ஜியோமியின் டிரிம்மர்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜியோமி நிறுவனம் எம்.ஐ. பியர்டு டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிரிம்மரில் உள்ள பிளேடு தானாகவே முனைகளை கூர் செய்து கொள்ளும் வசதி உடையது. ஐ.பி.எக்ஸ்7 என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலின் விலை ரூ.1,200. எம்.ஐ. இணையதளத்தில் இதற்கு ஆர்டர் செய்யலாம். பார்ப்பதற்கே மிகவும் அழகிய தோற்றத்துடன் மெல்லியதான வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவில் சுழலும் வகையில் இதன் பிளேடுகள் உள்ளன. இதனால் மிருதுவான ஷேவிங்கை இது உறுதி செய்கிறது. அத்துடன் இந்த பிளேடுகள் தானாகவே முனைகளை கூர் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது என்று இந் நிறுவனம் தெரிவித்துள்ளது. உங்களின் தேவைக்கேற்ப டிரிம் செய்துகொள்ளும் வசதி இதில் உள்ளது. 0.5 மி.மீ. முதல் 10 மி.மீ. வரையில் தாடியை டிரிம் செய்யலாம். மற்றொரு செட்டிங்கில் 10.5 மி.மீ முதல் 20 மி.மீ. வரையான தாடியை டிரிம் செய்யலாம். டிரிம்மர் பிளேடின் சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. இந்த பிளேடு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரம் முறை சுழலக்கூடியது. 5 வோல்ட் அடாப்டருடன் பேட்டரி தீருவதை உணர்த்தும் எல்.இ.டி. இண்டிகேட்டருடன் இது வந்துள்ளது. 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், இதை ஒன்றரை மணி நேரம் செயல்படுத்தலாம். 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 நிமிடம் வரை இதை உபயோகப்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்ட்லெஸ் மற்றும் மின்வயர் இணைப்பு கொண்டதாக இரு மாடல்களில் வந்துள்ளது.

Comments