ஜியோமியின் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்

பொழுது போக்கு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மிஜியா தற்போது ‘டாக்டர் பெய் க்யூ 3’ சோனிக் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,650. இது மிகவும் சிறியதாக கைக்கு அடக்கமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 45 கிராம் மட்டுமே. இதன் மேல் பகுதி உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது.

இதில் உள்ள சோனிக் மோட்டார் சத்தமின்றி செயல்படுகிறது. 2 நிமிடத்தில் அனைத்து பற்களையும் சுத்தம் செய்துவிடும். இதில் டூபான்ட் டையமண்ட் மிருதுவான பிரஷ் பகுதி உள்ளது. இதன் தடிமன் 0.12 மி.மீ ஆகும். இது வளையும் தன்மை கொண்டது. இதனால் பல் துலக்குவதில் எவ்வித இடையூறும் இருக்காது.

இதில் 3 வகையான செயல்பாட்டு நிலைகள் உள்ளன. கிளன், ஜென்டில் மற்றும் மசாஜ். வாயினுள் உள்ள ஈறு பகுதிகளுக்கு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் பற்கள் உறுதியாக இருக்கும்.

இது நீர்புகா தன்மை கொண்டது.இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் வரை செயல்படும்.

குழந்தைகளுக்கான டூத் பிரஷ்

ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம் குழந்தைகளுக்கான பேட்டரியில் இயங்கும் டூத் பிரஷ்ஷை அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்கான இந்த டூத் பிரஷ்ஷுக்கு ‘சோனிக் டூத் பிரஷ் கே 5’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜியோமி நிதி உதவி அளிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளைக் கவரும் வகையில் இதன் வடிவமைப்பும், பல்லை குத்தாத அளவில் மென்மையான பிரஷ்ஷும் உள்ளது.

இதன் மூடியைக் கழற்றியவுடன் குழந்தைகளுக்கு விருப்பமான கதைகளை இது சொல்லும். அதற்கேற்ப கரடி வடிவிலான ஸ்பீக்கர் உள்ளது. எந்த ஒரு கதையும் 2 நிமிடத்துக்கு மேல் நீடிக்காது. அதற்குள்ளாகவே குழந்தைகளின் பற்கள் சுத்தமாகிவிடும்.

Comments