பிலிப்ஸின் நவீன பல்பு

வீ டுகள், அலுவலகங்களுக்கு ஒளியூட்டியதில் பிலிப்ஸ் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. மருத்துவம் சார்ந்த கருவிகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது ‘சோம்நியோ’ என்ற பெயரில் புதிய ரக பல்பை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரவில் தூங்குவதற்கும், பகலில் கண் விழிப்பதற்கும் உரிய வெளிச்சத்தை இது வீசக் கூடியது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இதில் வெளிப்படும் வெளிச்சம், தூக்கத்தை மேலும் தூண்டுவதாக அமைந்து உள்ளது. அதேபோல விடியற்காலையில் தூங்கி கண்விழிக்கும்போது ரம்மியமான வெளிச்சத்தையும் இது ஒளிரக் கூடியது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது வீசும் ஒளிக்கற்றைகளை இது வீசும். அதேபோல மிகவும் இனிமையான இசையும் இதிலிருந்து வெளிப்படும். ஸ்மார்ட்போனை யு.எஸ்.பி. மூலம் இதிலிருந்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Comments