வீடியோ கான்பரன்ஸ் கேமரா

பார்ப்பதற்கு ஆந்தையின் கண்களைப் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த மின்னணு சாதனம் வீடியோ கேமராவாகும். இது வீடியோ அழைப்புகளின்போது மிகவும் உதவியாக இருக்கும். வீடியோ காட்சிகளை பதிவு செய்வது மற்றும் குரல் வரும் திசையில் கேமராவை திருப்புதல் போன்ற பணிகளை இது மிகச் சிறப்பாக செய்யும்.

360 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. இதனுள் மைக், கேமரா மற்றும் ஸ்பீக்கர் ஆகியன உள்ளன. இதை நிறுவுவது எளிது. அலுவலகங்களுக்கிடையே நடைபெறும் வீடியோ அழைப்புகளின்போது இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை சுமார் ரூ.56,800.

Comments