மெட்ஸ் நிறுவனத்தின் 4 கே ஓலெட் டி.வி.

வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ஸ் நிறுவனம் 55 அங்குல 4 கே ஓலெட் டி.வி.யை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முன் பகுதியில் 20 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளதால் டிஜிட்டல் இசையை உணர முடியும். இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைவு. அதாவது இதன் விலை ரூ.99,999 ஆகும்.

வீடியோ பிராசஸிங், இணைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்த முடியும். 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட், புளூடூத் இணைப்பு, வை-பை உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நீல நிறக்கற்றையை பிரித்து தருவதால் இதன் மீது பலரது கவனம் திரும்பியது.

Comments