Skip to main content

Posts

Showing posts from September, 2019

இஸட்.எம்.ஐ. நிறுவனத்தின் அதிவேக சார்ஜர்

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இஸட்.எம்.ஐ. நிறுவனம், ஜியோமி நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமாகும். இந்நிறுவனம் மேக் புக், ஐ-போன், லேப்டாப், டேப்லெட் போன்றவை விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 65 வாட் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான சார்ஜரைப் போன்றதல்ல. இது ஆப்பிள் நிறுவனத்தின் 61 வாட் யு.எஸ்.பி. சி டைப் பவர் சார்ஜரை விட மிகவும் சிறியது. மேலும் இதன் விலையும் குறைவு. அதாவது ஆப்பிள் சார்ஜரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதன் விலையாகும். அதாவது இதன் விலை 12 டாலராகும். இது மடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேக் புக் ஏர், ஐ-பேட் புரோ, ரெட்மி கே 20 புரோ, எம்.ஐ. 9, நின்டின்டோ சுவிட்ச் போன்ற மின்னணு சாதனங்களை விரைவாக சார்ஜ் ஏற்ற உதவும். இதில் 7 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மின் அழுத்த மாறுபாடு, அதிக சூடாவது உள்ளிட்டவற்றிலிருந்து மின்னணு சாதனங்களை காக்கும். இதன் விலை சுமார் ரூ.2,130.

ரீசார்ஜபிள் பேன், மின் விளக்கு

ஜே.ஒய். சூப்பர் நிறுவனம் ரீசார்ஜபிள் பேட்டரியில் செயல்படக் கூடிய பேன் மற்றும் மின் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.799 ஆகும். மின் தடை ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால், இதில் உள்ள பேன் மூலம் காற்று வாங்கியபடியே தூங்கலாம். இதில் உள்ள எல்.இ.டி. விளக்கு மிகவும் பிரகாசமாக ஒளிரும். அத்துடன் அதிக தூரத்துக்கு வெளிச்சத்தை பரப்பும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதில் உள்ள பேன் 15 மணி நேரம் செயல்படும்.

பேனுடன் மடக்கும் லேப்டாப் டேபிள்

நீண்ட நேரம் லேப்டாப்பை செயல்படுத்தினால் அது வெப்பமடையும். அத்தகைய சூழலை தவிர்க்கவே மடக்கும் வகையிலான போல்டபிள் ஜிக்ஸாக் டேபிள் வந்துள்ளது. இதில் டேபிளின் அடிப்பாகத்தில் பேன் உள்ளது. இது லேப்டாப் சூடாவதைத் தடுக்கும். இதன் விலை ரூ.1,399. தேவையான விதத்தில் இதை மடக்கிக் கொள்ளலாம். தேவையான உயரத்துக்கேற்ப இதை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது.

கையடக்க டி.வி.ஆர். வாய்ஸ் ரிகார்டர்

இது மிகவும் பிரத்யேகமான சாதனமாகும். இதில் வீடியோ காட்சிகள் மட்டுமின்றி ஒலியையும் பதிவு செய்யலாம். ஹெச்.டி. எல்.ஜி. டி.வி. டி.வி.ஆர். வாய்ஸ் வீடியோ ரெகார்டர் என்ற பெயரில் வந்துள்ள இந்த சாதனத்தை தனிப்பட்ட உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.840 ஆகும். இதில் 4 ஜி.பி. நினைவக வசதி உள்ளதால் வீடியோ மற்றும் ஆடியோ மிகத் துல்லியமாக பதிவாகும். இதைக் கையாள்வது எளிது. எடை 100 கிராம் மட்டுமே.

ஏசர் எல்.இ.டி. புரொஜெக்டர்

தாய்வானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. சி.250ஐ என்ற பெயரிலான இந்த புரொஜெக்டர் சிலிண்டர் (உருளை) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆட்டோ போர்ட்ரைட் எனும் நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம். இது 30 ஆயிரம் மணி நேரம் செயல்படும். இதில் 5 வாட் ஸ்பீக்கரும் உள்ளது. இதில் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், டைப் ஏ போர்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட் போன்கள் மூலமும் செயல்படுத்த முடியும். இந்த புரொஜெக்டரில் இன்பில்ட் பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது தொடர்ந்து 5 மணி நேரம் செயல்பட உதவும். இது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.35 ஆயிரம்.

ஆல் இன் ஒன் காம்போ கார்டு ரீடர்

ஆர்.டி.எஸ். நிறுவனம் ஆல் இன் ஒன் காம்போ கார்டு ரீடரை அறிமுகம் செய்துள்ளது. இதில் பென் டிரைவ், கேமரா, மொபைல்போன், பர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், நோட்புக் உள்ளிட்ட சாதனங்களை இணைக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.369. இதில் 3 யு.எஸ்.பி. ஹப், அதிவேக யு.எஸ்.பி 2.0 இணைப்பு வசதியுடன் உள்ளது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 480 எம்.பி.பி.எஸ். ஆகும். இதற்கு இரண்டு ஆண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. இது அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் இதை நீங்கள் அலுவலக விஷயமாக செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்ல முடியும். இதை பென் டிரைவ் போலவும் பயன்படுத்த முடியும். நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக் கூடியது.

வீடியோ கான்பரன்ஸ் கேமரா

பார்ப்பதற்கு ஆந்தையின் கண்களைப் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த மின்னணு சாதனம் வீடியோ கேமராவாகும். இது வீடியோ அழைப்புகளின்போது மிகவும் உதவியாக இருக்கும். வீடியோ காட்சிகளை பதிவு செய்வது மற்றும் குரல் வரும் திசையில் கேமராவை திருப்புதல் போன்ற பணிகளை இது மிகச் சிறப்பாக செய்யும். 360 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. இதனுள் மைக், கேமரா மற்றும் ஸ்பீக்கர் ஆகியன உள்ளன. இதை நிறுவுவது எளிது. அலுவலகங்களுக்கிடையே நடைபெறும் வீடியோ அழைப்புகளின்போது இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை சுமார் ரூ.56,800.

‘போலராய்டு மின்ட்’ டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டர்

புகைப்படம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போலராய்டு நிறுவனம் உடனடியாக புகைப்பட பிரிண்ட் போடும் டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டரை அறிமுகம் செய்துள்ளது. கேமராவிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ புகைப்படம் எடுப்பது எளிதான விஷயமாகி வருகிறது. ஆனால் படம் பிடித்த காட்சிகளை நண்பர்களுக்கு பிரதி எடுத்து அளிப்பது சிரமமான விஷயமாகி வருகிறது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக வந்துள்ளதுதான் போலராய்டு நிறுவனத்தின் ‘மின்ட்’ என்ற பெயரிலான டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டர். ஸ்மார்ட்போனில் எடுத்த புகைப்படத்தை இந்த பிரிண்டருக்கு அனுப்பி உடனடியாக படம் எடுக்கலாம். வயர்லெஸ் அடிப்படையில் செயல்படும் இந்த பிரிண்டருக்கு இங்க் தேவையில்லை. மேலும் வழக்கமான பிரிண்டரில் பயன்படுத்தும் விலை உயர்ந்த வண்ணக் கலவையான கேட்ரெஜ்களும் தேவையில்லை. 60 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இதிலிருந்து பிரிண்ட் எடுக்க முடியும். இந்நிறுவனமே போலராய்டு மின்ட் ஆப் (செயலி) ஒன்றையும் செயல்படுத்துகிறது. இதன் மூலம் புகைப்படம் எடுக்கும்போது நீங்கள் புகைப்படக் கலைஞராக இல்லாவிட்டாலும் எடுக்கும் படங்கள் துல்லியமாக இருக்கும்படி பார்த்துக்

ஜியோமியின் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்

பொழுது போக்கு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மிஜியா தற்போது ‘டாக்டர் பெய் க்யூ 3’ சோனிக் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,650. இது மிகவும் சிறியதாக கைக்கு அடக்கமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 45 கிராம் மட்டுமே. இதன் மேல் பகுதி உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது. இதில் உள்ள சோனிக் மோட்டார் சத்தமின்றி செயல்படுகிறது. 2 நிமிடத்தில் அனைத்து பற்களையும் சுத்தம் செய்துவிடும். இதில் டூபான்ட் டையமண்ட் மிருதுவான பிரஷ் பகுதி உள்ளது. இதன் தடிமன் 0.12 மி.மீ ஆகும். இது வளையும் தன்மை கொண்டது. இதனால் பல் துலக்குவதில் எவ்வித இடையூறும் இருக்காது. இதில் 3 வகையான செயல்பாட்டு நிலைகள் உள்ளன. கிளன், ஜென்டில் மற்றும் மசாஜ். வாயினுள் உள்ள ஈறு பகுதிகளுக்கு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் பற்கள் உறுதியாக இருக்கும். இது நீர்புகா தன்மை கொண்டது.இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் வரை

அல்காடெல் டேப்லெட்

அல்காடெல் நிறுவனம் 10 அங்குலத்தில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது ‘3 டி 10’ என்ற பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் குவாட் கோர் மீடியாடெக் எம்.டி.8765 பி பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2 மெகா பிக்ஸெல் முன்புற, பின்புற கேமராக்கள் உள்ளன. இது 4-ஜி வோல்டே இணைப்பு, சிம் கார்டு போடும் வசதியும் உள்ளது. அழைப்புகளை ஹெட் செட் மூலமும் பதிலை ஸ்பீக்கர் மூலமும் அளிக்க முடியும். இதில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் வசதி உள்ளது. இதில் இரட்டை ஸ்பீக்கர் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999. வெளிப்புறம் ஸ்பீக்கர் உள்ள மாடலில் 2,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.14,999. இதில் புளூடூத் கீபோர்டு உள்ள மாடல் விலை சுமார் ரூ. 13,000.

லெனோவா திங்க்புக் லேப்டாப்

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் லெனோவா நிறுவனம் திங்க்புக் வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. திங்க்புக் 14 மற்றும் திங்க்புக் 15 என்ற பெயரில் வந்துள்ள இந்த லேப்டாப்களில் 10-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளது. இத்துடன் இவை ஹை ரெசல்யூஷன் திரையைக் கொண்டவையாக வந்துள்ளன. அலுமினியம் சேஸிஸுடன் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளன. திங்க்‌ஷீல்டு பாதுகாப்பு அம்சம் உள்ள இதில் வை-பை 6 இணைப்பு வசதி உள்ளது. விரல் ரேகை பதிவு மட்டுமின்றி இதில் திங்க்‌ஷட்டர் நுட்பமானது வெப் கேமரா செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவும். இதில் மறைவாக யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஸ்கைப் ஹாட்கீ இருக்கும். திங்க்புக் 14 மாடல் விலை சுமார் ரூ.52 ஆயிரமாகும். திங்க்புக் 15 மாடல் விலை சுமார் ரூ.53 ஆயிரமாகும்.

பிளாபங்க்ட் ஸ்மார்ட் டி.வி.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் ஜெர்மனியின் பிளாபங்க்ட் நிறுவனம் ஸ்மார்ட் டி.வி. தயாரிப்பில் இறங்கியுள்ளது. ஒலி சார்ந்த தயாரிப்பில் முன்னணியில் இருந்துவரும் இந்நிறுவனம் தற்போது ஒளி சார்ந்த டி.வி. தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு அறிந்துள்ள இந்நிறுவனம் குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை களமிறக்கி உள்ளது. ஜென் இஸட் என்ற சீரிஸில் எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல டி.வி.யின் விலை ரூ.9,999, இதற்கு அடுத்த மாடலாக 40 அங்குல டி.வி. ரூ.15,999 விலையில் கிடைக்கிறது. இது தவிர தற்போது 43 அங்குலம் விலை ரூ.19,999) மற்றும் 49 அங்குல விலை ரூ.24,999) ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் ஆகியுள்ள 43 அங்குலம் மற்றும் 49 அங்குல டி.வி.க்கள் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் கொண்டவை. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுபவை. கேபிள் மற்றும் டி.டி.ஹெச். பயன்படுத்துவோருக்கு இது மிகவும் ஏற்றது. இதில் 30 வாட் ஸ்பீக்கர், வை-பை, குவாட் கோர் 1.5 ஜி.ஹெச்.இஸட். பிராசஸர் உள்ளது. நெட்பிளிக்ஸ், யூ-டியூப், ஹாட்ஸ்டார

ஆப்பிள் டி.வி. பிளஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக வீடியோ பதிவுகளை ஸ்மார்ட்போனில் காண ஆப்பிள் டி.வி. பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டர் விளையாட்டு சந்தாவும் உண்டு. இந்த சேனலில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நேரடி நிகழ்ச்சி பதிவு ஆகியன இடம்பெறும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் 40 மொழிகளில் கண்டு ரசிக்க முடியும். இது அக்டோபர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிகிறது. இதற்கு மாதாந்திர சந்தா தொகை ரூ.99.

ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கான வயர்லெஸ் சார்ஜர்

பேசியஸ் நிறுவனம் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கான வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் சீரிஸ் 1 முதலானவற்றை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த வயர்லெஸ் சார்ஜரில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் கச்சிதமாக பொருந்தும். வழக்கமாக ஆப்பிள் வாட்சை சார்ஜ் செய்ய அதில் உள்ள ஸ்டிராப்பை கழற்ற வேண்டும். ஆனால் இந்த வயர்லெஸ் சார்ஜரில் அது தேவைப்படாது. வயர்லெஸ் சார்ஜரை உங்கள் லேப்டாப் யு.எஸ்.பி. போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜர் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாது. இதை பாக்கெட்டிலேயே எடுத்துச் செல்ல முடிவது கூடுதல் சிறப்பு. அலுமினியம் அலாய் டிசைன் மற்றும் தோல் ஸ்டிராப்பை கொண்டதாக அழகிய தோற்றத்துடன் இந்த சார்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,600.

ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 5

ஸ்மார்ட்போனுடன் சீரிஸ் 5 பிரிவில் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்டினா டிஸ்பிளேயைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.40,900. இதில் மேம்பட்ட அம்சமாக இருக்குமிடத்தைக் காட்டும் (லொகேஷன்) வசதி உள்ளது. இதற்கென தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கு செல்கிறோம், எந்த திசையில், எந்த கோணத்தில் செல்கிறோம் என்பதையும் துல்லியமாகக் காட்டிவிடும். டைட்டானியம் மேல் பகுதியைக் கொண்டது. அத்துடன் தங்க நிறத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்பகுதி கொண்ட கடிகாரமும் வந்துள்ளது.

எம்.ஐ9. டர்போ

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் சீனாவின் ஜியோமி நிறுவனம் எம்.ஐ. சார்ஜ் டர்போவை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் 27 வாட் பாஸ்ட் சார்ஜை எம்.ஐ 9. மாடலுக்கு அளிக்கிறது. ஆனால் அதைவிட மேம்பட்டதாக 100 வாட் திறன் கொண்ட சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இது விளங்குகிறது. இப்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5-ஜி சேவை அளிக்கத் தயாராகிவருகின்றன. அதற்கேற்ப மேம்பட்ட தொழில்நுட்பத்திலான சார்ஜரையும் வழங்க முடிவு செய்து ஜியோமி நிறுவனம் இந்த டர்போ வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன். இதில் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

ஐ-போன் 11 , 11 புரோ மற்றும் 11 புரோ மேக்

செப்டம்பர் 10-ந் தேதி ஆப்பிள் ரசிகர்களுக்கு உற்சாகமான நாளாக அமைந்துவிடும். ஆம் ஆண்டுதோறும் இந்த நாளில்தான் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம். வழக்கம்போல இந்த ஆண்டும் கூபர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளைக் காணவும், அதன் செயல்பாடுகளை நேரில் கண்டு ரசிக்கவும் திரண்ட மக்கள் ஏராளம். அதைப் போலவே நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமளிக்காத வகையில் ஆப்பிள் ஐ-போன் 11 மாடலை அறிமுகப்படுத்தியது. அத்துடன் ஐ-போன் 11 புரோ மற்றும் ஐ-போன் 11 புரோ மேக் ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ-போன் 11 மாடலில் 3 கேமராக்கள் உள்ளது சிறப்பம்சமாகும். இதில் ஏ13 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முந்தைய ஐ-போன்களைக் காட்டிலும் இதன் செயல்பாடு 20 சதவீதம் அதிகமாக இருக்கும். 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன. இவை குறைவான வெளிச்சத்திலும் துல்லியமாக படம் எடுக்க உதவும். அத்துடன் 4 மீட்டர் ஆழமான நீரில் 30 நிமிடம் வரை கிடந்தால

7-வது தலைமுறை ஐ-பேட்

இம்முறை 10.2 அங்குல டேப்லெட்டையும் (ஐ-பேட்) இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.29,900. இந்நிறுவனத்தின் 7-வது தலைமுறை ஐ-பேட் ஆகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இது சற்று அகலமானது. இதில் ஸ்மார்ட் கீபோர்டு வசதி, ஆப்பிள் பென்சில் உதவி, முன்னேறிய கேமராக்கள் மற்றும் உணர் கருவிகள் ஆகியன உள்ளன. இதில் முகப்புப் பக்கத்தில் பல்வேறு செயலிகள் இருக்கும். ஆப்பிள் பென்சில் உதவியோடு விரைவாக செய்திகளை பதிவு செய்து அனுப்பமுடியும். இது 32 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்பகுதியில் 1.2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் இரட்டை மைக்ரோபோன் உள்ளது. இதனால் ஒன்று ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியும். மற்றொன்று ஸ்பீக்கராக செயல்படும். இதன் எடை அரை கிலோவுக்கும் (483 கி.கி) குறைவானது. இது முழுவதுமாக சார்ஜ் ஆக 10 மணி நேரம் தேவைப்படும். இது சில்வர், ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். 32 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவக வசதி மாடல் விலை ரூ.29,900, 32 ஜி.பி. வை-பை இணைப்பு கொண்ட மாடல் விலை ரூ. 37,900, 128 ஜி.பி. மற்றும

இரட்டை மடிப்பு எல்.ஜி. ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனில் புதிய மாடல்கள், புதிய வசதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் பிரத்யேகமாக இரண்டு மடிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய மாடலுக்கு காப்புரிமை பெற்று விட்டது. இதனால் இந்த மாடல் போன் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டைலஸ் பேனா உள்ளது. ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இத்தகைய இரட்டை மடிப்பு போனை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான டிசைனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த ரக போனை விரைவில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை மடித்தாலும் அதிக தடிமனாக தெரியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகவல்களை எழுத ஸ்டைலஸ் பேனா உள்ளது. மூன்றாக மடக்கினாலும் இதன் தடிமன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவுக்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. விரைவ

ரெட்மி நோட் 8 புரோ

ஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுகளில் ரெட்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரெட்மி நோட் 8 புரோ மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. பிராசஸரை கொண்டது. இதில் லிக்விட் கூல் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்க உதவுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் விளையாடினாலும் ஸ்மார்ட்போன் சூடாகாது. செயல் திறனும் குறையாது. இதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு பிக்ஸெல் கொண்ட கேமராவை கொண்ட மாடலாக இது விளங்குகிறது. கேமரா சென்சார் நுட்பமானது சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது ஐஸோஸெல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் 6.4 கோடி பிக்ஸெல் உள்ளது. இந்த கேமரா மூலம் 3.26 மீட்டர் உயரமுள்ள புகைப்படம் எடுக்க முடியும். இதில் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் (மினரல் கிரோ, பேர்ல் ஒயிட், பாரஸ்ட் கிரீன்) வந்துள்

ஜியோனி எப்9 பிளஸ்

ஜியோனி நிறுவனம் எப்9 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 6.26 அங்குல திரை கொண்டது. இதில் 1.65 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு பை, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் தலா 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை ஸ்கேனர் உள்ளது. நீண்ட நேர செயல்பாட்டுக்கு வசதியாக 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இரட்டை சிம் கார்டு வசதி கொண்டது. நினைவகத்தை கூட்டுவதற்கு வசதியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது. நீல வண்ணத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,690.

இன்பினிக்ஸ் ஹாட் 8

இன்பினிக்ஸ் நிறுவனம் ‘ஹாட் 8’ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது 6.52 அங்குல திரை கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 3 கேமராவைக் கொண்ட இது 13 மெகா பிக்ஸெல் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரல் ரேகை சென்சார் உள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. காஸ்மிக் பர்ப்பிள், குயெட்ஸால் சியான் வண்ணத்தில் இதில் வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.6,999. இரட்டை சிம் வசதி கொண்டது. நினைவகத்தை அதிகரிக்க மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி கொண்டது.

லெனோவா டேப்லெட் அறிமுகம்

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் லெனோவா முற்றிலும் உலோகத்தாலான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. டேப் எம் 7 மற்றும் டேப் எம் 8 என்ற பெயரில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் டேப் எம் 7 அங்குல திரையைக் கொண்டது. இதில் பில்ட் இன் வசதியாக கிட் மோட் உள்ளது. இதனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் இதை லாக் செய்ய முடியும். ஆடியோ, புத்தகம் உள்ளிட்டவை 44 மொழிகளில் இதில் கிடைக்கிறது. இதை சிறுவர்களிடம் உபயோகிக்கக் கொடுத்தால் அவர்கள் அதிக நேரம் அதைப் பயன்படுத்தாமலிருக்க வசதி உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அதாவது இதைப் பயன்படுத்துவோர் அனைவரது முகங்களையும் பதிவு செய்து அதற்கேற்ப செயல்படும். அதாவது சிறுவர்கள் பயன்படுத்தினால் அனுமதி இல்லாவிடில் இது செயல்படாது. ஒருவேளை அனுமதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அணைந்துவிடும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 2 மெகா பிக்ஸெல் பின்பகுதி கேமராவும், முன்பகுதியில் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 236 கிராம் ஆகும். டேப் எம் 8 மாடல் 8 அங்குல திரையைக் கொண்டது. இதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் பிராசஸர்

எல்.ஜி. 8கே ஓலெட் டி.வி.

ஏறக்குறைய ஓராண்டாக அறிவித்து வந்த 8கே ஓலெட் டி.வி.யை கொரியாவின் எல்.ஜி. நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 42 ஆயிரம் டாலராகும் (சுமார் ரூ.30.25 லட்சம்). 88 அங்குலம் கொண்டதாக இந்த ஸ்மார்ட் டி.வி. வெளிவந்துள்ளது. 8 கே தொழில்நுட்பம் என்றால் இதில் படங்கள் மிகவும் துல்லியமாக தெரியும் என்பதுதான். அதாவது 7,680 X 4,320 பிக்ஸெல் என்ற அளவுக்கு மிகவும் நுட்பமான விஷயங்கள் இதில் மிகத் துல்லியமாகத் தெரியும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 4கே ஸ்மார்ட் டி.வி.க்களை விட இது 400 சதவீதம் பிக்ஸெல் அதிகமாகும். சாதாரண ஹெச்.டி. டி.வி.யைக் காட்டிலும் இது 16 மடங்கு துல்லியமான படக்காட்சிகளை காண்பிக்கும். இதில் எல்.ஜி.யின் 90-வது தலைமுறை 8கே பிராசஸர் உள்ளது. அத்துடன் ஹெச்.டி.ஆர். டால்பி விஷன், ஆப்பிள் ஏர் பிளே 2 ஹோம்கிட் ஆகியன துணையாக இருக்கும். இதில் ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்ஸ் உள்ளது. தற்போது சந்தையில் 88 அங்குல டி.வி. விற்பனைக்கு வந்துள்ளது எல்.ஜி. பிராண்டில் மட்டுமே. சோனி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் 8கே தொழில்நுட்பத்தில் 98 அங்குல டி.வி.யைத்தான் அறிமுகப்படுத்தி இருந்தன. ஆனால் எல்

ஜியோமியின் ‘ரெட் மி’ டி.வி.

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜியோமி நிறுவனம் ‘ரெட் மி’ என்ற பெயரில் ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டி.வி. சீனாவில் அறிமுகமாகியுள்ளது. பிரீமியம் மாடலாக 70 அங்குலத்தில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வெளிவந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 4 கே யு.ஹெச்.டி. பேனல் கொண்டது. ஒன் பிளஸ் நிறுவனம் டி.வி. தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதற்கு முன்பாக தங்களது தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜியோமி நிறுவனம் டி.வி.யை சந்தைப்படுத்தியுள்ளது. இது விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும். விலை குறைவாக நிர்ணயித்து சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெட்ஸ் நிறுவனத்தின் 4 கே ஓலெட் டி.வி.

வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ஸ் நிறுவனம் 55 அங்குல 4 கே ஓலெட் டி.வி.யை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முன் பகுதியில் 20 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளதால் டிஜிட்டல் இசையை உணர முடியும். இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைவு. அதாவது இதன் விலை ரூ.99,999 ஆகும். வீடியோ பிராசஸிங், இணைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்த முடியும். 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட், புளூடூத் இணைப்பு, வை-பை உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. கண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நீல நிறக்கற்றையை பிரித்து தருவதால் இதன் மீது பலரது கவனம் திரும்பியது.

ஏ.எஸ்.யு.எஸ். விவோபுக் லேப்டாப்

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் மூன்று லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. விவோபுக் 14எக்ஸ்403, விவோபுக் 14எக்ஸ்409, விவோபுக் 15எக்ஸ்509 ஆகிய பெயரில் இவை வெளியாகியுள்ளன. இதில் விவோபுக் 15 மாடலானது நான்கு முனையும் இல்லாத நானோ எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டது. இத்தகைய நுட்பம் கொண்ட லேப்டாப்கள் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். விவோபுக் 14எக்ஸ்403 14 அங்குல திரையைக் கொண்டது. இதில் 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 8565 யு சி.பி.யு., ஒருங்கிணைந்த இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக் கார்டு உள்ளது. 4 ஜி.பி. ரேம் கொண்ட இதை 16 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது. நினைவக வசதி 1 டி.பி. வரையாகும். வை-பை இணைப்பு, புளூடூத், யு.எஸ்.பி., ஹெச்.டி.எம்.ஐ. கார்டு வசதி, கார்டு ரீடர் உள்ளிட்டவற்றுடன் விரல் ரேகை உணர்ந்து செயல்படும் வசதியும் இதில் உள்ளது. 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹெச்.டி. வெப் கேமரா, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கீ போர்டு உள்ளது. இதன் எடை ஒரு கிலோ 300 கிராம். இதன் விலை ரூ.54,990. விவோபுக் 14 எக்ஸ் 409

சோலார் ஸ்மார்ட் வாட்ச்

இது முழுக்க முழுக்க ஸ்மார்ட் கருவிகளின் உலகம். புதுப்புது கண்டுபிடிப்புகள் தினசரி அணிவகுத்து வந்து கொண்டேயிருக்கின்றன. அவை அனைத்துமே நமது தேவைகளை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில்இருக்கின்றது. அந்த வகையில் கார்மின் நிறுவனம் சூரிய ஆற்றலில் செயல்படும் (சோலார்) ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இவை பெனிக்ஸ் 6 சீரிஸ் என்ற பெயரில் வந்துள்ளன. இதில் குறிப்பாக பெனிக்ஸ் 6 எக்ஸ் மாடல் முழுக்க முழுக்க சூரிய மின்னாற்றலில் செயல்படக்கூடியது. இந்த மாடல் கடிகாரங்களில் மேல் பகுதியில் சூரிய ஒளியிலிருந்து மின் சக்தியை சேமிக்கும் செல்கள் உள்ளன. இதிலிருந்து மின்சாரம் சேமிக்கப்பட்டு 3 நாட்களுக்கு கைக்கடிகாரம் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும். இந்த ஸ்மார்ட் வாட்சில் 1.4 அங்குல டிஸ்பிளே திரை உள்ளது. சூரிய ஆற்றலை உள்ளிழுத்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கும் பணியை செய்தாலும், இதன் திரை கண்கூசும் அளவுக்கு இருக்காது. வழக்கமான கடிகாரங்களைப் போலவே இதிலும் மிகவும் தெளிவாக நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும். நேவிகேஷன் வசதி, ஜி.பி.எஸ்., குளுநாஸ், கலிலியோ போன்ற வசதிகள் உள்ளன. இது நீங்கள்

ஸ்மார்ட் கடிகாரம்

சீனாவைச் சேர்ந்த உமிடி கி யுவேக் நிறுவனம் ஸ்பீக்கருடன் கூடிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் 5.0-ல் செயல்படும் முதலாவது ஸ்பீக்கர் இதுவாகும். அத்துடன் அலார கடிகாரம் இருப்பது இதன் சிறப்பு. குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்யும் உமிடிகி, தற்போது ஸ்மார்ட் கடிகாரத்துடன் கூடிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இது 5.0 புளூடூத் இணைப்பைக் கொண்டிருப்பதால், இதை செயல்படுத்த பிரத்யேக செயலி (ஆப்) எதுவும் தேவையில்லை. கடிகாரம் காட்டுவதோடு, ஸ்மார்ட்போனில் ரம்மியமான இசையைக் கேட்டு மகிழலாம். அத்துடன் இரவில் ஒளிரும் வகையில் இதில் உள்ளது.

சுகர் பிரீ ரைஸ் குக்கர்

பொதுவாகவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அரிசி உணவு மிக முக்கியமான உணவாக ருசிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் மக்களின் பிரதான உணவாக அரிசி உள்ளது. ஆனால் சமீப காலமாக அரிசி உணவால் நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாகவும் அரிசி உள்ளது. இதனாலேயே பலரும் மாற்று உணவுக்கு மாற முடியாமல் அவதிப்படுகின்றனர். அரிசி உணவை சமைக்கும் போது அதில் அதிக அளவிலான மாவுச்சத்து எனப்படும் ஸ்டார்ச் தங்கிவிடுகிறது. இதுதான் அனைத்து விதமான நோய்களுக்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதைப் போக்கும் விதமாக வந்துள்ளதுதான் நவீன மின்சார குக்கர் கிரைன்ஸ். பொதுவாக கிரைன்ஸ் என்றால் சிறு தானியங்கள் என்றும் பொருள்படும். ஆனால் இந்த ‘கிரைன்ஸ்’ எனப்படும் குக்கர் அரிசி உணவில் அதிகப்படியான மாவுச்சத்துகளை நீக்கி, நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது அரிசியை நான்கு வித வடிவங்களில் சாதமாக வடிக்கிறது. முதலாவதாக இதில் உள்ள தெர்மோ உணர் கருவி அரிசியில்

செயற்கை நுண்ணறிவு கொண்ட எல்.ஜி. வாஷிங் மெஷின்

மின்னணு சாதனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதில் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் பயனாக வாடிக்கையாளராகிய பொதுமக்களுக்கு அதிநவீன நுட்பங்கள் கொண்ட தயாரிப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் எல்.ஜி. நிறுவனத்தின் சமீபத்திய வரவுதான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் செயல்படும் வாஷிங் மெஷினாகும். திங்க்கியூ ஏ.ஐ. வாஷிங் மெஷின் பிரன்ட் லோடிங் தன்மையிலானது. இது இயந்திரத்தில் போடப்படும் துணியின் தன்மையைப் பொருத்து அது துவைக்கும் நிலையை மாற்றும். அதாவது கடினமான பெட்ஷீட், போர்வை போன்றவை துவைக்க போட்டால் அது கடினமாக சுற்றும், தேவைப்பட்டால் அழுக்கை நீக்க சுடு நீரை பீய்ச்சும். அதேசமயம் மென்மையான பட்டு துணிகளை போட்டால் அதற்கேற்ப இதன் துவைக்கும் நிலைமாறும். இதை விரைவாகவும், வேகமாகவும் செய்வதற்கு உதவுகிறது செயற்கை நுண்ணறிவு. இதற்காக இந்த நுண்ணறிவு திறனில் 20 ஆயிரம் துணி வகைகள் பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய நுட்பம் இருப்பதால் துணிகள் பாதுகாப்பாக துவைக்கிறது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதில் துணி துவைக்கும் அளவு 18 சதவீதம் மேம்பட்டத

40 மணி நேரம் எரியும் டேபிள் விளக்கு

படிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து தரும் பெற்றோர்கள் இப்போது அதிகம். தடையில்லா மின்சாரம் நகரங்களில் சாத்தியமாகலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்றே கூற முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுதான் நிலை. இத்தகைய சூழலில் மாணவர்கள் இடையூறின்றி படிப்பதற்கு வசதியாக வந்துள்ளது ‘ஈலைட்’. இதில் உள்ள ரீசார்ஜ் செய்யும் பேட்டரி தொடர்ந்து 40 மணி நேரம் செயல்படும். மிகவும் பிரகாசமான ஒளியை அளிக்க வல்லது. இதில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளதால் மின் நுகர்வு குறைவாக இருக்கும். அதே சமயம் கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது. மடக்கும் வசதியுடன் வந்துள்ள இந்த மேஜை விளக்கை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படிக்கலாம். சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் விளக்குகள் நீண்ட நேரம் எரியும். இதில் 3 விதமான நிலைகள் (மோட்) உள்ளன. படிப்பதற்கான நிலையை தேர்வு செய்தால் அது 4 மணி நேரம் எரியும். கம்ப்யூட்டர் மோட் நிலையை தேர்வு செய்தால் 8 மணி நேரம் ஒளி வீசும். லிவிங் மோட் எனப்

சாம்சங் ஸ்மார்ட் ஸ்பீக்கர்

கொரிய நிறுவனமான சாம்சங் விரைவிலேயே ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்து உள்ளது. இதற்கு ‘கேலக்ஸி ஹோம் மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கூகுள் ஹோம்மினி மற்றும் அமேசான் எக்கோ டாட் ஆகிய கருவிகளுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர் அனைவரும் இந்த ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்கு ஏற்ப தங்கள் ஸ்மார்ட்போனில் மாற்றங்கள் செய்து கொள்ள நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பீட்டா புரோகிராம் எனப்படும் ஸ்மார்ட்போன் மேம்பாட்டு நடவடிக்கையை பிற நாடுகளில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களுக்கு இந்நிறுவனம் அளிக்குமா என்பது பின்னரே தெரியும். இதன் செயல்பாட்டுக்கென பிரத்யேக இயங்குதளத்தை உருவாக்கி அதை தனது ஸ்மார்ட்போன் வாயிலாக சோதித்து பார்த்து வருகிறது. இதற்கென பிரத்யேக மென்பொருளை (சாப்ட்வேர்) இந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பீக்கர் ஏற்கனவே பிக்ஸ் பி தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும். இந்த ஸ்பீக்கரில் ஏ.கே.ஜி. பிராண்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குரல் வழி மூலம் பணிகளை செயல்படுத்த வசதியாக

ஜியோமியின் ‘பிளாக் ஷார்க்’

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 வாட் விரைவான சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்நிறுவனத்தின் பிளாக் ஷார்க் பிராண்டானது கேமிங் ஸ்மார்ட்போன் வரிசையில் மிகவும் பிரபலமானது. வீடியோ கேம் விளையாடுவோருக்கு அவர்கள் பயன்படுத்தும் கேட்ஜெட்கள் நீண்ட நேரம் எவ்வித சிரமமும் இன்றி செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பிராண்ட் இப்போது பவர் பேங்க்கை வெளியிட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது. மிகவும் கரடு முரடான தோற்றம் கொண்டதாக, அதாவது எத்தகைய சூழலையும் தாக்குப்பிடித்து செயல்படக் கூடிய தோற்றம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மேல் பகுதி ரப்பர் மற்றும் உலோக பாகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலோக பாகம் சில்வர் மேல்பூச்சு கொண்டதாக உள்ளது. இதில் உள்ள பேட்டரியின் அளவைக்காட்டுவதற்காக இதில் பச்சை விளக்கு உள்ளது. அதேபோல இதை சார்ஜ் செய்தால் அதை உணர்த்துவதற்காக எல்.இ.டி. விளக்கு ஒளிரும். இதில் 18 வாட் பாஸ்ட் சார்ஜ் வசதி இருப்பதால் இதன

பேட்டரி ஸ்க்ரூ டிரைவர்

இப்போதெல்லாம் சிறிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் கூலியை ஒரு மணி நேர வேலைக்கும் கேட்கின்றனர். இத்தகைய நிலையில் நமக்கு நாமே சில அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்குரூ டிரைவர் இப்போது பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மிஜியா தற்போது விஹா எலெக்ட்ரிக் ஸ்க்ரூ டிரைவரை அறிமுகம் செய்துள்ளது. இதன் கைப்பிடி கச்சிதமாக கைக்குள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுனிப் பகுதியில் வெளிச்சம் தரும் விளக்கும் உள்ளது. இதனால் ஸ்க்ரூடிரைவர் வேலை செய்யும் இடத்தில் வெளிச்சம் பரவி வேலையை எளிதாக்கும். இதன் முனைப்பகுதி காந்த விசை கொண்டது. இதனால் இரும்பு நட்டுகளில் கச்சிதமாக பிடித்து அவற்றை திருக முடியும். இதில் லித்தியம் பேட்டரி உள்ளது. இது 1,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஒன்றரை மணி நேரம் போதுமானது. இதை எளிதாக சார்ஜ் செய்ய வசதியாக யு.எஸ்.பி. ப