ஸ்மார்ட் கடிகாரம்

சீனாவைச் சேர்ந்த உமிடி கி யுவேக் நிறுவனம் ஸ்பீக்கருடன் கூடிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் 5.0-ல் செயல்படும் முதலாவது ஸ்பீக்கர் இதுவாகும். அத்துடன் அலார கடிகாரம் இருப்பது இதன் சிறப்பு. குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்யும் உமிடிகி, தற்போது ஸ்மார்ட் கடிகாரத்துடன் கூடிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

இது 5.0 புளூடூத் இணைப்பைக் கொண்டிருப்பதால், இதை செயல்படுத்த பிரத்யேக செயலி (ஆப்) எதுவும் தேவையில்லை. கடிகாரம் காட்டுவதோடு, ஸ்மார்ட்போனில் ரம்மியமான இசையைக் கேட்டு மகிழலாம். அத்துடன் இரவில் ஒளிரும் வகையில் இதில் உள்ளது.

Comments