பிளாபங்க்ட் ஸ்மார்ட் டி.வி.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் ஜெர்மனியின் பிளாபங்க்ட் நிறுவனம் ஸ்மார்ட் டி.வி. தயாரிப்பில் இறங்கியுள்ளது. ஒலி சார்ந்த தயாரிப்பில் முன்னணியில் இருந்துவரும் இந்நிறுவனம் தற்போது ஒளி சார்ந்த டி.வி. தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு அறிந்துள்ள இந்நிறுவனம் குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை களமிறக்கி உள்ளது. ஜென் இஸட் என்ற சீரிஸில் எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல டி.வி.யின் விலை ரூ.9,999, இதற்கு அடுத்த மாடலாக 40 அங்குல டி.வி. ரூ.15,999 விலையில் கிடைக்கிறது. இது தவிர தற்போது 43 அங்குலம் விலை ரூ.19,999) மற்றும் 49 அங்குல விலை ரூ.24,999) ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக அறிமுகம் ஆகியுள்ள 43 அங்குலம் மற்றும் 49 அங்குல டி.வி.க்கள் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் கொண்டவை. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுபவை. கேபிள் மற்றும் டி.டி.ஹெச். பயன்படுத்துவோருக்கு இது மிகவும் ஏற்றது.

இதில் 30 வாட் ஸ்பீக்கர், வை-பை, குவாட் கோர் 1.5 ஜி.ஹெச்.இஸட். பிராசஸர் உள்ளது. நெட்பிளிக்ஸ், யூ-டியூப், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, ஸ்போர்டிபை ஆகியவற்றையும் இணைக்கலாம்.

Comments