வாட்ஸ் ஆப்பில் புதுசேவை

இளைய தலைமுறையின் விருப்பமான தகவல் பரிமாற்ற மென்பொருளான வாட்ஸ் ஆப்பில், பலவிதமான புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றாக வந்திருக்கிறது, ‘பிளாக் நோட்டிபிகேஷன்’. அதாவது வாட்ஸ் ஆப்பில் பேச விருப்பமில்லாதவர்களை ‘பிளாக்’ (தடுப்பு) என்ற வசதி மூலம் எளிதில் தவிர்த்துவிட முடியும். இந்த வசதியின் மூலம் நாம் தவிர்க்க நினைப்பவர்களை வாட்ஸ் ஆப்பில் இருந்து முற்றிலுமாக தவிர்த்துவிடலாம். அவர்கள் அனுப்பும் தகவல்கள் நமக்கு வந்துசேராது. நம்முடைய புகைப்படம் (டி.பி.) மற்றும் நம்முடைய ஸ்டேட்டஸ்களையும் அவர்களால் பார்க்கமுடியாத அளவிற்கு பிளாக் வசதி, நமக்கு உதவியாக இருக்கும். இந்த வசதியைதான், வாட்ஸ் ஆப் தற்போது மேம்படுத்தி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த பதிப்பில் (அப்டேட் வெர்ஷன்), நாம் யாரை பிளாக் பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அவர்களுக்கு அது தெரியும்படியும், குறிப்பிட்ட நபர்களை நாம் பிளாக் செய்திருக்கிறோம் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டும் வகையிலும், பிளாக் வசதியை மேம்படுத்தி வருகிறார்கள்.

Comments