ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கான வயர்லெஸ் சார்ஜர்

பேசியஸ் நிறுவனம் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கான வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் சீரிஸ் 1 முதலானவற்றை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த வயர்லெஸ் சார்ஜரில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் கச்சிதமாக பொருந்தும். வழக்கமாக ஆப்பிள் வாட்சை சார்ஜ் செய்ய அதில் உள்ள ஸ்டிராப்பை கழற்ற வேண்டும்.

ஆனால் இந்த வயர்லெஸ் சார்ஜரில் அது தேவைப்படாது. வயர்லெஸ் சார்ஜரை உங்கள் லேப்டாப் யு.எஸ்.பி. போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜர் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாது. இதை பாக்கெட்டிலேயே எடுத்துச் செல்ல முடிவது கூடுதல் சிறப்பு. அலுமினியம் அலாய் டிசைன் மற்றும் தோல் ஸ்டிராப்பை கொண்டதாக அழகிய தோற்றத்துடன் இந்த சார்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,600.

Comments