ரீசார்ஜபிள் பேன், மின் விளக்கு

ஜே.ஒய். சூப்பர் நிறுவனம் ரீசார்ஜபிள் பேட்டரியில் செயல்படக் கூடிய பேன் மற்றும் மின் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.799 ஆகும். மின் தடை ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால், இதில் உள்ள பேன் மூலம் காற்று வாங்கியபடியே தூங்கலாம். இதில் உள்ள எல்.இ.டி. விளக்கு மிகவும் பிரகாசமாக ஒளிரும். அத்துடன் அதிக தூரத்துக்கு வெளிச்சத்தை பரப்பும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதில் உள்ள பேன் 15 மணி நேரம் செயல்படும்.

Comments