ஏசர் எல்.இ.டி. புரொஜெக்டர்

தாய்வானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. சி.250ஐ என்ற பெயரிலான இந்த புரொஜெக்டர் சிலிண்டர் (உருளை) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆட்டோ போர்ட்ரைட் எனும் நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம். இது 30 ஆயிரம் மணி நேரம் செயல்படும். இதில் 5 வாட் ஸ்பீக்கரும் உள்ளது.

இதில் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், டைப் ஏ போர்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட் போன்கள் மூலமும் செயல்படுத்த முடியும். இந்த புரொஜெக்டரில் இன்பில்ட் பேட்டரி உள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இது தொடர்ந்து 5 மணி நேரம் செயல்பட உதவும். இது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.35 ஆயிரம்.

Comments