சாம்சங் ஸ்மார்ட் ஸ்பீக்கர்

கொரிய நிறுவனமான சாம்சங் விரைவிலேயே ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்து உள்ளது. இதற்கு ‘கேலக்ஸி ஹோம் மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கூகுள் ஹோம்மினி மற்றும் அமேசான் எக்கோ டாட் ஆகிய கருவிகளுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர் அனைவரும் இந்த ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்கு ஏற்ப தங்கள் ஸ்மார்ட்போனில் மாற்றங்கள் செய்து கொள்ள நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

பீட்டா புரோகிராம் எனப்படும் ஸ்மார்ட்போன் மேம்பாட்டு நடவடிக்கையை பிற நாடுகளில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களுக்கு இந்நிறுவனம் அளிக்குமா என்பது பின்னரே தெரியும். இதன் செயல்பாட்டுக்கென பிரத்யேக இயங்குதளத்தை உருவாக்கி அதை தனது ஸ்மார்ட்போன் வாயிலாக சோதித்து பார்த்து வருகிறது.

இதற்கென பிரத்யேக மென்பொருளை (சாப்ட்வேர்) இந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பீக்கர் ஏற்கனவே பிக்ஸ் பி தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும். இந்த ஸ்பீக்கரில் ஏ.கே.ஜி. பிராண்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குரல் வழி மூலம் பணிகளை செயல்படுத்த வசதியாக சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது சாம்சங்.இது பேட்டரியில் செயல்படுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தில் இந்த மாடல் மற்றவர்களால் பெரிதும் விரும்பப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. ஓராண்டாகவே ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பு நிலைத்து வெற்றி பெற வேண்டும் என்பதில் தொடர்ந்து புதுப்புது சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேலக்ஸி ஹோம் மினி சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது உண்மையே.

Comments