தொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...

டிவி வாங்க நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பாகங்கள் இன்னும் தெளிவாகவும், ஆழமாகவும், துல்லியமாகவும் தெரிகின்றன. இத்தொழில்நுட்பத்தில் 4கே ரெசல்யூசனுடன் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது திரையரங்கில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகின்றன. 3டி தொழில்நுட்பத்துடன் இருக்கும் டி.வி.க்களை யோசனையுடன் வாங்கிவிட்டால் மூன்று பரிணாமங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களைத் தத்ரூபமாகப் பார்க்கலாம். அதே போல் ஸ்மார்ட் டி.வி.க்களில் நம்முடைய லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வகை டி.வி.க்களை இணையதளத்துடன் இணைத்து கொண்டு நம்முடைய அலுவலக வேலைகள், யூடியூப் பார்ப்பது, கூகுல் சர்ச் என்று அனைத்தையும் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் போன், டேப்ளட்ஸ் மற்றும் வேறு எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஸ்மார்ட் ஷேரிங் அப்ளிகேஷன் மூலம் டி.வி.யுடன் இணைத்துக் கொண்டு பெரிய திரையிலேயே வீடியோஸ், புகைப்படம், திரைப்படம் என அனைத்தையும் காணலாம். ஐம்பது ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டி.வி. வினாடிக்கு இருநூற்று நாற்பது ஹெர்ட்ஸ் எண்ணிக்கையில் மிகத்துல்லியமான மங்கலற்ற படங்களை காட்டுகின்றன. டி.வி. திரைகளின் அளவுகள் 32 இன்ச், 45 இன்ச், 49 இன்ச், 55 இன்ச், 50 இன்ச், 65 இன்ச் என பல்வேறு டி.வி. நிறுவனங்களில் சற்றே மாறுபடுகின்றன. மேலும், ஒவ்வொரு டி.வி. நிறுவனமும் புதுப்புது தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர போட்டி போடுகின்றனர். டி.வி. திரையானது வளைந்து, ஒருமுறையில் எங்கிருந்து டி.வி.யை பார்த்தாலும் நேராக இருந்து பார்ப்பதைப் போன்று தொழில்நுட்பமும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. தொலைக்காட்சியில் வரும் ஒலி, ஒளியானது மிகத்துல்லியமாகவும், பிரகாசமாகவும் இருப்பதைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் மின் நுகர்வு மற்றும் மின் செலவு சேமிப்பாகும். நம் குரல் மற்றும் முகத்தை அடையாளம் கண்டு கொண்டு செயல்படக்கூடிய தொலைக்காட்சி பெட்டிகள் சந்தையில் வந்து விட்டாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறை டி.வி. பார்த்து விட்டு அணைக்கும் பொழுதும் டி.வி. ஸ்விட்சையும் அணைக்க வேண்டும். உகந்த பிரகாசத்துடன் டி.வி.திரையில் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதன் மூலம் கண்களில் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம். டி.வி.யிலிருந்து அதிக வெப்பமானது வெளிப்படுவதால், டி.வி. அதிகம் இடுக்கலான இடங்களில் அல்லது மிகவும் சுவருடன் ஒட்டி வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும். டி.வி. திரைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் கூர்மையான பொருள்களை டி.வி. திரைகளுக்கு அருகில் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. டி.வி. திரையில் ஏற்படும் சிறு கீறல் கூட நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

Comments