லெனோவா திங்க்புக் லேப்டாப்

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் லெனோவா நிறுவனம் திங்க்புக் வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. திங்க்புக் 14 மற்றும் திங்க்புக் 15 என்ற பெயரில் வந்துள்ள இந்த லேப்டாப்களில் 10-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளது. இத்துடன் இவை ஹை ரெசல்யூஷன் திரையைக் கொண்டவையாக வந்துள்ளன. அலுமினியம் சேஸிஸுடன் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளன.

திங்க்‌ஷீல்டு பாதுகாப்பு அம்சம் உள்ள இதில் வை-பை 6 இணைப்பு வசதி உள்ளது. விரல் ரேகை பதிவு மட்டுமின்றி இதில் திங்க்‌ஷட்டர் நுட்பமானது வெப் கேமரா செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவும்.

இதில் மறைவாக யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஸ்கைப் ஹாட்கீ இருக்கும். திங்க்புக் 14 மாடல் விலை சுமார் ரூ.52 ஆயிரமாகும். திங்க்புக் 15 மாடல் விலை சுமார் ரூ.53 ஆயிரமாகும்.

Comments