பேட்டரி ஸ்க்ரூ டிரைவர்

இப்போதெல்லாம் சிறிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் கூலியை ஒரு மணி நேர வேலைக்கும் கேட்கின்றனர். இத்தகைய நிலையில் நமக்கு நாமே சில அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்குரூ டிரைவர் இப்போது பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மிஜியா தற்போது விஹா எலெக்ட்ரிக் ஸ்க்ரூ டிரைவரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் கைப்பிடி கச்சிதமாக கைக்குள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுனிப் பகுதியில் வெளிச்சம் தரும் விளக்கும் உள்ளது. இதனால் ஸ்க்ரூடிரைவர் வேலை செய்யும் இடத்தில் வெளிச்சம் பரவி வேலையை எளிதாக்கும். இதன் முனைப்பகுதி காந்த விசை கொண்டது. இதனால் இரும்பு நட்டுகளில் கச்சிதமாக பிடித்து அவற்றை திருக முடியும்.

இதில் லித்தியம் பேட்டரி உள்ளது. இது 1,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஒன்றரை மணி நேரம் போதுமானது.

இதை எளிதாக சார்ஜ் செய்ய வசதியாக யு.எஸ்.பி. போர்ட் வசதி உள்ளது. இதை விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ஜியோமி திட்டமிட்டுள்ளது.

Comments