லெனோவா டேப்லெட் அறிமுகம்

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் லெனோவா முற்றிலும் உலோகத்தாலான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. டேப் எம் 7 மற்றும் டேப் எம் 8 என்ற பெயரில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் டேப் எம் 7 அங்குல திரையைக் கொண்டது. இதில் பில்ட் இன் வசதியாக கிட் மோட் உள்ளது. இதனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் இதை லாக் செய்ய முடியும். ஆடியோ, புத்தகம் உள்ளிட்டவை 44 மொழிகளில் இதில் கிடைக்கிறது. இதை சிறுவர்களிடம் உபயோகிக்கக் கொடுத்தால் அவர்கள் அதிக நேரம் அதைப் பயன்படுத்தாமலிருக்க வசதி உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அதாவது இதைப் பயன்படுத்துவோர் அனைவரது முகங்களையும் பதிவு செய்து அதற்கேற்ப செயல்படும்.

அதாவது சிறுவர்கள் பயன்படுத்தினால் அனுமதி இல்லாவிடில் இது செயல்படாது. ஒருவேளை அனுமதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அணைந்துவிடும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 2 மெகா பிக்ஸெல் பின்பகுதி கேமராவும், முன்பகுதியில் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 236 கிராம் ஆகும். டேப் எம் 8 மாடல் 8 அங்குல திரையைக் கொண்டது.

இதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவக வசதி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதியோடு இது வந்துள்ளது. இதிலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளது.

இதில் 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது தொடர்ந்து 12 மணி நேரம் செயல்பட வழிவகுக்கும். டேப் எம் 7 மாடல் விலை ரூ.7,845 மற்றும் டேப் எம் 8 மாடல் விலை ரூ.11,015 ஆகும்.

Comments