இஸட்.எம்.ஐ. நிறுவனத்தின் அதிவேக சார்ஜர்

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இஸட்.எம்.ஐ. நிறுவனம், ஜியோமி நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமாகும். இந்நிறுவனம் மேக் புக், ஐ-போன், லேப்டாப், டேப்லெட் போன்றவை விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 65 வாட் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான சார்ஜரைப் போன்றதல்ல.

இது ஆப்பிள் நிறுவனத்தின் 61 வாட் யு.எஸ்.பி. சி டைப் பவர் சார்ஜரை விட மிகவும் சிறியது. மேலும் இதன் விலையும் குறைவு. அதாவது ஆப்பிள் சார்ஜரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதன் விலையாகும். அதாவது இதன் விலை 12 டாலராகும்.

இது மடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேக் புக் ஏர், ஐ-பேட் புரோ, ரெட்மி கே 20 புரோ, எம்.ஐ. 9, நின்டின்டோ சுவிட்ச் போன்ற மின்னணு சாதனங்களை விரைவாக சார்ஜ் ஏற்ற உதவும். இதில் 7 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மின் அழுத்த மாறுபாடு, அதிக சூடாவது உள்ளிட்டவற்றிலிருந்து மின்னணு சாதனங்களை காக்கும். இதன் விலை சுமார் ரூ.2,130.

Comments