அல்காடெல் டேப்லெட்

அல்காடெல் நிறுவனம் 10 அங்குலத்தில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது ‘3 டி 10’ என்ற பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் குவாட் கோர் மீடியாடெக் எம்.டி.8765 பி பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2 மெகா பிக்ஸெல் முன்புற, பின்புற கேமராக்கள் உள்ளன. இது 4-ஜி வோல்டே இணைப்பு, சிம் கார்டு போடும் வசதியும் உள்ளது. அழைப்புகளை ஹெட் செட் மூலமும் பதிலை ஸ்பீக்கர் மூலமும் அளிக்க முடியும். இதில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் வசதி உள்ளது.

இதில் இரட்டை ஸ்பீக்கர் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999. வெளிப்புறம் ஸ்பீக்கர் உள்ள மாடலில் 2,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.14,999. இதில் புளூடூத் கீபோர்டு உள்ள மாடல் விலை சுமார் ரூ. 13,000.

Comments