இரட்டை மடிப்பு எல்.ஜி. ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனில் புதிய மாடல்கள், புதிய வசதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் பிரத்யேகமாக இரண்டு மடிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய மாடலுக்கு காப்புரிமை பெற்று விட்டது. இதனால் இந்த மாடல் போன் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டைலஸ் பேனா உள்ளது.

ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இத்தகைய இரட்டை மடிப்பு போனை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான டிசைனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த ரக போனை விரைவில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை மடித்தாலும் அதிக தடிமனாக தெரியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் தகவல்களை எழுத ஸ்டைலஸ் பேனா உள்ளது. மூன்றாக மடக்கினாலும் இதன் தடிமன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவுக்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. விரைவிலேயே இது சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் என்று தெரிகிறது.

3 கேமராவுடன் எல்.ஜி. கியூ 70

எல்.ஜி. நிறுவனம் கியூ 70 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 6.4 அங்குல திரையைக் கொண்டது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. இதை 2 டிரில்லியன் பைட் வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. கண்ணாடியிலான பின்பகுதி, பக்கவாட்டில் உலோக பிரேம் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

இரட்டை சிம் வசதி கூடுதல் சிறப்பாகும். நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 1,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.32,550 ஆகும்.

Comments