ஜியோனி எப்9 பிளஸ்

ஜியோனி நிறுவனம் எப்9 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 6.26 அங்குல திரை கொண்டது.

இதில் 1.65 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு பை, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் தலா 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை ஸ்கேனர் உள்ளது. நீண்ட நேர செயல்பாட்டுக்கு வசதியாக 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இரட்டை சிம் கார்டு வசதி கொண்டது.

நினைவகத்தை கூட்டுவதற்கு வசதியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது. நீல வண்ணத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,690.

Comments