குதல் தொடர்பாகத்

திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாயின. இந்தத் தாக்குதலின்போது ‘பெகசாஸ்’ என்ற உளவு மென்பொருள் சில பயனாளிகளின் செல்பேசியில் நிறுவப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இந்திய இதழாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையச் சுதந்திரம்

இணையப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, இணையச் சுதந்திரத்துக்கும் இந்த ஆண்டு சோதனையாகவே அமைந்தது. முதன்மை இணையத்தில் இருந்து ரஷ்ய இணையத்தைத் தனிமைப்படுத்தும் திட்டத்தை ரஷ்யா அறிவித்தது. ஈரானில் உள்நாட்டுப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இணையம் முடக்கப்பட்டது; பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இணையம் முடக்கப்பட்டது.

இணைய வசதி முடக்கப்படுவது தொடர்பான செய்திகள் இணைய ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தினாலும், ஹாங்காங்கில் நடைபெறும் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தில் ஒருங்கிணைப்புக்கும் தகவல் பகிர்வுக்கும், இணையம், புளுடூத் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் புதுமையாகப் பயன்படுத்தப்படும் தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்தன!

செல்பேசிப் புதுமை

இந்த ஆண்டு செல்பேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம்செய்தாலும், அவற்றில் புதுமையாக ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டும். சில மேம்பட்ட அம்சங்களைத் தவிர, பெரும்பாலான செல்பேசிகள் அடிப்படையில் பொதுவான அம்சங்களையே கொண்டிருந்தன. என்றாலும், ஆண்டின் தொடக்கத்தில் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் திரை கொண்ட ‘போல்டபிள் போன்’ மாதிரியை அறிமுகப்படுத்தின. சீனாவின் ஹுவேய் நிறுவனம், மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே போல்டபிள் மாதிரியை அறிமுகம் செய்தது.

செல்பேசி உலகின் அடுத்த கட்டப் புதுமை, போல்டபிள் போன் சார்ந்தே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹுவேய் நிறுவனம், அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதலில் சிக்கித் தவித்தது. சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்க்கும் குற்றச்சாட்டின் பேரில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது, தொழில்நுட்ப உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது.புதிய மைல்கல்

இணைய சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, மார்ச் மாதம் இணைய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வலை என்று பிரபலமாக அழைக்கப்படும் இணையத்தின் முக்கிய அங்கமான, வைய விரிவு வலைக்கான (World Wide Web) கருத்தாக்கத்தை பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ சமர்ப்பித்து 30 ஆண்டுகள் நிறைந்தது. 1989 மார்ச் 12 அன்று வலைக்கான மூல வடிவக் கருத்தாக்கத்தை சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடத்தில் அவர் சமர்ப்பித்தார். இந்த ‘வலை 30’ நிகழ்வைக் கொண்டாடும் வகையில், வலையில் உருவாக்கப்பட்ட முதல் இணையதளத்தைப் பார்வையிடுவதற்கான பிரவுசரும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

அத்துடன், கருந்துளை (Blackhole) முதன்முறையாகப் படம் எடுக்கப்பட்ட செய்தி வெளியாகி, அதற்கு முக்கியக் காரணமாக அமைந்த அமெரிக்க இளம் மென்பொருளாளர் கேத்தி போமனை இணையம் கொண்டாடி மகிழ்ந்தது. அதேபோல், நிலவில் முதன்முறையாக மனிதன் தரையிறங்கிய நிகழ்வின் பொன்விழா ஆண்டாக இது அமைந்தது.

மனிதரை நிலவுக்குக் கொண்டு சென்ற அப்போலோ விண்கலத்தின் கணினி, செயல்திறனில் நவீன செல்பேசி சிப்பைவிடப் பல மடங்கு குறைவாக இருந்தாலும், அந்தக் காலத்தில் தனக்கான பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிச் சாதனை படைத்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

Saturday, December 14, 2019

மாணவா்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி: அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் அமல்

மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ் ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவா்களின் வருகைப்பதிவு விவரமும் தினமும் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்களால் பதிவு செய்யப்படுகிறது.

இதற்கிடையே மாணவா்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி சென்னை போரூா் அரசுப் பள்ளி உள்பட சில பள்ளிகளில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் விடுப்பு எடுக்க முடியாது. அதே வேளையில் மாணவா்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இதற்கு பெற்றோா் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.


அதற்கு ஏதுவாக பெற்றோா்களின் தொலைபேசி எண்ணை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கணிசமான மாணவா்களின்பெற்றோா் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சில பள்ளிகளில் மாணவா்களின் தொலைபேசி எண்ணாக ஆசிரியா்களின் செல்லிடப்பேசி எண் தரப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அனைத்து மாணவா்களின் பெற்றோா் தொலைபேசி எண்ணை சரிபாா்த்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தவறாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியா்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை டிசம்பருக்குள் முடித்து ஜனவரி மாதம் முதல் மாணவா்களின் வருகைப்பதிவை குறுஞ்செய்தி மூலம் தினமும் பெற்றோா்களுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Wednesday, December 11, 2019

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திரு விழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீப தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டு சிவனிடம் சென்று கேட்டனர். அப்போது அக்னி பிழம்பாய் தோன்றிய சிவன் தனது அடியையும், முடியையும் கண்டறிந்து வருபவரே பெரியவர் என தெரிவித்தார். அடியை காண திருமால் வராக (பன்றி) உருவமெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். ஆனால் அடியை காண முடியாமல் திரும்பினார். பிரம்மா அன்ன வடிவெடுத்து வானில் பறந்து சென்றார். பின்னர் அவர் முடியை கண்டு விட்டதாக பொய் கூறினார்.

பிரம்மா பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவுக்கு உலகில் எங்கும் கோவில் கட்டி வழிபட கூடாது என்று சாபம் விட்டார்.

பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே தான் என்ற அகந்தையை போக்க திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக சிவன் காட்சி அளித்த அந்த நாளை கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். அக்னி பிழம்பாக காட்சி அளித்ததால் மலையை பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடத்தில் 4 பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பவுர்ணமி மற்றும் தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். மலையில் அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்ததால் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாதீபம் ஏற்றப்படும் நாளே திருக்கார்த்திகை நாளாக பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி சிவனை வழிபட்டு வருகின்றனர்.

தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி தேரோட்டம் 6-ந் தேதியும், பஞ்ச மூர்த்திகளின் பஞ்சரத தேரோட்டம் 7-ந் தேதியும் நடந்தது.

இதில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களை ஒவ்வொன்றாக மாடவீதிகளில் பக்தர்கள் வீதி உலாவாக இழுத்து சென்று வழிபட்டனர்.

நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்குள் கூட்டம், கூட்டமாக வந்து பரணி தீபத்தை தரிசிக்க காத்து இருந்தனர். பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமி சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும் பரணி தீபம் ஏற்றுவதற்கான பூஜைகள் தொடங்கியது.

உலகத்தின் இயக்கத்தை நடத்துவதும், உயிர்களை காப்பதும் இந்த ஜோதிதான் என்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதில் இருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் வெளியே கொண்டு வந்தனர். பரணி தீபத்தை பார்த்ததும் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட்டு சாமியை வழிபட்டனர். பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே பரணி தீபம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது.

அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். சிவாச்சாரியார்கள் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தீப விழாவை காண நேற்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதன் காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகம், அரசுக்கு சொந்தமான இடங்கள், மடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள 9 வழி இணைப்பு சாலையில் எந்த பகுதியில் வந்து இறங்குகிறார்களோ? அந்த பகுதியில் நின்று கொண்டு மலையை வணங்கி கும்பிட்டு விட்டு அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினார்கள்.

கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள 8 லிங்கங்கள், தட்சிணாமூர்த்தி, திருநேர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு சாமிகளை பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். நேரம் செல்ல, செல்ல கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலில் பக்தர்கள் ஆமை வேகத்தில் அடியெடுத்து வைத்து கிரிவலம் சென்றனர்.

கிரிவலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் நடந்து சென்றனர். மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிவலம் சென்றனர்.

மகா தீபத்தை தரிசிக்க பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சன்னதியில் இருந்து ஆடியபடி வந்து தீப மண்டபத்தில் உள்ள தங்க விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மாலை 6 மணிக்கு சாமி சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து சென்றவுடன் சாமி சன்னதி முன்பாக உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில் 2,668 அடி உயர மலை உச்சியில் சிவாச்சாரியார்கள் சங்குகள் முழங்க பர்வதராஜ குலத்தினர் மகாதீபம் ஏற்றினார்கள். மலை ஏறிய பக்தர்கள் கொப்பரை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் அங்கிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

கிரிவல பாதையில் சென்று கொண்டிருந்த பக்தர்கள், கோவிலில் இருந்த பக்தர்கள், திருவண்ணாமலை நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மேல்மாடியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள், திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தீபம் ஏற்றியவுடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷ முழக்கத்துடன் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மகா தீபம் ஏற்றப்பட்டதும் நகரம் முழுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கை நடந்தது. அதன்பின்னர் பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து வீடு, கடை, வணிக வளாகங்களில் மின்விளக்குகளை எரிய செய்தனர்.

தீப விழாவை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.

இன்று (புதன்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், நாளை (வியாழக்கிழமை) காலை உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி, பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம், 14-ந் தேதி (சனிக்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதியுலாவும் நடக்கிறது.

Sunday, December 8, 2019

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் ‘சீல்’ வைத் துள்ளனர். ‘சீல்’ வைப்பதற்கு முன்பு விளக்க நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை.

மனுதாரர் விடுதியில் திருமணம் ஆகாத ஜோடிகளை அறையில் தங்க வைப்பது ஒழுக்கக்கேடா னது என்று சமூக வலைதளங் களில் தகவல் பரவியதால், அதிகாரி கள் இந்த அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளனர். ஓர் அறை யில், திருமணம் ஆகாத ஆணை யும், பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோ தமா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பதில் இல்லை.

ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்ற சட்டமோ, விதிகளோ இல்லை. மேலும், திருமணம் செய்யாமலேயே ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்ற போது, ஓர் அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்ற மாகும்? எனவே, ஓர் அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார் கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு ‘சீல்’ வைப்பது என்பது சட்ட விரோதமாகும்.

மேலும், விடுதி அறையில் மது பாட்டில்கள் இருந்தன. மது விற் பனை செய்ய விடுதி நிர்வாகம் உரிமம் எதுவும் பெறாததால், இது சட்டவிரோத செயல் என்று அதிகாரிகள் மற்றொரு குற்றச் சாட்டை சுமத்தியுள்ளனர். ஆனால், இந்த மதுபாட்டில்கள் விற்பனை செய்யவில்லை. அறையில் தங்கும் விருந்தாளிகள், அவற்றை கொண்டு வந்துள்ளனர். அதுவும் விடுதியில் தங்க வருபவர்களிடம் மதுபாட்டில்கள் இருக்கிறதா? என்பதை பரிசோதிப்பது கடினம் என்று விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

விடுதியில் தங்க வருபவர்கள் மது அருந்துவதற்காக மதுபாட்டில் களைக் கொண்டு வந்துள்ளனர். 1996-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு மது (சொந்த பயன் பாட்டுக்காக வைத்திருத்தல்) விதி களின்படி, கடந்த 2017, ஜூன் 9-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. அதில் “ஒரு நபர், 4.5 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஓயின் வைத்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளது. எனவே, விடுதி அறையில் மதுபாட்டில்கள் இருந் தது சட்டவிரோதம் இல்லை என்று முடிவு செய்கிறேன்.

மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டு மொத்த நடவடிக்கையும் சட்ட விரோதமானது. ‘சீல்’ வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு நோட் டீஸ் வழங்கவில்லை. எனவே, விடுதியில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக ஓர் அறையில் தங்கினார்கள் என்பதும், மதுபாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல.

எனவே, விடுதி நிர்வாகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து, 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ ஆட்சியர் அகற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கூறியுள்ளார்.