40 மணி நேரம் எரியும் டேபிள் விளக்கு

படிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து தரும் பெற்றோர்கள் இப்போது அதிகம். தடையில்லா மின்சாரம் நகரங்களில் சாத்தியமாகலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்றே கூற முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுதான் நிலை. இத்தகைய சூழலில் மாணவர்கள் இடையூறின்றி படிப்பதற்கு வசதியாக வந்துள்ளது ‘ஈலைட்’. இதில் உள்ள ரீசார்ஜ் செய்யும் பேட்டரி தொடர்ந்து 40 மணி நேரம் செயல்படும். மிகவும் பிரகாசமான ஒளியை அளிக்க வல்லது.

இதில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளதால் மின் நுகர்வு குறைவாக இருக்கும். அதே சமயம் கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது. மடக்கும் வசதியுடன் வந்துள்ள இந்த மேஜை விளக்கை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படிக்கலாம். சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் விளக்குகள் நீண்ட நேரம் எரியும்.

இதில் 3 விதமான நிலைகள் (மோட்) உள்ளன. படிப்பதற்கான நிலையை தேர்வு செய்தால் அது 4 மணி நேரம் எரியும். கம்ப்யூட்டர் மோட் நிலையை தேர்வு செய்தால் 8 மணி நேரம் ஒளி வீசும். லிவிங் மோட் எனப்படும் அறையில் வெளிச்சத்துக்கு மட்டுமான நிலையைத் தேர்வு செய்தால் 40 மணி நேரம் ஒளியை உமிழும். இதன் விலை சுமார் ரூ.865.

Comments