உலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்

மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.

உலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments