ஆல் இன் ஒன் காம்போ கார்டு ரீடர்

ஆர்.டி.எஸ். நிறுவனம் ஆல் இன் ஒன் காம்போ கார்டு ரீடரை அறிமுகம் செய்துள்ளது. இதில் பென் டிரைவ், கேமரா, மொபைல்போன், பர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், நோட்புக் உள்ளிட்ட சாதனங்களை இணைக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.369. இதில் 3 யு.எஸ்.பி. ஹப், அதிவேக யு.எஸ்.பி 2.0 இணைப்பு வசதியுடன் உள்ளது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 480 எம்.பி.பி.எஸ். ஆகும். இதற்கு இரண்டு ஆண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

இது அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் இதை நீங்கள் அலுவலக விஷயமாக செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்ல முடியும். இதை பென் டிரைவ் போலவும் பயன்படுத்த முடியும். நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக் கூடியது.

Comments