ஏ.எஸ்.யு.எஸ். விவோபுக் லேப்டாப்

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் மூன்று லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. விவோபுக் 14எக்ஸ்403, விவோபுக் 14எக்ஸ்409, விவோபுக் 15எக்ஸ்509 ஆகிய பெயரில் இவை வெளியாகியுள்ளன. இதில் விவோபுக் 15 மாடலானது நான்கு முனையும் இல்லாத நானோ எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டது. இத்தகைய நுட்பம் கொண்ட லேப்டாப்கள் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

விவோபுக் 14எக்ஸ்403

14 அங்குல திரையைக் கொண்டது. இதில் 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 8565 யு சி.பி.யு., ஒருங்கிணைந்த இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக் கார்டு உள்ளது. 4 ஜி.பி. ரேம் கொண்ட இதை 16 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது. நினைவக வசதி 1 டி.பி. வரையாகும்.

வை-பை இணைப்பு, புளூடூத், யு.எஸ்.பி., ஹெச்.டி.எம்.ஐ. கார்டு வசதி, கார்டு ரீடர் உள்ளிட்டவற்றுடன் விரல் ரேகை உணர்ந்து செயல்படும் வசதியும் இதில் உள்ளது. 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹெச்.டி. வெப் கேமரா, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கீ போர்டு உள்ளது. இதன் எடை ஒரு கிலோ 300 கிராம். இதன் விலை ரூ.54,990.

விவோபுக் 14 எக்ஸ் 409

14 அங்குல திரையைக் கொண்ட இந்த லேப்டாப்பில் 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ78565 பிராசஸர் உள்ளது. ஒருங்கிணைந்த கிராபிக் கார்டும் உள்ளது. இதில் 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

வை-பை இணைப்பு, புளூடூத், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி. எம்.ஐ. மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி உள்ளிட்டவை உள்ளன. இதில் வி.ஜி.ஏ. வெப் கேமரா உள்ளது. இதன் விலை ரூ.32,990.

விவோபுக் 15எக்ஸ் 509

இந்த மாடலில் 15.6 அங்குல திரை உள்ளது. இதில் 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 பிராசஸர் உள்ளது. ஒருங்கிணைந்த கிராபிக் கார்டும் உள்ளது. 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம், 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதிகொண்டது.

வை-பை, புளூடூத், யு.எஸ்.பி. போர்டு, ஹெச்.டி.எம்.ஐ. மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி உள்ளது. தேவைப்பட்டால் விரல் ரேகை பதிவு வசதியை தேர்வு செய்யலாம். வி.ஜி.ஏ. வெப் கேமரா கொண்டது. இதன் விலை ரூ.30,990.

Comments