சோலார் பிளாஷ் லைட்

பலவிதமான பணிகளுக்கு பயன்படும் வகையிலான டார்ச் லைட் இப்போது ஹாலோ எக்ஸ்.டி. என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான பேட்டரி டார்ச் லைட் போல அல்லாமல் இது சூரிய மின்னாற்றலில் செயல்படும். இதன் மேல் பகுதி சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 வாட் லூமென் எல்.இ.டி. விளக்கு உள்ளது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க ஒரு பவர் பேங்க் இதில் உள்ளது. நீர் புகா தன்மை (வாட்டர் புரூப்) கொண்டதால் இதை எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும். ஹாலோ எக்ஸ்.டி. ரீசார்ஜ் செய்யக் கூடியது. இதற்கான மின்னாற்றல் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. இதனால் இதற்கு பேட்டரியோ அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது. பேட்டரியின் மேல் பகுதியில் கிளாஸ் பிரேக்கர் உள்ளது. அவசர காலத்தில் காரில் சிக்கிக் கொண்டால் கண்ணாடியை உடைக்க இதைப்பயன்படுத்த முடியும். அதேபோல இதன் பக்கவாட்டில் உள்ள கட்டர், டிரைவர் சீட் பெல்ட்டை அறுத்து வெளியேறுவதற்கு உதவி புரியும்.

அதேபோல இதில் யு.எஸ்.பி. கேபிள் உள்ளது. இதனால் வேறு சில கருவிகளையும் அவசரத்துக்கு இதன் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். போன், ரேடியோ, எல்.இ.டி. விளக்கு, சிறிய பேன், டேப்லெட், ஜி.பி.எஸ். கருவிகள், மியூசிக் பிளேயர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மலையேற்றம், காடுகளில் சாகச பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. ஆபத்து காலத்தில் தகவல் தெரிவிக்க இதில் சிவப்பு விளக்கு எச்சரிக்கை வசதியும் உள்ளது.

Comments