ஜியோமியின் ‘ரெட் மி’ டி.வி.

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் ‘ரெட் மி’ என்ற பெயரில் ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சீனாவில் அறிமுகமாகியுள்ளது. பிரீமியம் மாடலாக 70 அங்குலத்தில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வெளிவந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

4 கே யு.ஹெச்.டி. பேனல் கொண்டது. ஒன் பிளஸ் நிறுவனம் டி.வி. தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதற்கு முன்பாக தங்களது தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜியோமி நிறுவனம் டி.வி.யை சந்தைப்படுத்தியுள்ளது. இது விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும். விலை குறைவாக நிர்ணயித்து சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Comments