இன்பினிக்ஸ் ஹாட் 8

இன்பினிக்ஸ் நிறுவனம் ‘ஹாட் 8’ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது 6.52 அங்குல திரை கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 3 கேமராவைக் கொண்ட இது 13 மெகா பிக்ஸெல் கொண்டது.

முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை சென்சார் உள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. காஸ்மிக் பர்ப்பிள், குயெட்ஸால் சியான் வண்ணத்தில் இதில் வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.6,999. இரட்டை சிம் வசதி கொண்டது. நினைவகத்தை அதிகரிக்க மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி கொண்டது.

Comments